ஓய்வு விடுதிகளா சிறைச்சாலைகள் ??

தேசத்தை ஆள்பவர்களுக்கு என்னவிதி கடைபிடிக்கப்படுகிறதோ, அதை அப்படியே சிறை கைதிகளின் விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஏற்ப வெளிநாட்டின் சிறைகளில் குற்றவாளிகளின் நடத்தை விதியை மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். ஒருகால் அது நடக்காவிட்டால் கூட நம்ம ஊர் கைதிகளுக்கு இணையாக வெளிநாட்டு கைதிகளையும் நடத்த வேண்டும்.
 | 

ஓய்வு விடுதிகளா சிறைச்சாலைகள் ??

மக்களவை தேர்தலில் 2004ஆம் ஆண்டு பாஜக தோல்வியை தழுவியது. அனைவரும் சோனியாதான் பிரதமர் என்று எதிர்பார்த்திருந்தனர். அவர் குடியரசு தலைவர் அப்துல்கலாமை சந்தித்து வெளியே வந்த பின்னர் திடீரென மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதற்கு, இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் அதிகபட்சம் எந்த பதவியை வகிக்க இயலுமோ அதே பதவியை தான் அந்த நாட்டவர் இங்கே பெற முடியும் என்ற சர்வதேச மரபு சுட்டிக்காட்டப்பட்டு, இத்தாலி நாட்டில் இந்தியர் ஒருவர் பிரதமராக பதவி வகிக்க அந்த நாட்டு சட்டம் அனுமதியளிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, சோனியாவிற்கு பிரதமர் பதவி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

உயர் பதவிக்கு தான் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு குறிப்பாக கைதிகளுக்கு இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.

பழம் மற்றும் காய்கறிக்கடை ஒன்றில் பிஸ்டலுடன் இன்ஸ்பெக்டர் ஒருவர், துப்பாக்கிகளை தூக்கி கொண்டு 2 போலீசார் என திடீரென்று நுழைந்தனர். யாரும் எதுவும் வாங்கவும் இல்லை, விசாரிக்கவும் இல்லை. சிறிது நேரத்தில் போலீஸ்காரர் ஒருவர் வயிற்றெரிச்சலில், இவனுக இதுக்கு தான் சார் வராங்க, உடம்பு முடியவில்லை என்பதெல்லாம் பொய் என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

அப்போது தான் 2 குற்றவாளிகள் கைவிலங்கு கூட போடாமல் பழங்கள் வாங்கி கொண்டிருப்பது தெரிந்தது. சரி மாமூலுக்கு ஆசைப்பட்டு இவர்களை நம்மவர்கள் அழைத்து கொண்டு வந்துள்ளார்கள் போலும் என்று வயிற்றெரிச்சல் காரரிடம், அதான் சிறை வாசலிலேயே சோதனை என்ற பெயரில் அனைத்தையும் பிடிங்கி கொள்வீர்களே அப்புறம் எப்படி என்று கேள்வி எழுப்பட்டடது. அதற்கு அவர், அது நம்ம ஊர் கைதிக்கு தான் சார் இவர்கள் பங்களா தேஷ் காரர்கள், இவர்களுக்கு சிறப்பு சிறை வசதி உள்ளது. அங்கு எல்லாம் அவ்வளவு சோதனை கிடையாது. சமையல் செய்து கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். இவர்களுக்கு சம்பளம் கூட அரசு தருகிறது என்று கொந்தளிப்போடு கூறினார்.

இந்தியர்களில், பணம் இல்லாதவர்களுக்கு சிறை என்பது மிகக் கொடுமையான விஷயம். அங்கு பீடிதான் கரன்சி. அதற்காக எதையும் செய்ய கைதிகள் தயாராக இருப்பார்கள். அதே நேரத்தில், லஞ்சக்கறை படிந்தவர்கள் உள்ள சிறைகளுக்குள்ளேயே கடைகள் நடைபெறுகின்றன. சிறைக்கைதிகளுக்கு பெண்களை தவிர்த்து அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அனைத்துமே சட்ட விரோதம். நல்ல அதிகாரி ஒருவர் பொறுப்பேற்றால் இவற்றையெல்லாம் ஒழித்து விடலாம். ஆனால் வெளிநாட்டு சிறைக் கைதிகள் பராமரிப்பு சட்ட ரீதியானது.

சரி இங்கு இவர்களை நாம் இவ்வளவு வசதியாக வைத்திருக்கிறோமே, வெளிநாட்டில் நம் கைதிகளின் நிலை என்ன என்பதை நாம் ஆராய வேண்டாமா என்று கேள்வியெழுந்தால், அதற்கு பதில், வெளிநாடுகளில் நம்மவர்களின் கதி மிகவும் கேவலமானது என்பது தான்.

சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் அளித்த பேட்டியில், இலங்கை சிறையில் கழிப்பறை என்று தனியே கிடையாது. ஒரு சட்டி தருவார்கள், தங்கியிருக்கும் அறையின் மூலையில் சென்று அந்த சட்டியில் மலம் கழிக்க வேண்டும். பின்னர் அந்த சட்டியை வெளியே எடுத்து சென்று கொட்ட வேண்டியது புதிதாக சிறைக்கு வந்த கைதியின் வேலை என்று கூறினர். அதாவது சிறையின் மூத்தவர்களுக்கு இளையவர்கள் செய்யும் மரியாதையாம் அது. எனக்கு கேட்டதும் பதறிவிட்டது.

இதே போல தான் இதர நாடுகளில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் சிக்கி கொள்பவர்கள் நிலையும். ஆனால் அவர்கள் சிறையில் பெற்ற கொடுமைகளை விலாவாரியாக வெளியே சொல்லுவதில்லை. கடந்த காலங்களில், இப்படி சிக்கி கொள்பவர்கள் மீட்கப்படுவதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடும். ஆனால், இப்போதோ உடனே மீட்கப்படுகிறார்கள். ஆனால் மோடி சர்க்கார் மீட்டு விட்டது என்று பேட்டி கொடுப்பதுடன் சரி. அவர்கள் அங்கு வாங்கிய உதைகளை பற்றி பேட்டியில் குறிப்பிடுவதில்லை. இதனால் தான் நம் நாட்டின் சிறை விதிகளுக்கும், வெளிநாட்டில் உள்ள சிறை விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பொதுவெளியில் தெரிவதில்லை.

தேசத்தை ஆள்பவர்களுக்கு என்னவிதி கடைபிடிக்கப்படுகிறதோ, அதை அப்படியே சிறை கைதிகளின் விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஏற்ப வெளிநாட்டின் சிறைகளில் குற்றவாளிகளின் நடத்தை விதியை மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். ஒருகால் அது நடக்காவிட்டால் கூட நம்ம ஊர் கைதிகளுக்கு இணையாக வெளிநாட்டு கைதிகளையும் நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் தண்டனை குறைவு என்று வெளிநாட்டில் இருந்து திருடவோ, மோசடி செய்யவோ எவனும் நமது தேசத்திற்குள் வர மாட்டான். இப்போதே கூட ஆன்லைன் மோடியில் சிக்குபவர்களில் பலர் வெளிநாட்டு காரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP