கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

இந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குவது கேரள மாநிலத்தில் உள்ள ஒர் இடம் தான் ஆலப்புழா. கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும். ஆலெப்பி என்ற பெயரால் தற்சமயம் அறியப்படுகிறது ஆலப்புழா
 | 

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

இந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குவது கேரள மாநிலத்தில் உள்ள ஒர் இடம் தான் ஆலப்புழா. கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும். ஆலெப்பி என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ஆலப்புழா எனும் உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் இயற்கையை ரசிப்பதற்கும் பிரசித்தி பெற்ற இடமாகும்.  இவை கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்  என்று அழைக்கப்படுகிறது. 

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்துவிடும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது  மறக்கமுடியாத அனுபவமாக அமையும். பளபளப்பான கடற்கரைகள், நீண்ட ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் ஆகியவையும் புதிய அனுபவமாக இருக்கும்.

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

காஷ்மீரின் பாரம்பரிய சின்னமான படகு வீடுகளை, தற்போது தனது பாரம்பரியமாக மாற்றி விட்டது கேரளா. தண்ணீர் மீது தங்கும் அந்த பாரம்பரியமிக்க படகு வீடு தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கும்.  இரண்டு படுக்கை அறைகள் கூடிய படகு வீட்டின் வாடகை சுமார் 9,000 ரூபாய் அளவில் உள்ளது. இந்தப் படகு வீட்டில் சுற்றுலா பயணிகளை கவனித்து கொள்வதற்க்கென ஆட்கள் இருக்கின்றார்கள். பயணிகள் கேட்கும் கடல்மீன் உணவுகளை வாங்கி அங்கே சமைத்துகொடுக்கின்றனர்.  ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களிலிருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு.  திருமணமான புது தம்பதியர்கள், இங்கு தான் தேனிலவைக் கொண்டாட சிறந்த இடமாக உள்ளது. படகு வீடும், அதன் மிதப்புத் தன்மையும், தண்ணீர் சத்தமும், ஒரு தனி ரம்மியத்தை கொடுக்கும். ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.நிலத்தடி நீர் வளமும் கேரளாவில் என்றும் குறைந்ததில்லை. காயலில் எப்போதும் நீர் இருப்பதினால் படகு வீடுகள் மிதக்கின்றன. 

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

இங்கு ஆண்டுதோறும் நேரு கோப்பை படகுப் போட்டியானது ஒரு திருவிழா போன்று விமரிசையாக நடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன. பல வருடங்கள் ஆனாலும் இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது. ஜுன், ஜுலையில்  மழைக்காலம் முடிந்த பின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது  வரும் சுற்றுலா பயணிகளுக்கு என்றும் கணாத வகையில் படகுப்போட்டி நட்த்தப்படுகிறது. 

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

ஒரு முழுமையான ஆன்மீக அனுபவம் எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ஆலப்புழாயில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் புத்துணர்வு அடைந்துவிடும். இங்கு தெய்வீகம் தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன.  இயற்கையின் எழிலும் பொழிலும் நிறைந்து வழியும் ஸ்தலங்கள் ஆலெப்பி நகர்ப்பகுதியில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சம் பத்திரமண்ணல் எனும் இடமாகும். ஒரு சிறிய தீவுப்பகுதியில் ஏராளமான சுவராசியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

இங்கு உள்ள வேம்பநாட் ஏரிப்பகுதியில் மூழ்கிக்கிடக்கும் இந்தத்தீவுப்பகுதியிலிருந்து ஆலப்புழா பிரதேசத்தின் இயற்கையை நன்கு ரசிக்க முடிகிறது.  இது மட்டுமல்லாமல், கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்றழைக்கப்படுகிற குட்டநாட் பகுதியின் நெல்வயல்களுக்கும் பயணிகள் சென்று இயற்கையை ரசிக்கலாம். புராணக்கதைகள், நம்பிக்கைகள் மற்றும் ஐதீகங்கள் ராஜ பரம்பரைகளோடு தொடர்புடைய வரலாற்றுக்கதைகள் மற்றும் சுவாரசியமான தலபுராணங்கள் இங்கு நிறைந்துள்ளன.  

கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...!

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் ஆலப்புழா நகருக்கு  எப்போது வேண்டுமானாலும் சுற்றுபயணம் செய்யலாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக உள்ளது ஆலப்புழா. இங்கு கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு செல்லலாம். கூடுதலாக ரயில் அல்லது பேருந்து மூலமாக ஆலெப்பி என்ற ஆலப்புழாவுக்கே செல்லலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP