முத்தலாக் தடை இஸ்லாத்திற்கு எதிரானது?

முத்தலாக்கை எதிர்ப்பவர்கள், தங்கள் கருத்தினை முதலில் அவரவர் தாயிடம் பேசி விவாதியுங்கள். பிறகு சமூகத்திடம் விவாதிக்கலாம். முத்தலாக் தடை என்பது தனிமனித, மதம் சார்ந்ததல்ல. சமூகப் பாதுகாப்புக்கானது !
 | 

முத்தலாக் தடை இஸ்லாத்திற்கு எதிரானது?

மோதி ஒரு ஹிந்துத்துவவாதி அதனால் தான் இஸ்லாமியச் சடங்குகளுக்கு எதிராக சட்டம் இயற்றுகிறார். பாஜக சிறுபான்மையினர்களுக்கு எதிராகச் செயல்படும் என்பதை நிரூபிக்க இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை என சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், மோடி எதிர்ப்பாளர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். 

பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டம் எனக்கு எனக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கணும் என்பது நம்மில் பிரபலமான பழமொழி. அதாவது பெரும்பான்மை மக்களுக்கு இணக்கமான செய்கையே அந்தச் சமூகத்தின் சட்டமாக இருக்கணும். முத்தலாக் என்பது ஒரு மதத்தின் சட்டமாக இருக்கலாம். ஆனால், அது இங்கே இருக்கும் சமூகத்தைப் பாதிக்கும் என்றால் நிச்சியம் களைய வேண்டிய சட்டமே. 

முத்தலாக் தடை இஸ்லாத்திற்கு எதிரானது?

முத்தலாக் எப்படி சமூகத்தை பாதிக்கிறது? 

இன்ஸுரன்ஸ்-ஐ ஒவ்வொரு நாடும் ஏன் அத்தனைச் சிரமப்பட்டு தன் குடிமக்கள் எல்லாரையும் எடுக்கச் சொல்கிறது தெரியுமா? பொருளாதார இழப்பில் ஒரு குடும்பம் சிக்கினால், அந்தக் குடும்பத்தில் அடுத்த தலைமுறை கல்வி வாய்ப்பினைத் தவிர்க்க நேரிடும்.  கல்லாமையும் இல்லாமையும் சேர்ந்தால், அந்த மக்களிடையே விரக்தியில் தொடங்கி வன்முறையில் வந்து முடியும். அல்லது சமூகத்தின் கட்டமைப்பு உடைந்து ஒரு ஒழுங்கற்ற மண்ணின் மீது பிடிப்பற்ற சமூகமாக மாறிவிடும்.

முத்தலாக் தடை இஸ்லாத்திற்கு எதிரானது?

ஐரோப்பிய நாடுகளில் இன்றைக்கு ஜனத்தொகை வளர்ச்சி இறங்குமுகத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் ஆசியர்கள் அங்கே குடிபுகுந்தும். உயிர்ப் பெருக்கம் தான் உலக வளர்ச்சியின் சிறப்பான அடையாளம். ஐரோப்பாவில் மக்கள்தொகை இறங்குமுகமாகியதற்கு, அங்கே நிலவும் தனிமனிதச் சுதந்திரம் என்ற பெயரில் நிகழும் விவாகரத்துகள் தான். கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லாமல் விவாகரத்துகள் பெருகிவிட்டன. அதற்கு ஆதரவாக ஐரோப்பிய அரசாங்கமும் விவாகரத்துப் பெற்ற தம்பதிகளின் குழந்தைகளை ஆதரிப்பதாக சில சலுகைகள் வழங்கி வருவதால், தனியாக வளரும் குழந்தைகளுக்கு குடும்பப் பாசமோ, நாட்டுப்பற்றோ சமூகப் பொறுப்போ எதுவுமில்லாமல் தன் விருப்பு மட்டுமே முதன்மை என்று ஆகிவிட்டது. ஆகையால் இன்னும் அரை நூற்றாண்டுகளில் ஐரோப்பா கண்டத்தில் ஐரோப்பிய இனம் என்பது கிட்டத்தட்ட அழிந்து விடும். அல்லது மைக்ரோ மைனாரிடியாக மாறிவிடும். ஒரு தம்பதி விவாகரத்து செய்வதால் ஓர் இனம் அழியும் சூழல் உருவாகிவிடுகிறது.

இஸ்லாமியர்களின் இந்த ஷரியத் சட்டமான முத்தலாக் என்பது பர்தா அணிவது போன்ற தனிப்பட்ட விசயம் அல்ல. மேலும் முத்தலாக்கில் காட்டும் ஆர்வத்தில், ஈடுபாட்டில் பாதி அளவு கூட விவாகரத்து பெற்ற பெண்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் சமூக/ பொருளாதார பாதுகாப்பு என்பதில் காட்டுவதில்லை. விவகாரத்து செய்யப்படும் பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருந்த போதிலும், எத்தனை இஸ்லாமிய ஆண்கள் விதவைப் பெண்களையும், விவாகரத்து பெற்றவர்களையம், அவர்தம் குழந்தைகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்? இந்த விசயத்தில் மட்டும் இஸ்லாமியர், ஹிந்து, கிருத்துவம் எல்லாம் சமமாக விவாகரத்து பெற்றவர்களையும், விதவைகளயும் தவிர்க்கிறார்கள். 

முத்தலாக் தடை இஸ்லாத்திற்கு எதிரானது?

ஏற்கனவே உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடும் இந்தச் சூழலில் இது போன்ற ஜஸ்ட் லைக் தட் விவாகரத்துகளால் அனாதையாக்கப்படும் குழந்தைகள், கல்வி வாய்ப்புகளை இழக்கும் குழந்தைகள், வறுமைப்பிடியில் சிக்கும் குழந்தைகள் எளிதில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பிடியில் சிக்கி தங்கள் வாழ்வினை அழித்துக் கொள்வார்கள். 

மதங்கள் கடந்து, ஒரு பெண்ணாக, ஒரு தாயாக நினைத்துப் பாருங்கள். தான் பெற்ற குழந்தைகள் தன் கண் முன் ஏதோவொரு காரணத்திற்காக சீரழிந்து செத்துப் போவதை எந்தத் தாயாவது மனமுவந்து ஏற்றுக் கொள்வாரா? ஆசையாக அன்பாக வயிற்றைத் தொட்டுத் தொட்டு பார்த்து சுமந்து, குழந்தை பசிக்கு அழுமுன் அமுதூட்டி வளர்ப்பது,  தன் மகனும் வளர்ந்து சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதனாக வலம் வர வேண்டும் என்பதற்குத் தானே?  கருவை உருவாக்கிய கணவன் பாதியிலேயே கைவிட்டு விட்டால் அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்? முத்தலாக்கை எதிர்ப்பவர்கள், தங்கள் கருத்தினை முதலில் அவரவர் தாயிடம் பேசி விவாதியுங்கள். பிறகு சமூகத்திடம் விவாதிக்கலாம். 

முத்தலாக் தடை என்பது தனிமனித, மதம் சார்ந்ததல்ல. சமூகப் பாதுகாப்புக்கானது!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP