ராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே!!!

சர்ச்சைக்குரிய இடமாக மாறிவிட்ட 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், 5 நீதிபதிகளும் நேரடியாக பதில் சொல்ல வில்லை. பட்டிமன்றப் புகழ் சாலமன்பாப்பையா போல இரு பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி, 3ஆவது நியாயமாக மத்திய அரசிடம் அந்த நிலத்தை ஒப்படைத்து, அதில் கோவில் கட்டச் சொல்லி இருக்கிறார்கள்.
 | 

ராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே!!!

பாரதி பித்தன்

இந்திய மக்களின் லட்சிய புருஷன் ஸ்ரீராமன் அவதரித்த இடம் அயோத்தி என்பது தொன்மையான உண்மை. ஓர் சொல், ஓர் இல், ஓர் வில் என்ற வாழ்வின் இலக்கணத்தை ஹிந்துக்களுக்கு வாழ்ந்து காட்டி வகுத்தளித்தவன் ஸ்ரீராமன். அவன் அவதரித்த இடத்தில் அவனுக்கு ஆலயம் எழுப்பி ஆண்டாண்டு காலமாக வழிபாடு நடத்தி வந்தனர் ஹிந்துக்கள். செல்வ வளம் கொண்ட இந்த நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் இத்தேசத்தின் மீது போர் தொடர்ந்து புரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களில்1173ஆம் ஆண்டில் படையெடுத்து வந்து கோரி அரசை நிறுவிய முலாஸ்தீன் முகமது என்கிற கோரி முகமது முக்கியமானர். அவர் வந்ததற்கு பின்னால் தான் இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமாகியது. அவர் ஆட்சியில் வாள் முனையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் ராமனை தெய்வமாக வழிபடுகிறவர்களாகத்தான் வாழ்ந்து வந்தனர்.

இதன் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கடந்து தான் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். அவன் தான் மொகலாய ஆட்சியை நிறுவியவன். அவன் படையெடுப்பின் அடையாளமாக நாடெங்கிலும் பல ஆலயங்கள் இடிக்கப்பட்டன. இதை எதிர்த்து இன்றைக்கு இஸ்லாமியர்களாக இருப்பவர்களின் மூதாதையர்கள் எத்தனை பேர் உயிர் துறந்தார்கள் என்பதற்கு எவ்விதமான கணக்குகளும் இல்லை.  ஆனால் கோரி அரசில் இஸ்லாமியர்களாக மாறியவர்கள் தவிர்த்து அனைவரும் ராமனை தங்கள் வாழ்வியல் வழிகாட்டியாகக் கொண்டவர்கள்.

ராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே!!!
 அவ்வாறு இந்தியாவில் இடிக்கப்பட்ட இடங்களில் அயோத்தியில் ராமர் கோவில் முக்கியமானது. அதை மீட்கும் போராட்டம் அன்று முதல் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது. கோரி ஆட்சி, மொகலாயர்கள், ஆங்கிலேயேர்கள் ஆட்சி எல்லாம் முடிவுக்கு வந்து தற்போது சுமார் 73 ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போதெல்லாம் கோவிலை மீட்பதற்கு நடந்த முயற்சிகள் படையெடுப்பாளர்களுக்கு எதிராக நடந்தன. அதன் பின்னர் நேருவின் பங்களிப்பால் பங்காளிகளுக்கு எதிரானதாக மாறிவிட்டது. அவ்வாறு மாறிய இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் ஒரு வழியாக தற்போது முடித்து வைத்துள்ளது. கத்தி முனையில் இழந்த கோயிலை, கத்தி முனையில் நடப்பது போல 5 நீதிபதிகள் திரும்ப நியாயம் பேசி ஹிந்துக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

சர்ச்சைக்குரிய இடமாக மாறிவிட்ட 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், 5 நீதிபதிகளும் நேரடியாக பதில் சொல்ல வில்லை. பட்டிமன்றப் புகழ் சாலமன்பாப்பையா போல இரு பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி, 3ஆவது நியாயமாக மத்திய அரசிடம் அந்த நிலத்தை ஒப்படைத்து, அதில் கோவில் கட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது போன்ற தீர்ப்பை அவர்கள் வழங்கும் போதே நாட்டில் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பை வழங்கி இருப்பதாக கூறி உள்ளனர்.

ராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே!!!

அதை உண்மை என்பதை கோர்ட்டுக்கு வெளியே காத்திருந்த இஸ்லாமிய, இந்து மதத் தலைவர்கள் கட்டித் தழுவிக் கொண்டு நிரூபித்து இருக்கிறார்கள். ஆனாலும் சிலருக்கு இந்த தீர்ப்பு வேதனை அளிப்பதாக கருத்துகள் வெளியிட்டு இருக்கிறார்கள். பல முறை இடிப்பட்டதால் அது பாபர் காலத்திய மசூதி கூட கிடையாது. மேலும் அன்றைய காலகட்டத்தில் ராமர் கோவிலை இழந்து விடக்க கூடாது என்று உயிர் துறந்தவர்களின் உறவினர்கள் கூட இன்று இஸ்லாமியர்களாக இருக்கலாம். அந்த மூத்தோர்களின் நல்லாசையும் இன்று நிறைவேறி இருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டையே ரத்த வெள்ளத்தில் பிரித்துக் கொடுத்தவர்கள் ஹிந்துக்கள். அவர்களுக்கு அவர்கள் இலட்சிய புருஷனான ராமன் அவதரித்த இடம் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்று, இஸ்லாமியர்கள் அப்பீலுக்கு சென்று முட்டுக்கட்டை போடாமல் இருந்தால், நாங்களும் ஹிந்துக்களும் சகோதரர்களாக வாழ்கிறோம் என்று அவர்கள் கூறிவருவது அவர்கள் தரப்பிலும் உண்மையாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP