உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ?

உயிர் வாழவே வழியில்லாத நிலையில் அகதிகள் உயிருக்கு அபாயகரமான முறையில் அண்டை நாடுகளை தேடி தஞ்சம் அடைய செல்கிறார்கள். எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் ஒரே ஒரு பை அல்லது பெட்டியில் மொத்த குடும்பத்திற்கும் தேவையான பொருட்களுடன் சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்கிறார்கள்.
 | 

உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ?

இந்தியா கடற்கரை ஓரத்தில் ஒரு கப்பல் வந்து நிறுக்கிறது. அதில் ஆண்,பெண், குழந்தைகள் என பஞ்சை பராரிகளாக பார்சி இனமக்கள் வாழ்விடம் தேடி வருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் மன்னரை சந்திக்க செல்கிறார்கள். இருவருக்கும் ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு புரியாத நிலை. மிகவும் சிரமப்பட்டு பார்சிகள் தங்களின் நிலையை மன்னருக்கு உணர்த்துகின்றனர். 

உடனே மன்னர் ஒரு சொம்பில் வழிய வழிய பால் எடுத்து வந்து, பார்சி மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்க சொல்கிறார். அவர்கள் அதனை புரிந்து கொண்டு, தங்களிடம் இருந்த சர்க்கரையை பாலில் கலக்கிறார்கள். மன்னருக்கு விஷயம் புரிந்து பார்சிமக்கள் குடியேற அனுமதிக்கிறார். இன்று ரத்தன் டாடா உட்பட பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்கும் பலர் பார்சி இனத்தவர்கள். மன்னன் பால் கொடுத்ததன் பொருள், நாங்களே இங்கு மிக அதிகம் பேர் இருக்கிறோம் என்பது, அவர் பாலில் சர்க்கரை கலப்பது போல, கலந்து விடுவோம் எங்களால் உங்களுக்கு எந்த வித பிரச்னையும் இருக்காது என்பது பார்சிக்கள் அளித்த பதில்.   

உலகின் அனைத்து நாடுகளிலும் அகதிகள் பிரச்னை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷனர் தெரிவித்த தகவல் படி, 2017ம் ஆண்டு கணக்கின்படி 6 கோடியே 56லட்சம் பேர் உலகம் முழுவதும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 

மத, இன, அடிப்படையிலான துன்புறுத்தல்கள், வன்முறைகள், உள்நாட்டு போர், இயற்கை இடற்பாடுகள் போன்றவை தான் ஒரு நாட்டின் மக்கள் மற்றொரு நாட்டிற்கு அகதிகளாக செல்ல காரணம்.

பிராந்திய வாரியாக ஆப்பிரிக்காவில், 4.413 மில்லியன், ஐரோப்பாவில்4.391 மில்லியன், ஆசியா மற்றும் பசிபிக்3.830 மில்லியன், மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க 2.739 மில்லியன் அமெரிக்காவில்746,800 பேர் அகதிகளாக உள்ளனர். 

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தான், மற்ற நாடுகளில் அகதிகளாக உள்ளனர். ஆனால், இந்தியாவில், காஷ்மீரத்து பண்டிதர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த மாநிலத்தில் மறு குடியேற்றம் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.

உயிர் வாழவே வழியில்லாத நிலையில் அகதிகள் உயிருக்கு அபாயகரமான முறையில் அண்டை நாடுகளை தேடி தஞ்சம் அடைய செல்கிறார்கள். எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் ஒரே ஒரு பை அல்லது பெட்டியில் மொத்த குடும்பத்திற்கும் தேவையான பொருட்களுடன் சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்கிறார்கள். 

அது சம்பந்தப்பட்ட நாட்டிற்கு செல்லுமா, அல்லது கடலிலேயே மூழ்கிவிடுமா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.2016ம் ஆண்டில் மத்திய தரைக்கடலைக்கடந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் அடைய முயன்று 5 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் இவ்வாறு இறப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 771 என 2015ம் ஆண்டில் இருந்தது. அந்த ஆண்டில் 10 லட்சம் அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்தனர். 

கடந்த, 2016ம் ஆண்டின் முதல் கலாண்டில் பயணத்தில் இறக்கும் அகதிகள் எண்ணிக்கை 37 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஐரோப்பிய நாட்டை நாடுபவர்கள் எண்ணக்கை மட்டும் தான். இதற்கு கடத்தல் காரர்கள் பாதுகாப்பற்ற முறையில் அகதிகளை அழைத்து செல்வது தான் காரணம். சமீபத்தில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவு பிழைப்பு தேடி அகதியாக செல்ல முயவன்ற தந்தை தன் மகனுடன் கடற்கரை யோரம் இறந்து கிடந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

உயிரை பயணம் வைத்து தஞ்சம் அடைபவர்கள் அனைத்து நாடுகளும் ஏற்பது இல்லை. அவ்வாறு இருக்கும் போது அகதிகள் தங்கள் நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல், தாங்கள் வந்த நாட்டிலும் உள்ளே செல்ல முடியாமல் கடற்கரையிலேயே தங்கள் வாழ்க்கையை  கழித்து பின்னர் கைது செய்யப்படுவார்கள் அல்லது, உயிர் துறப்பார்கள்.

அமெரிக்காவிற்கு ஆண்டிற்கு ஒன்று முதல் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக உள்ளே நுழைகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிகாவில் வசிப்பவர்கள், தற்போது இந்த இடத்தை ஆசிய நாடுகள் பிடித்துக் கொண்டன. 2007ம் ஆண்டு கணக்கு படி 13 லட்சம் ஆசியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்கள் எண்ணிக்கை இருந்தது. இது 2017ம் ஆண்டு 15 லட்சமாக உயர்த்துவிட்டது. சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து விட்டாலும், பினாமி சொத்து,கள்ளமார்க்கெட் போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

உள்ளூரில் அமைதி இல்லாததால் நாட்டைவிட்டு பாதுகாப்பாக அடைக்கலம் தேடுவோர், கடைசி வரையில் அமைதி இல்லாமல் தான் வாழ வேண்டி இருக்கிறது.

இதற்கு நிரந்தர தீர்வு உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுதான். கண்ணதாசன் கூறியதைப் போல இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமாக இருக்கும். இதற்கு ஐநாவுடன் இணைந்து உலக நாடுகள் கைகோர்க்க வேண்டியது அவசியம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP