தீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு

தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தி ராணுவத்தில் இணைந்தவர் லேன்ஸ் நாயக் நாசிர் அகமது வாணி. இவர் தீவிரவாதத்தை கைவிட்டு மனம் திருந்தி ராணுவத்திடம் சரணடைந்தார்.
 | 

தீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு

தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தி ராணுவத்தில் இணைந்தவர் லேன்ஸ் நாயக் நாசிர் அகமது வாணி. இவர் தனது தீவிரவாதத்தைக் கைவிட்டு, மனம் திருந்தி ராணுவத்திடம் சரணடைந்தார். குல்காம் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

2004 ஆண்டு ராணுவத்தில் இணைந்த இவர் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரால் பல தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 34வது ராஷ்டிரிய ரைபிள் படையில் இருந்த அவர் 2007 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.

காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் நாசிர் அகமது வாணி தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பதன்காண்ட் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதின் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்து. இதையடுத்து நாசிர் அகமது வாணி உள்ள வீரர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்டமூடித்தனமாக இந்திய வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். நீண்ட நேர‌ம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதி ஒருவன் மறைந்திருந்த வீட்டை நாசிர் அகமது வாணி கண்டுபிடித்தார். அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த நாசிர் அகமது வாணி மறைந்திருந்த தீவிரவாதியிடம் சரணடையமாறு கூறினார்.

தீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு

அதற்கு செவி சாய்க்காத தீவிரவாதி வாணி மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் குண்டு காயமடைந்த வாணி தீவிரவாதியை சுட்டுக்கொன்றார். படுகாயமடைந்த நாசிர் அகமது வாணி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் வீரமரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடந்தது. அதில் இந்திய ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

தீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு

அப்போது அவர் நிசாரின் தந்தையை ஆரத் தழுவி ஆறுதல் கூறியிருக்கிறார். அந்தப் புகைப்படம் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தனியாக இல்லை என்று எழுதப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை விட்டு ராணுவத்தில் இணைந்த வீரரின் வீர வரலாறு

தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய நாசிர் அகமது வாணிக்கு இந்திய ராணுவத்தின் உயரிய விருதான அசோக் சக்ரா விருது இந்த ஆண்டு குடியரசு தினத்தில் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP