கலகத்தால் பிறக்கும் நீதி...

அகில இந்திய அளவில் கட்சிகள் 2 அணிகளாக சேரத் தொடங்கிவிட்டன. இதில் சேராத மிச்ச சொச்சங்கள் 3 வது அணியாக போட்டியிடுகிறார்கள். ஆனால், கலககாரர்கள் போல சிலர் வெற்றிக்கு வெகு தொலைவில் இருந்தாலும் தனித்து களம் இறங்கி தேர்தல் முடிவுகளை மாற்றுகிறார்கள்.
 | 

கலகத்தால் பிறக்கும் நீதி...

கலகம் பிறந்தால் நீதி கிடைக்கும் என்பது உலக வழக்கமாக இருந்தாலும் தேர்தலில் அநீதியை தான் இழைக்கிறது. இந்தியாவில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பதிவு பெற்ற கட்சிகள், சுயேட்சைகள் தேர்தலில் களம் காண்கிறார்கள். 2018ம் ஆண்டு ஜூன் 20ம் தேதிப்படி தேர்தல் ஆணையத்தில் 2,064 கட்சிகள் பதிவு செய்து கொண்டு இருக்கின்றன. அதாவது நம்முடைய உரிமையை காப்பாற்ற ஒவ்வொரு தொகுதியிலும் 2,064 பேர் காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கட்சிக்கு ஒரு வேட்பாளர் என்று கணக்கிட்டால் அரசியல் கட்சிகள் மட்டும் 2,064 பேர் போட்டியிடுவார்கள். இதைத் தவிர சுயேட்சைகள். இது தான் இந்திய தேர்தலில் உண்மை முகம்.

அகில இந்திய அளவில் கட்சிகள் 2 அணிகளாக சேரத் தொடங்கிவிட்டன. இதில் சேராத மிச்ச சொச்சங்கள் 3 வது அணியாக போட்டியிடுகிறார்கள். ஆனால், கலககாரர்கள் போல சிலர் வெற்றிக்கு வெகு தொலைவில் இருந்தாலும் தனித்து களம் இறங்கி தேர்தல் முடிவுகளை மாற்றுகிறார்கள். 

இதற்கு வேலுார் பாராளுமன்றத் தேர்தலே சரியான உதாரணம். வேலுார் லோக்சபா தொகுதி புகழ் பெற்றது. கடந்த பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி தேர்தல் கமிஷன் அந்த தேர்தலையே ரத்து செய்தது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக, அதிமுக கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை மாற்றவில்லை. தேர்தல் கமிஷனும் அதற்கு எவ்விதமாக நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கலகத்தால் பிறக்கும் நீதி...

இரண்டாவது முறையாக தேர்தல் நடந்த போது திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மற்றும் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் உலக மகா யோக்கியர்கள் ஓட்டு போடுவதற்காக நோட்டோ வேறு. 
தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடங்கிய போது, ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்தார். 6வது சுற்றுக்கு பின்னர் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு வந்து 8 ஆயிரத்து 141 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டும் வெற்றிபெற்றார். ஆனால், நாம் தமிழர்கட்சியின் தீபலட்சுமி பெற்ற ஓட்டுகள் 26,995 பெற்றுள்ளனர். இதைவிட உலக மகா யோக்கியர்கள் 9ஆயிரத்து 417 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியும், நோட்டோவும் வெற்றிக்கான இடைவெளியை விட மிக அதிகம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட பெறாத வாக்குகள் மிக மிக அதிகம். இந்த சூழ்நிலையில், இவர்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். இந்த தேர்தலைப் பொருத்தளவில், இவர்கள் களம் காணாவிட்டால் இந்த ஓட்டு தேர்தல் முடிவை மாற்றி இருக்க முடியும். அல்லது கதிர்ஆனந்த் வெற்றியை மேலும் உறுதி செய்ய முடியும். 

கலகத்தால் பிறக்கும் நீதி...

இதை விட சுமார் 9 ஆயிரம் உலக மகா யோக்கியர்கள் இந்த தேர்தல் முறையையே கிண்டல் செய்துவிட்டு போய் இருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட்ட 28 பேரையும் இவர்கள் நன்றாக அறிவார்கள். அவரகள் அனைவரும் அயோக்கியவர்கள். கவுன்சிலர் பதவிக்கு கூட போட்டியிடாத இந்த உலகமகா யோக்கியர்களுக்கு அவர்களை பிடிக்கவி்லலை. 

இதையே இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்தார்கள் என்றால் பிரம்மச்சாரியாக, எழுதப்படிக்க தெரியாமல், நிர்வாணமாகவே, ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் வாழ்ந்து சாக வேண்டியது தான். இவர்கள் அனைவருமே தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சமரசத்திற்கு தயாராக இருக்கிறார்கள். பொது வாழ்கையில் யாரையும் பிடிக்காது. இவர்களாவது களம் இறங்கி நாட்டை திருத்தி இருக்க வேண்டும். 

குற்றத்திற்கு தண்டனை பற்றி மனு தர்மம் கூறும் போது, மற்றவர்களை விட பிராமணர்களுக்கு தண்டனை அதிகம் என்று கூறுகிறது. அதாவது மற்றவர்களாவது இது போன்ற தண்டனை சட்டங்கள், சாஸ்திர சம்பரதாயங்களை அறிந்து இருக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் தவறு செய்தால் தண்டனை குறைவு. ஆனால், இவற்றை எல்லாம் அறிந்த பிராமணன் தவறு செய்யும் போது தண்டனை அதிகம் விதிக்க வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. 

இதே போல நோட்டோவிற்கு ஓட்டுப் போட்ட இந்த உலகமகா யோக்கியர்களை கண்டறிந்து அடுத்த தேர்தல் வரை அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் சட்டத்தை மீறி கழிவு நீரை சாலையில் விட்டால் கூட கடும் தண்டனை வழங்க .வேண்டும். இவர்கள் தனிப்பட்ட யாரையும் கிண்டல் செய்யவி்ல்லை. இந்த நாட்டின் முறையை இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த கலத்தால் மக்களுக்கு அநீதி இழக்கப்பட்டிருக்கலாம். தேர்தல் கமிஷன் களம் இறங்கி நேட்டோவிற்கு ஓட்டு போட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கூறும் குறை உண்மையாக இருந்தால் அதை தீர்க்க முன்வர வேண்டும். அதை விடுத்து வெற்று கூச்சலாக இருந்தால் அந்த யோக்கிய சிகாமணிகள் அடுத்த 5 ஆண்டுகள் யோக்கியர்களாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கலகத்தால் பிறக்கும் நீதி...

சமுதாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காத விளையாட்டுகளில் ஒரே பைனல் என்று இல்லாமல், படிப்படியாக கழித்து விட்டு இறுதிப் போட்டியில் 2 அணிகள் மட்டும் மோதுகின்றன. அதிலும் அவர்கள் சமமாக இருந்தால் மேலும் விதிமுறைப்படி பல வாய்ப்புகள் வழங்கப்படுகி்ன்றன. 

ஆனால் தேர்தல் நடைமுறையில் ஒரே பைனல்தான். உதாரணமாக திருமாவளன் வெற்றி பெற்றது வெறும் சில நுாறு ஓட்டு வித்தியாசத்தில் தான். இது எப்படி வெற்றியாகும்?

சரி, ஜெர்மன் நாட்டின் முறை கடைபிடிக்கலாம் என்றால் அதிலும் பிழைகள் உருவாகின்றன. கடந்த சில தேர்தல்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற ஒரு அநாகரீகம் அரங்கு ஏறியது. மெஜாரிட்டி கிடைக்காத மாநிலங்களில் தற்போதும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. 
இந்த அநாகரீகத்தையே ஏற்றுக்  கொண்ட நாம் இந்த தேர்தல் முடிவுகளில் சிறிது மாற்றம் கொண்டு வரலாம். 

கலகத்தால் பிறக்கும் நீதி...

தற்போது நடக்கும் ஓட்டு எண்ணிக்கையை முதல் சுற்று என்று வைத்துக் கொள்வோம்.  முதல் 2 இடங்களில் இருப்பவர்கள் தவிர மற்ற வேட்பாளர்கள் தங்களின் ஓட்டுக்களை யாருக்கு வழங்குவது என்று கடைசி சுற்று முடிந்த பிறகு ரகசிய ஓட்டு எடுப்பில் வேட்பாளர்கள் கருத்தை அறிந்த அதை 2 சுற்றாக கருதி அவர்கள் ஓட்டையம் இணைத்து அதில் வெற்றி பெறுபவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கலாம். 
அல்லது வாக்காளர்கள் ஒரு ஓட்டுக்கு பதிலாக 2 ஓட்டுகள் போட செய்யலாம். அதில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை தவிர்தது மற்ற கட்சிகளுக்கு ஓட்டு அளித்தவர்கள் தங்களின் 2வது விருப்பத்தை எண்ணி அதற்கு அதை வெற்றி பெறப் போகும் வேட்பாளருடன் இணைக்கலாம். அப்படி செய்தால் தொகுதியில் உள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க முடியும். இப்போதைய நிலையில் வெற்றி பெற்றவருக்கு ஓட்டு போட்டவர்களை வித ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகம். இந்த முறைகளில் இதனை தவிர்க்க முடியும். எதிர்காலத்தில் செய்வோமா? 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP