காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டது : விளைவுகள் என்ன? இரண்டாம் பாகம்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து திரும்பபெறுவதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பிரிவு 35 ஏ குறித்து இரண்டாம் பாகத்தில் காண்போம்..
 | 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டது : விளைவுகள் என்ன? இரண்டாம் பாகம்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ குறித்து முதல் பாகத்தில் பார்த்தோம்.

இப்போது, மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கூடுதலாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ வின் படி வழங்கப்பட்டு வந்த சலுகைகள் என்னவென்று பார்ப்போம்.

  • இந்தியாவின் குடிமகன் என்று அறியப்பட்ட எவரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் குடியுரிமைக் கோர முடியாது. 
  • இந்தியாவின் குடிமகன் என்று அறியப்பட்ட எவரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்க முடியாது. 
  • இந்திய குடியுரிமை பெற்ற எவரும் ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு பணிகளில் சேர முடியாது. 
  • 1937ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஜம்மு- காஷ்மீரில் இடம் வாங்கியவர்கள் மட்டுமே காஷ்மீர் மாநிலத்தின் முதல் குடிமகனாக உரிமை கோர முடியும். 1937ஆம் ஆண்டுக்கு பிறகு இடம் வாங்கியிருந்தால் கூட அவர்கள் முதல் குடிமகனாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அரசுப்பணியில் வேலை வாய்ப்பு கிடையாது. 
  • ஜம்மு - காஷ்மீரில் பிறந்த பெண் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
  • இந்திய குடிமகனை திருமணம் செய்தால், அந்த பெண்ணின் குடியுரிமை ரத்து செய்யப்படும். சொத்துரிமையும் ரத்து செய்யப்படும்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு, மற்றும் லடாக் பகுதியை சேர்ந்தவர்கள் கூட காஷ்மீர் அரசுப் பணிக்கு செல்லமுடியாது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது.

நிலம் வாங்க முடியாது என்று இருக்கும் போது எவ்வாறு தொழில் தொடங்க முடியும்? என்பதாலேயே அந்த மாநிலத்துக்கு பிற மாநிலத்தவர் எவரும் தொழில் தொடங்க செல்வதில்லை.

இத்தகைய காரணங்களால், 1947 ஆம் ஆண்டில் இருந்து விவசாயம், சுற்றுலா தவிர வேறு எந்த தொழில் அபிவிருத்தியும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனித்த பொருளாதார தன்மை எதுவும் கிடையாது. மத்திய அரசு வழங்கும் மானியத்தின் மூலமாகவே,  மக்களுக்கான நலத்திட்டங்கள் இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வந்தன. 

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 1947 ஆம் ஆண்டில் இருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்களை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வந்தது. மத்திய அமைச்சரவை, பாராளுமன்றத்தின் ஒப்புதல் இரண்டும் இன்றி அமல்படுத்தப்பட்டு வந்த சட்டப்பிரிவு 35ஏ தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதையடுத்து அதன் உட்பிரிவான 35ஏ இயல்பாகவே மரணத்தை தழுவுகிறது. ஏனெனில் சட்டப்பிரிவு 370 பிரிவுக்கு கூடுதலாக 35 ஏ வழங்கப்படுவதாகதான் அப்போதைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் இனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்ததோடு, அதற்கான தீர்மானத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக பிற மாநிலங்கள் எவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட்டு வருகின்றனவோ, அதுபோலவே இந்த 2 யூனியன் பிரேதசங்களும் செயல்படும் என தெரிகிறது. இனி அந்த பிராந்தியத்தில் இருந்து சிறப்பு அந்தஸ்து தனித்தன்மைகளை கோர இயலாது. இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் நாட்டின் பிறபகுதிகளில் வாழும் மக்களை போலவே இயல்பான சட்ட உரிமையை பெற முடியும்.  மேலும், பிற மாநிலத்தவர் இடம் வாங்க முடியும், தொழில் தொடங்க முடியும் என்பதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

சிறப்பு அந்தஸ்து ரத்து விளைவுகள் என்ன? முதல் பாகம்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP