மோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

பிரதமர் நரேந்திர மோடி, நாடு நாடாக சுற்றி இந்தியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தது போல, வரும் காலப் பிரதமர் நிச்சயம் செய்ய மாட்டார். நம்ம சிவகங்கை தொகுதி வேட்பாளர் விஷயத்தில் சிதம்பரத்தை எதிர்க்கவே தைரியம் இல்லாதவர்கள், அமெரிக்காவை எதிர்த்தா ஈரானிடம் பெட்ரோல் வாங்குவார்கள்.?
 | 

மோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

 
கடந்த லோக்சபா தேர்தலில், மோடியா, லேடியா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பிய போது, தமிழகத்தில், 37 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்து, லேடியின் பக்கம் தான் நாங்கள் என்று தமிழகம் காட்டியது.  அந்த சூழ்நிலையில், தமிழத்தில் வெறும் 2 இடங்கள், அதிலும் ஒன்று கூட்டணி கட்சி வெற்றி பெற்றாலும் கூட, அகில இந்திய அளவில் மெஜாரட்டியை தாண்டி பாஜக வெற்றி பெற்றது. 

அதன் பிறகு தமிழகம் ஏதோ தவறு செய்து விட்டது போலவும், இந்த தேர்தலில் தமிழகம் அதற்கு தீர்வு காண்பது போலவும் கதறுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், மத்திய அரசு செய்த மிகப்பெரிய நடவடிக்கை, ஈரானில் இருந்து எண்ணை இறக்குமதி செய்வது. 

அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை மீறியதால், ஈரானில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் அதை துச்சம் என மதித்த இந்தியா, கச்சா எண்ணை இறக்குமதி செய்தது மட்டும் அல்லாமல் அதையும் ரூபாய் அடிப்படையிலேயே இறக்குமதி செய்து, அமெரிக்காவின் முகத்தில் கரியை பூசியது. 

சீனாவுடன் பொருளாதார தகராறு உட்பட அமெரிக்காவின் பல வித நடவடிக்கைகளினால், இந்தியாவையும் பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை. இதனால், வெற்று சவடலால் விட்டு அத்துடன் மவுனமாகிவிட்டது. 

மோடியின் வெளியுறவுக் கொள்கைகளின் வலிமையால், ஈரானில் பெட்ரோல் இறக்குமதி செய்தாலும், பாகிஸ்தான் உள்ளேயே சென்று தாக்குதல் நடத்தி திரும்பினாலும், உலக நாடுகளில் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலைதான்.

இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால், தெற்காசிய நாடுகளின் முக்கிய இடத்தை இந்தியா பிடிக்கும். உலகின் பெரியண்ணன் அமெரிக்கா என்பதைப் போல, தெற்காசியாவின் பெரியண்ணன் இந்தியா என்ற நிலை உருவாகும். 
ஆனால், இதைப் பற்றியெல்லாம் இந்தியர்களுக்கு கவலையில்லை. இங்கு யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும் மோடி வரக் கூடாது என்ற ஒற்றை நிலைப்பாடுதான் உள்ளது. 

ராகுல், தன்னை தானே பிரதமாக ஏற்காத நிலையில் கூட, ஸ்டாலின் அவர்தான் பிரதமர் என்கிறார். எதிர் கட்சிகளோ யார் பிரதமர் என்றே முடிவு செய்யாமல், ஆட்சி தங்களுக்கு தான் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள். 
நாட்டின் 7 கட்ட தேர்தலில், 3 கட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. 

இதில் மோடி ஆட்சி வரலாம்; அல்லது வரலாமலும் போகலாம். அவர் வராமல் போனால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா கோடிட்டு காட்டி உள்ளது. அதாவது ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை தடை செய்ய வேண்டும், அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, நாடு நாடாக சுற்றி இந்தியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தது போல, வரும் காலப் பிரதமர் நிச்சயம் செய்ய மாட்டார். நம்ம சிவகங்கை தொகுதி வேட்பாளர் விஷயத்தில் சிதம்பரத்தை எதிர்க்கவே தைரியம் இல்லாதவர்கள், அமெரிக்காவை எதிர்த்தா ஈரானிடம் பெட்ரோல் வாங்குவார்கள்.? 

இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுத்தால், பின்னர் ஒவ்வொரு விஷயத்திலும் இதே நிலைப்பாடு தான் தொடரும். அது நாட்டுக்கு நல்லது அல்ல.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP