பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்று பொன்முடி மலைவாசஸ்தலம். இவை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது.
 | 

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்று பொன்முடி மலைவாசஸ்தலம். இவை  மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக  உள்ளது. இயற்கை வனப்பு நிறைந்திருக்கும் கேரளாவில் வெண்மேகங்கள் பசுமை போர்த்திய மலைகளை முத்தமிடும் அளவிற்கு பொன்முடி மலைப் பகுதி உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதோடு, ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பொன்முடி என்ற வார்த்தைக்கு  தங்க சிகரம்  என்று பொருள்.  

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

இந்த மலைவாசஸ்தலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையின் வனப்பும், இது ஒளித்துவைத்திருக்கும் அதிசயங்கள்  சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு உண்ணதமான பயணத்தை கொடுக்கும். பொன்முடி மலைவாசஸ்தலம் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை டிரெக்கிங் மற்றும் ஹைக்கிங் போன்ற சாகச பயணத்தில் ஈடுபட விரும்பும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது.  இந்த மலைவாச தலங்கள் அதிகமான பறவை இனங்கள் வாழ்வதாக சொல்லப்படுகிறது. 

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

பொன்முடி மலைவாசஸ்தலத்தில் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று சுற்றுலா பயணிகள்  கவரும் வகையில் சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இங்கு கோல்டன் வேல்லி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம் போன்றவை உள்ளன. பொன்முடிக்கு அருகில் அமைந்திருக்கும் கல்லார் ஆறு  சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் பகுதியாக இருக்கிறது. ஏனென்றால்  பன்னீர் போல தெளிவான நீர் பாயும் இந்த ஆற்றில் கூழாங்கற்கள் அதிகளவில் இருப்பதாலேயே இதற்கு 'கல்லார்' என்ற பெயர்  வந்ததாக கூறப்படுகிறது. மழைக் காலங்களில் இயற்கையாய் உருவான ஓடைகள் மற்றும் சிறிய அருவிகள்  பார்ப்பதற்க்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும்.

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

கோல்டன் வேலி, மீனாட்டு நீர்வீழ்ச்சி, அகஸ்தியமலை உயிரி எரிபொருள், மினி பூங்கா, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், பொன்முடி கிரஸ்ட் ஆகியவை பொன்முடியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். 

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

இங்கு நடைபெறும் ஆரன்முலா நீர் திருவிழா முகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். இங்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரை சுற்றுலா பயணிகள் வருகைக்கு  சிறந்த பருவம்மாக பொன்முடி மலைவாசஸ்தலங்கள் உள்ளன.

பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...!

பொன்முடி மலைப்பகுதியை திருவனந்தபுரம் நகரிலிருந்து சாலை மூலமாக எளிதில் அடைந்து விட முடியும்.  பொன்முடி மலைப்பகுதிக்கு அதன் அருகாமையில் அமைந்துள்ள திருவனந்தபுரம் நகரிலிருந்தும், கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொன்முடி சென்னையில் இருந்து 775கி.மீ தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 730கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த மலைவாசஸ்தலம் வருடம் முழுமையும் இதமான வெப்பநிலை  கொண்டிருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP