ஜனநாயகத்தில் தில்லுமுல்லு அரசியல், காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மட்டுமே உரியது: பாரதிய ஜனதா செய்தால் குற்றம்???

மகாராஷ்டிரா மக்கள் பாஜக, சிவசேனா ஆட்சி அமைய வேண்டும் என்று சட்டசபைத் தேர்தலில் வாக்களித்தனர். அது முழுமையாக நிறைவேறாததற்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக சிவசேனாவின் சுய நலமே காரணமாக அமைந்துள்ளது.
 | 

ஜனநாயகத்தில் தில்லுமுல்லு அரசியல், காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மட்டுமே உரியது: பாரதிய ஜனதா செய்தால் குற்றம்???

மகாராஷ்டிரா மக்கள் பாஜக, சிவசேனா ஆட்சி அமைய வேண்டும் என்று சட்டசபைத் தேர்தலில் வாக்களித்தனர். அது முழுமையாக நிறைவேறாததற்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக சிவசேனாவின் சுய நலமே காரணமாக அமைந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு வரை மவுனமாக இருந்த சிவசேனா, அதன் பின்னர் தனது அரசியல் ஆட்டத்தை காட்ட தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் போதே சிவசேனாவின் மறைமுக செயல்திட்டமாக இது இருந்துள்ளது. அதனால் தான் எங்கள் குடும்பத்தில் யாரும் அரசு அமைக்க மாட்டோம் என்ற பால் தாக்கரேயின் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டு, ஆதித்யா தாக்கரே களம் முதலமைச்சராக களம் இறக்கப்பட்டார்.

அவர் வெற்றி பெற்றதும் ஆதித்யா தாக்கரேவை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டது சிவசேனா. ஒரு புறம் இந்த முயற்சி நடந்தாலும், ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். இதில் இருந்தே சிவசேனாவின் இரட்டை வேடம் வெளிப்படத் தொடங்கியது. ஆதித்யா தாக்கரேவை முதல்வராக்கும் திட்டத்தை சஞ்சை ராவுத் செயல்படுத்த களம் இறங்கினார். சிவசேனாவின் சாம்னா பத்திரிகை ஆசிரியர் ஆத்திய தாக்கரே, அதன் மராத்தி பதிப்பு பொறுப்பாசிரியர் சஞ்சை ராவத் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொடுத்த நம்பிக்கை, உறுதியில் தான் உத்தவ் தாக்கரே பாஜகவை முழுமூச்சாக எதிர்த்தார். ஆனால் தனது முயற்சிகள் அவ்வளவு எளிது அல்ல என்று புரிந்து கொண்ட சஞ்சை ராவத், தனது உடல் நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் சேர்ந்தார்.

அன்றைய சூழ்நிலையில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்றது. சிவசேனாவிற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தருவதில் தயக்கம் காட்டின. இதன் காரணமாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலானது.

அதன் பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லாததால் பேச்சுவார்த்தை மேற்கொண்டபோதும் அவ்வளவு எளிதாக உடன்பாடு ஏற்படவில்லை. திறந்த மனநிலையுடன் சுற்றி இருப்பதை பார்க்க வேண்டிய ஊடகங்கள், சிவசேனா கூட்டணி அமைப்பதை விமர்சனம் செய்வது, அல்லது ஆதரவு தருவது, என்ற நிலைப்பாட்டை மட்டுமே கையில் எடுத்தன. தங்கள் நிலைக்கு ஏற்ப அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்தன.

விஷ்வல் நக்சல்களின் எண்ணம் முழுவதும் பாஜக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதாக இருந்த நிலையில், அவர்கள் அந்த கட்சியை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. ஒரிரு இடங்களை மட்டும் வைத்துக் கொண்டே வடகிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைத்த பாஜக 105 இடங்களை வைத்துக் கொண்டு மஹாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று கூறுவது ஏன் என்று விஷ்வல் நக்சல்கள் சிந்திக்கவே இல்லை.

இதன் காரணமாக பாஜக அனைவருடைய கவனத்தையும் திசை திருப்பி விட்டு சத்தம் இல்லாமல் ஆட்சியை பிடித்து விட்டது.

இன்றைக்கு இது ஜனநாயக படுகொலை என்று கூச்சல் போடுபவர்கள், எதிர் எதிர் கொள்கை கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்தபோது அது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

பாஜக மட்டும் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும், சரியாக நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள், எதிரணியில் இப்படி நடக்காதபோது சிவசேனை என்.சி.பி, காங்கிரஸ் கூட்டு வைத்தபோது, குறட்டை விட்டு தூங்குவது ஏன் என்பது தான் புரியவில்லை.

அதே நேரத்தில் இயல்பான கூட்டணி என மக்கள் நம்பும் அளவிற்கு தங்களின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி விட்டார்கள் எதிர்கட்சிகள். அதனால் தான் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித்பவார் பதவியேற்றதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நள்ளிரவில் தொடங்கி, அதிகாலைக்குள் அனைத்து சம்பவங்களையும் நடத்தி முடித்துவிட்டது பாஜக. இதற்கு மத்திய அரசு, கவர்னர், குடியரசு தலைவர் என்று அனைத்து தரப்பினரும் உடந்தை என்று கூறுகின்றன புதிதாக கூட்டணி அமைத்த மூன்று கட்சிகள். இது இந்தியா இதுவரையில் எதிர்பார்க்காத மிக துல்லிய தாக்குதல்தான் என்றாலும், பெரும்பான்மை மக்கள் பாஜக கூட்டணிக்கு அளித்திருந்த வாக்களிப்பிற்கு விரோதமாக சிவசேனா செயல்படுகையில் பாரதிய ஜனதா அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதே வேலையில், அதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை  பாஜக பயன்படுத்த நினைத்தால் அது குற்றம் என காங்கிரஸும், ஏனைய எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் தீர்ப்பு வழங்குகின்றன. இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தான் புரியவில்லை.

இந்நிலையில், ஆட்சியை இரவில் பிடித்து விட்டாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சவால் பகலில் தான் செய்ய வேண்டும். இதற்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி வரும் 30ஆம் தேதி வரை கெடுவித்துள்ளார். ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தொடர்பான வழக்கில் பெரும்பான்மையை 48 மணி நேரத்திற்குள் நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதிக்கலாம். கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்கு அவர்கள் இது போன்ற நிபந்தனை விதித்ததால் தான் அவர்கள் ஆட்சியை இழக்க நேரிட்டது. 

இதனால் கவர்னரிடம் அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதங்களை கொடுத்து இருக்கலாம். அதே நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்கும் நிலையில் அந்த எம்.எல்.ஏக்கள் பாஜவிற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைக்கலாம். ஆனால் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் இணைப்பால் அதிருப்தியடைந்துள்ள எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரித்து அமைச்சர்கள் ஆகலாம். தங்கள் கட்சியே ஆட்சியை பிடித்தாலும் தான் அமைச்சராக முடியாது என்ற எண்ணம் இருப்பவர்கள்  பாஜகவிற்கு தான் ஆதரவு அளிப்பார்கள்.

இன்றைய நிலைப்படி பாஜக 105, அஜித் பவாரின் ஆதரவாளர்கள் 54, சுயேட்சை 8 என்ற நிலை உள்ளது. இந்நிலையில், சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 49 சுயேட்சை 8, இதரர் 14 என்று எதிர்கட்சி வசம் உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் தன்னிடம் 49 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறுவதன் மூலம் அஜித் பவார் பக்கம் வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதாக கொள்ளலாம். பெரும்பான்மை நிரூபிக்க 145 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது பாஜக வசம் இருப்பது 118 என்று (மொத்தம் தேசியவாத காங்கிரஸ் வென்றது 54 அதில் சரத்பவார் பக்கம் இருப்பது 49 என்றால் அஜித்பவார் பக்கம் இருப்பவர்கள் 5) இன்னும் 27 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை.

தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக, சிவசேனாவில் பல பிரமுகர்கள் இணைந்தனர். அந்த முயற்சியில் அஜித் பவார் கூட இறங்கினார். இது போன்ற சூழ்நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டால் அமைச்சர் பதவி, தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் சாதாரண எம்.எல்.ஏ என்ற டீலிங் அவர்கள் மனதில் எழும் அல்லவா.

மேலும் பெரும்பான்மை என்பது சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கைதான். அதனால் பலர் சபைக்கே வராமல் கூட இருக்கலாம். இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி தானே லோக்சபாவில் திமுக வெளிநடப்பு செய்து தமிழகத்திற்கு எதிரான சட்டம் இயற்ற உதவி செய்தது. அதையே அவர்களும் செய்யலாம்.

இது குறித்து முழுதாகவும் தெளிவாகவும் விவாதிக்க வேண்டிய மீடியா நக்சல்கள் ஏதோ ஒரு கட்சியின் வாலை பிடித்து கொண்டு அதன் வழி நடக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் ஒரே லட்சியம்.

எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்ற விதி முறையையே நீக்கி விடலாம். அதாவது நேரடியான மைனாரட்டி ஆட்சி. இதன் மூலம் மக்களுக்கு விரோதமாக அரசு செயல்பட்டால் எதிர்கட்சிகள் அதற்கு கடிவாளம் போட முடியும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது.

இதை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தை மஹாராஷ்டிரா உருவாக்கி விட்டது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP