கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18

திரைத் துறையிலும் இந்த டிமானிடைசேஷன் மற்றும் ஜிஎஸ்டியால் புதிதாகக் கருப்புப் பணத்தைக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, கருப்புப் பணத்தைக் கடனாக வாங்கியவர்களின் கடனை கருப்புப் பணத்தால் அடைப்பது மட்டும் தான்.
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18

ஓர் உண்மைச் சம்பவம் சொல்கிறேன். தென்னிந்தியாவிலேயே பெயர் பெற்ற ஒரு பெரிய நடிகர். தயாரிப்பாளர் அவதாரத்தில் படு அடி வாங்கிட்டார். கடன் மேல் கடன். இவருக்குக் கடன் கொடுத்த ஒரு மதுரைக்காரர் ( அன்பு அல்ல) நேரிடையாக சென்னையிலிருக்கும் அவரது வீட்டிற்குச் சென்று, சத்தம் போட்டு காசு வாங்கச் சென்றிருக்கிறார். 

நடிகர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். ‛‛ஃபைனான்ஸ் ஆள் உன் வீட்டில் இருக்கிறேன். இப்ப நீ இங்க வாரீயா இல்ல நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவா’’ என்று ஃபோனில் கேட்டிருக்கிறார். அடுத்த முக்கால் மணி நேரத்தில் நடிகர் அவருடைய வீட்டில் ஆஜர். வட்டியும் சரியாகக் கொடுக்காததால் கடுப்பாக இருந்த ஃபைனான்ஸியர், ‛‛அடுத்த வாரமே நீ அடமானமாகக் கொடுத்த நிலத்தை நான் விற்று காசாக்கிக்கொள்கிறேன்’’ என்று சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகர் செய்த காரியம் தான் அதிர்ச்சிகரமானது. 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18

தான் அமர்ந்திருந்த நாற்காலியிருந்து அப்படியே கீழே இருக்கும் இடைவெளியில் குழந்தை போல் நுழைந்து எதிரில் அமர்ந்திருந்த கடன் கொடுத்தவரின் காலைப் பிடித்துக் கொண்டு ‛‛ப்ளீஸ்யா அப்படியெல்லாம் ஏதும் செஞ்சுடாத… இனி இன்னொருவரிடம் போய் மானத்தை விற்று கடன் வாங்கும் நிலைமையில் இல்லை. அசிங்கப்பட்ட உன்னிடமே மறுபடி அசிங்கப்பட்டுட்டுப் போறேன். தயவு செய்து பொறுத்துக்கோ’’ என்று காலை விடாமல் கெஞ்சியிருக்கிறார். 

இத்தனைக்கும் கடன் கொடுத்தவர் அந்த நடிகரை விட வயதில் இளையவர். அப்படி இருந்த அந்த நடிகர் இன்றைக்கு கர்நாடகாவில் எம்.பி., தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி இடுகிறார். அதாவது கடனை எல்லாம் அடைத்து விட்டு, தேர்தலில் நிற்கும் அளவிற்கு பணம் புழங்குகிறது. 

இப்படி வசதியாக மாற அவர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அதாவது மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் கருவியாக மாறினார். அதாவது, திடீர் சமூக ஆர்வலராக அவதாரம் எடுத்தார். கௌரி லிங்கேஷ் கொலையை மத்திய அரசே செய்தது போல் துடித்துப் போய் கோபமாகக் கொந்தளித்தார். 

பிரதமருக்கு சவால் விட்டெல்லாம் அறிக்கை விட்டார். அவரை மீடியாக்கள் அதீதமாக லைம்லைட்டிற்குள் வைத்துக் கொண்டிருந்தன. தேசபக்தியை கிண்டல் செய்தார். அவ்வளவு தான். கடன்கள் அடைந்தன. கையில் இப்ப பணம் கொழிக்கிறது. இப்ப சந்தோசமாக மக்களைப் பார்த்து, லவ் யூ ச்செல்ல்லம்னு சிரிச்சுக்கிட்டே சொல்றார். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

சும்மா சாம்பிளுக்கு தான் மேலே சொன்ன நடிகர் கதை. இதே விபரத்துடன், கரு பழனியப்பன், பாரதிராஜா, வைரமுத்து, மணிரத்னம்,அமீர் தொடங்கி நேத்து முளைத்த காளான்களான ஆர்.ஜே பாலாஜி, முந்தாநேத்து டைரக்டரான அட்லி குமார், ரெண்டு மூணு தடவை டிவில முகத்தைக் காட்டிய காமெடி பாய்ஸ் வரை தனித்தனியா சொன்னால் நாலைந்து ஜிபி மெமரி தேவைப்படலாம். 

அந்தளவுக்கு முழுக்க முழுக்க தமிழ்த் திரை உலகத்தினை, பிரிவினைவாத சக்திகள் தங்கள் கைக்குள் வைத்திருக்கின்றன. இதில் சிக்காதவர்கள் யார் யார் என்றால், இன்றைக்கும் தங்கள் திறமை மீது திமிர் வைத்திருப்பவர்கள் மற்றும் இப்பொழுது சுயமாக வெற்றி பெற்றுவரும் திரைத் துறையினர் மட்டும் தான். மற்ற எல்லாரும் அடிமைகளாகி நாலைந்து வருடங்கள் ஆகி விட்டன.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18

‛ஏன் சார், எங்கோ மூலையில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த விசயம் ஒட்டு மொத்த தேசத்தையும் ஆளும் அரசுத் தலைமைக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிஞ்சும் சும்மாவா இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

முதலில் இந்த ஊடுருவலுக்குத் துணையாக அல்லது கண்டும் காணாமல் இருந்தது, போன முறை ஆண்ட மத்திய அரசு தான். இப்போதைய மத்திய அரசு, இது வரை எந்த குற்றவாளியையும் அவர்கள் பழைய குற்றத்திற்காக அடிப்பதோ வளைப்பதோ செய்யவில்லை.

 மாறாக, இனி அதே தவறை/குற்றத்தை இப்பொழுது செய்ய முடியாத மாதிரி சட்டங்களையும், திட்டங்களையும் வகுத்து கிடுக்கிப்புடி போடுகிறது. எகா: காஷ்மீரில் கல்லெறிந்தவர்களைப் பிடித்து  தண்டனை வழங்கவில்லை. பண மதிப்பிழப்பினைக் கொண்டு வந்ததன் மூலம் கள்ள நோட்டும் கருப்புப் பணத்தையும் முடக்கியது. 

அதனால், கணக்கில் காட்ட முடியாத பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியதால், கல்லெறிய காசு கொடுக்க முடியாமல் தளர்ந்து விட்டன. அதே போல் தான் நுகர்பொருள் பதுக்கல்காரர்களை நேரடியாகத் தண்டிக்காம ஜிஎஸ்டியை கொண்டு வந்து இனிமேல் பதுக்க முடியாமல் தடுத்து விட்டது. 

திரைத் துறையிலும் இந்த டிமானிடைசேஷன் மற்றும் ஜிஎஸ்டியால் புதிதாகக் கருப்புப் பணத்தைக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, கருப்புப் பணத்தைக் கடனாக வாங்கியவர்களின் கடனை கருப்புப் பணத்தால் அடைப்பது மட்டும் தான். 

அதுவும் ஓரளவுக்கு தான் செய்ய முடியும். கடைசி நேர பலத்தை எல்லாம் பிரயோகிக்கின்றனர் பிரிவினைவாதிகள்…. யார் வெற்றி பெறுவார்கள்? கமல்ஹாசன் போன்றோரின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP