தேசத் துரோகத்தை ஊக்குவிக்கிறதா இந்த தேர்தல் அறிக்கை...!

இவர்களது தேர்தல் அறிக்கைகளில் இந்தியப் பிரிவினைக்கான ஏற்பாடாக மட்டுமே இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் 72 ஆண்டுகளில் ஏற்படாத அவசியமாக இந்தச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏன் வந்தது? யாருக்கான தேர்தல் அறிக்கை இது?
 | 

தேசத் துரோகத்தை ஊக்குவிக்கிறதா இந்த தேர்தல் அறிக்கை...!

நாங்கள் வெற்றி பெற்றால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவான 124A வை நாங்கள் சட்ட புத்தகத்திலிருந்து நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

முதலில் இந்தச் சட்டப் பிரிவு என்னவென்று பார்த்து விடுவோம்.

ஒரு நல்ல குடும்பம் என்றால் ஒருவித கட்டுப்பாட்டுடன் இருக்கணும். இருக்கும். கட்டுப்பாடு இல்லாத எதுவும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க முடியாது.

பக்கத்து வீட்டுக்காரன் வந்து நம் வீட்டுப் பெண்களைத் திட்டி விட்டால், நாம் நம் சக்திக்கும் மீறி அதற்கு எதிர்வினையாற்றுவோம். கொஞ்சமாவது சூடு சுரணை இருப்பவர்கள் இதையே செய்வார்கள். பல வீடுகளின் கூட்டமைப்பே ஒரு கிராமம். பல கிராமங்களின் கூட்டமைப்பே ஒரு நாடு. ஆக வீட்டுக்கு என்ன கட்டுப்பாடோ, அதையே நாட்டுக்குமான கட்டுபாடாக சட்டம் என்று வகுத்து வைத்திருக்கிறார்கள். 

சட்டங்கள் ஒவ்வொரு தனிநபர் பாதுகாப்பு, உடமை, உரிமை, நம்பிக்கை போன்றவற்றைப் பாதுகாக்கிறதோ அப்படியே ஒட்டு மொத்த நாட்டின் பாதுகாப்பினையும் காப்பாற்ற வேண்டி சட்டம் வகுத்து வைத்திருக்கிறது. அப்படியான ஒரு கிரிமினல் சட்டம்ப் பிரிவு தான் 124A என்ற இந்தியன் பீனல் கோடு. 

இந்தப் பிரிவு என்ன சொல்கிறது என்றால், “இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு, ஒருங்கிணைவு, அதன் மாண்பு, அதன் பாதுகாப்பு போன்றவற்றிற்கு, எழுத்து மூலமாகவோ, வார்த்தைகள் அல்லது செய்கைகள் மூலமாகவோ, அல்லது ஊடகம் உள்ளிட்ட வேறு ஏதேனும் வகையிலே அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அது தேசத் துரோகக் குற்றமாகும். மேலே குறிப்பிட்டுள்ள அல்லது குறிப்பிடாத எதன் மூலமாகவோ, தேத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமாயின் மூன்றாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படலாம். இதற்குப் பிடிவாரண்டு அவசியமில்லை. அதே போல் இதுவொரு ஜாமீன் பெறமுடியாத (Non Bailable) குற்றவகை.

இந்தச் சட்டப்பிரிவைத் தான் காங்கிரஸ் (ஒருவேளை) ஜெயித்தால் விலக்குவோம் என்று அறிக்கை விட்டிருக்கிறது. நிஜமாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் நேரடியாகவே இந்த நாட்டை அழிக்காமல் விட மாட்டோம் என்று இந்தியர்களுக்குச் சவால் விடுகிறதா? சுயபுத்தியிருக்கும் எந்த இந்தியனும் இப்படியொரு அறிக்கையை விட மாட்டான். இந்தச் சட்டத்திற்கு பயந்து தான் இங்கே பலர் தங்கள் பிரிவினைவாத செயல்பாடுகள், பேச்சுகளை எல்லாம் நாசூக்காகவோ மறைமுகமாகவோ பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த தண்டனைச் சட்டத்தை நீக்கி விட்டால் என்னவாகும்?

நேரடியாக இந்தியாவின் இறையாண்மை மீது தாக்குதல் நடக்கும்.

அண்டை நாடுகள் இப்படியான பேச்சுகளையும் செயல்களையும் தூண்ட அப்பட்டமாக ஆட்களையும் பணத்தையும் இறைக்கும்.

நம் வீட்டுப் பெண்கள், குழந்தைகளை வன்முறை என்ற அசுரத்தனத்தைக் கொண்டு வன்புணர்வு உட்பட கொலைகளும் சாதாரணமாக நடத்தி விட்டு, பல குழுக்களாக இணைந்து இந்திய நாடு மோசமான நாடு அபத்தப் பிரசாரம் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்

தேசத்தின் மீதே அக்கறையும் நம்பிக்கையும் இல்லை என்றால், தானிருக்கும் நகரம் கிராமம் தெரு மீது என்ன பிடிப்பு வரும்? வன்முறை என்பது வாட்ஸ் அப்பில் ஷேர் செய்வது போல் மிகச் சாதாரண விசயமாகி விடும்.

இந்தச் சட்டத்தைப் பாதுகாக்க நாட்டின் மீது, அக்கறையோ, அன்போ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்த பட்சம் மனிதத் தன்மை இருந்தால் போதும்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் அடைந்தால் திராவிட நாடு இல்லயேல் சுடுகாடு என்று பிரிவினைவாதம் பேசிய போது இதே காங்கிரஸின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இந்த 124 ஆ சட்டத்தை வைத்து தான் அண்ணாதுரையை அடக்கி வைத்தார். இப்ப இதே காங்கிரஸ் இந்தச் சட்டத்தை நீக்க முயல்கிறது என்றால், இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் எந்த நாட்டின் கைக்கூலியாகச் செயல்படுகிறார்கள்? இவர்களது தேர்தல் அறிக்கைகளில் வேறு சிலவும் நேரடியாக இந்தியப் பிரிவினைக்கான ஏற்பாடாக மட்டுமே இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் 72 ஆண்டுகளில் ஏற்படாத அவசியமாக இந்தச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏன் வந்தது? யாருக்கான தேர்தல் அறிக்கை இது? 

இந்தச் சட்டப்பிரிவினை பிரிட்டிஷ் ஆண்ட போது 1860ல் உருவாக்கியது. அதன் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதிய அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களோ, 16 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரிகளோ மாற்றம் செய்ய நினைக்காத இந்தச் சட்டத்தினை இப்பொழுது நீக்க நினைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன அவசியம் வந்தது? இது நிச்சியம் தேசத்தின் பேரழிவிற்கான பாதைக்கு காங்கிரஸ் எடுத்துச் செல்ல முற்படுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP