சத்தியத்தை மீறாத அண்ணல் காந்தியடிகள் 

தேசத் தந்தை காந்தியடிகள், எப்போதும் உண்மை, அஹிம்சையை பற்றியே போதிப்பார். வெறும் போதனையோடு மட்டும் நின்றுவிடாது, அதை தன் வாழ்நாளில் கடைபிடித்தும் காட்டினார்.
 | 

சத்தியத்தை மீறாத அண்ணல் காந்தியடிகள் 

தேசத் தந்தை காந்தியடிகள், எப்போதும் உண்மை, அஹிம்சையை பற்றியே போதிப்பார். வெறும் போதனையோடு மட்டும் நின்றுவிடாது, அதை தன் வாழ்நாளில் கடைபிடித்தும் காட்டினார்.

உண்மைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை எனக் கூறும் அவர், இளமை பருவம் தொட்டு, இறுதி காலம் வரை தன் வாழ்நாளில் நடந்த அத்தனை விஷயங்களையும், சத்திய சோதனை என்ற சுயசரிதத்தில் எழுதியுள்ளார். 

காந்தி அடிகள், கொடுத்த வாக்குறுதியை மீறாதவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அவரின் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல், அயல்நாடு சென்று பேரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய நிகழ்வை கூறலாம். 

குஜராத்தில் கல்வி பயின்ற காந்திஜி, வெளிநாடு சென்று பேரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற நிலை வந்த போது, அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப,காந்தியின் அன்னை மறுத்துவிட்டார்.

அயல்நாட்டிற்கு சென்றால், கெட்ட பழக்க வழக்கங்கள் வந்துவிடும் என பயந்தார். அப்போது, காந்தியடிகள், தன் தாயிடம் மூன்று சத்தியங்கள் செய்து கொடுத்தார். 

அயல்நாட்டிற்கு சென்று மது அருந்த மாட்டேன், புலால் உண்ண மாட்டேன் மற்றும் பிற பெண்களை தாய், சகோதரிக்கு சமமாக பாவிப்பேன் என சத்தியம் செய்தார். அதன் பிறகே, அவர் வெளிநாடு செல்ல அவரின் தாய் சம்மதித்தார்.

தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை சிறிதும் மீறாமல், காந்தியடிகளும், பேரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். காந்தியடிகளின் வாக்கு தவறாமைக்கு,  இது போன்ற, இன்னும் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP