Logo

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கேரளத்தில் உள்ள அரபிக் கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு ஊர் தான் கோவளம். திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலமாக இந்த ‘கோவளம்’ விளங்குகிறது.
 | 

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கேரளத்தில் உள்ள அரபிக் கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு ஊர் தான் கோவளம். திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலமாக  இந்த ‘கோவளம்’ விளங்குகிறது. கோவளம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மூன்று அடுத்தடுத்த அழகிய கடற்கரைகளைக் கொண்டது. அவை கலங்கரை விளக்கம், ஹவாய் கடற்கரை, சமுத்திர கடற்கரை என்பவையாகும். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் மரங்களை அதிகம் காண முடியாது. 

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கடற்கரையில் இருந்து வெகு தொலைவில்தான் ஒரு சில மரங்கள் இருக்கும். ஆனால் கோவளம் கடற்கரை‌க்கு என ஒரு தனி சிறப்பாக, கட‌ற்கரையை ஒ‌ட்டி வரிசையாக எ‌ண்ண‌ற்ற தென்னை மரங்களைக் காணலாம். கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதி என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. எப்படி காஷ்மீர் பகுதியானது ஒரு சொர்க்கபூமியென்று அழைக்கப்படுகிறதோ அதைப்போலவே இந்த கோவளம் கடற்கரையும் தெற்கிலுள்ள ஒரு சொர்க்கபுரியாக புகழ்பெற்றுள்ளது. 

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கோவளம் 1930 ஆம் ஆண்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவளம் என்ற பெயர் துவக்கத்தில் கோவன்குளம் என்று அழைக்கப்பட்டது.  இந்த கடற்கரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு வீசும் குளிர்ந்த காற்று உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் குளிரச் செய்யும். குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாகவே இந்த கோவளம் கடற்கரை உள்ளது. 

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கோவளத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை சுற்றுலா சீசன் களைகட்டும். இந்த சீசன் காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கப்பல் மற்றும் படகில் அனுபவிக்க முடியாத இயற்கையான அனுபவத்தை கட்டுமரத்தில் சென்று அனுபவிக்க கூடிய வாய்ப்பும் இங்கு உள்ளது. காலநிலையும் மிக ரம்மியமாக காட்சியளிக்கும். கோவளத்தில் அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. 

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

கோவளத்தின் பசுமையும், மணற்பரப்பும், நீலக்கடலின் சாந்தமும் உங்கள் கவலைகளை எல்லாம் மறக்க வைத்து பரவசமடைய வைக்கிறது. கோவளத்தில் மூன்று முக்கியமான கடற்கரைகள் உள்ளன. அவற்றில்  லைட் ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் என்று மூன்று கடற்கரைகளும் உள்ளன.   இங்குள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளும் அடுத்தடுத்து 17கி.மீ நீளத்துக்கு கடலை ஒட்டி காணப்படுகின்றன. கடினமான பாறை அமைப்புகள் இம்மூன்று கடற்கரைகளையும் பிரிப்பதுபோல் அமைந்துள்ளன. இந்த மூன்று கடற்கரைகளைத் தவிர்த்து மற்றொரு கடற்கரையையும் கோவளம் சுற்றுலாத்தலம் கொண்டுள்ளது. அது அஷோகா பீச் என்றழைக்கப்படும் கடற்கரையாகும்.

அந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...?

இந்த அஷோகா பீச்சில் தனிமையை நாடி வரும் தேனிலவுத்தம்பதியினர் பகுதிக்கு வந்து உலாவுவதை விரும்புகின்றனர். அவற்றில் அழகை ரசிப்பதற்கு காலை நேரம் மற்றும் மாலை நேரம் இரண்டும் ஏற்ற நேரங்களாக உள்ளது கோவளம் பீச்சு. கோவளம் கடற்கரையின் மற்றொரு சுவாரசியமான அம்சம் இங்குள்ள மணல் சற்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதாகும். மோனசைட் மற்றும் லைம்னைட் எனும் கனிமப்பொருட்கள் இம்மணலில் நிறைந்திருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர். கோவளம் சுற்றுலாத்தலத்திற்கு செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான பருவத்தில் குடிம்பத்தோடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP