விவசாயிகளை அவமானப்படுத்துகிறதா மோடி அரசு?

சிறு விவசாயிகளுக்கு அதாவது ஐந்து ஏக்கர்களுக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6000/- மத்திய அரசு விவசாயிகளின் கணக்கிற்கே அனுப்பி வைக்கும் என்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.
 | 

விவசாயிகளை அவமானப்படுத்துகிறதா மோடி அரசு?

சிறு விவசாயிகளுக்கு அதாவது ஐந்து ஏக்கர்களுக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6000/- மத்திய அரசு விவசாயிகளின் கணக்கிற்கே அனுப்பி வைக்கும் என்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது அவர்களை அவமானப்படுத்துவது போன்ற செயல் இல்லையா? கடந்த நான்கு வருடங்களாக விவசாய பட்ஜெட் விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று போட்டு விட்டு, இப்பொழுது அவர்களுக்கு பணம் கொடுப்பது உங்கள் நிர்வாகத் தோல்வியா இல்லை விவசாயிகளின் ஓட்டினைக் குறிவைத்து விடப்பட்ட அறிக்கையா? என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கான பதிலுரையாக பியூஷ் கோயல் அவர்கள் சொன்னதன் சாரத்தையும் சேர்த்து பதிலாக்குகிறேன். 

முதலில், திடீர் மானஸ்தர்கள், சிறு விவசாயிகளுக்கு இந்தச் சலுகையைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், கேள்வியின் நோக்கம் விவசாயிகளின் சிரமம் போக்குவதா இல்லை மோடி அரசு அதிரடியாக ஸ்கோர் பண்ணியதன் எதிர் விளைவா என்று எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் நாம், அவர்கள் விவசாயிகள் மேல் கொண்ட அக்கறை என்ற கோணத்திலேயே பதில் சொல்வோம்.

விவசாயிகளை அவமானப்படுத்துகிறதா மோடி அரசு?

1, விவசாயிகளை இது அவமானப்படுத்தும் செயல் அல்ல. இது. விவசாயிகளுக்கான சன்மானம் / பிரதி மரியாதை என்று சொல்லியிருக்கிறார் பியூஷ் கோயல். இப்படியான மரியாதையோ சன்மானத்திற்கோ தகுதி இல்லாதவர்கள் என்று சொல்ல வருகிறார்களோ எதிர்க்கட்சியினர்?

2, இத்தனை ஆண்டுகாலமாக ஆண்டு வந்த கட்சி கடன் தள்ளுபடி கொடுத்த போது விவசாயிகளின் திறனைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கருதவில்லையா இவர்கள்? கடன் தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிர்வாகத்தையும் சிரமப்படுத்தும். மேலும், கடன் வாங்கினால் கொடுக்கத் தேவையில்லை என்ற நேர்மைக்குப் புறம்பான மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, கடன் தள்ளுபடி மனநிலையிலிருந்து விவசாய மக்களை மெல்லத் திசை திருப்ப, இப்படியான சலுகைகளை நேரடியாக அவர்களுக்கு வழங்குவது ஒருவகையில் பலனளிக்கும்

3, தொடர்ந்து விவசாய பட்ஜெட் போட்டுவிட்டு, இப்பொழுது விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது ஏற்கனவே போட்ட பட்ஜெட் வேலை செய்யவில்லை என்று காட்டுகிறதா? இல்லை. இப்பொழுது கொடுத்துள்ள சலுகை என்பது, ஏற்கனவே விவசாயிகளின் நல்வாழ்வுக்கு எடுத்து வரும் முயற்சிகளின் தொடர்ச்சி தான். 

விவசாயிகளை அவமானப்படுத்துகிறதா மோடி அரசு?

 (அ) இது வரை 22 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருக்கிறது இந்த அரசு. 65 வருடங்களாக ஆண்ட காங்கிரஸின் பங்கு என்ன இதில்?

 (ஆ) விவசாயிகளின் உடல்நலம் காக்க ஆயுஷ்மான் பாரத்தின் திட்டத்தில் (CPHC – Comprehensive Primary Health Care) இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது. இது போல காங்கிரஸ் காட்டிய அக்கறை என்ன?

(இ) 65 வருடங்களாக காங்கிரஸ் கொடுக்க முடியாத மின் இணைப்புகளை நான்கே வருடங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்த்தார்களே அதுவும் தேர்தலை மனதில் வைத்து தானா?

(ஈ) 2015லேயே மண் வள அட்டை திட்டம் (Soil Health Card Scheme) அறிவித்து அதன் மூலம் 17 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன்பெறச் செய்ததும் ஓட்டினை மனதில் வைத்து தானா?

(உ) வேம்பு தடவப்பட்ட யூரியாவை மானியமாகக் கொடுத்ததன் மூலம் மானிய உரங்கள் மற்ற தொழிற்சாலைகளுக்கு முறைகேடாகக் கடத்தப்படமால், விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலா இல்லை கணக்கு மட்டும் காட்டி ஓட்டு வாங்கும் எண்ணத்திலா?

(ஊ) பல்லாயிரம் ஹெக்டேருக்கு புதிய நீர்ப்பாசனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் விவசாயிகள் ஓட்டை மனதில் வைத்தா செயல்பட்டார்கள்?

விவசாயிகளை அவமானப்படுத்துகிறதா மோடி அரசு?

இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான விவசாய ஆதரவு செயல்பாடுகளில் இந்த ஆறாயிரம் ரூபாய் சன்மானமும் சேர்கிறது அவ்வளவு தான்.

காங்கிரஸ் கடன் தள்ளுபடியைத் தவிர வேறேதும் செய்ததே இல்லை. செய்வதாகச் சொன்னவை கூட அறிக்கைகளாக எழுத்திலேயே கிடந்தது. செயலிழந்து கிடந்ததால் தான் மக்கள் காங்கிரஸைத் தூக்கி எறிந்தனர். நிர்வாகக் குழறுபடியின் உச்சத்திலும், ஊழலின் அதலபாதாளத்திலும் வீழ்ந்து கிடந்த காங்கிரஸ், மேலே சொன்ன ஏதாவதொரு செயல்திட்டத்திற்குச் சமமாகவாவது செய்திருக்கிறதா? 

இத்தனையையும் மீறி தேர்தல் வெற்றியை மனதிற் கொண்டு தான் இந்த சலுகைகள் என்றால், இருந்து விட்டு போகட்டுமே…இந்தியாவில் எந்தக் கட்சியாவது தேர்தலை மனதிற் கொண்டு செயல்படாமல் இருந்தது இல்லை. இந்த விசயத்தில் மட்டும் மோடி அரசு ஏன் வேறுபடவேண்டும்?

போன முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடித்ததற்கு காங்கிரஸின் அதீத ஊழலும் அசமந்தமும் காரணம் என்றால், இந்த முறை ஐமுகூ ஆட்சியைப் பிடிக்க பாஜகவின் அசுர செயல்பாடு காரணமாக இருக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP