பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால்...

இந்த தாக்குதலுக்கு பின்னர் தான் தேசிய புலனாய்வு முகமையின் தேவை உணரப்பட்டது. அடுத்த சில நாட்களில் இந்த அமைப்பு உருவானது. நம்ம ஊரில் நடக்கும் சம்பவத்திலேயே லோக்கல் போலீஸ், தனிப்படை, போலீஸ், சிபிசிடி, சிபிஐ போன்றவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக வழக்கை விசாரிப்பார்கள் என்பதை அறிந்தால் தீவிரவாதிகள் கப்பல் வழியாக புகுந்தது எப்படி என்று எளிதில் புரியும்.
 | 

பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால்...

பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால் நடுத்துண்டு எனக்கு என்ற பழமொழி உள்ளது. இது வாழ்க்கையை இணக்கமாக நடத்தி வெற்றி பெறும் வித்தை மட்டும் அல்ல, நாட்டை வெற்றிக்கரமாக நடத்தி சமூகத்தை அமைதியாக பேணும் வழியும் இது தான்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன், பெட்ரோல் குண்டு வீசுவதும், அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு செல்வதும், கூட்டத்தில் பாம்பு விட்டு கலேபரம் ஏற்படுத்துவதும் தான் தீவிரவாதம். இதை நம்ம ஊரு ஏட்டையாவே சமாளித்துவிடுவார்கள். 

காலப் போக்கில் அனைத்து துறைகளும் வளர்ச்சியடையும் நிலையில், தீவிரவாதமும் பெருகிவிட்டது. சமீபத்தில் ட்ரோன் விமானத்தில் பட்டாசுகளை நிரப்பி அதனை வெடிக்க வைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் பெருகிவிட்டது.

நம் காவல்துறையினர் வைத்திருப்பதை விட, அதிநவீன ஆயுதங்களை பயங்கரவாதிகள் கையாள்கிறார்கள். இந்தியாவில் திட்டமிட்டு, இலங்கை சென்று சர்ச்சில் தாக்குதல் நடத்த முடிகிறது.  இந்த அளவிற்கு ஆயுத கையிருப்பு, மக்கள் தொடர்பு என்று தனி போர் நடத்தும் அளவிற்கு, தீவிரவாதிகள் வளர்ச்சியடைந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் சட்டங்களையும் நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பழைய காலம் போல கைது செய்ய அரஸ்ட் வாரண்ட் இருக்கா என்று குற்றவாளியை கேட்க வைக்கும் உரிமை கொண்ட சட்டங்களால் எதுவும் செய்ய முடியாது.

இன்னொரு புறம் இதை அமல்படுத்தும் அதிகாரிகள். அவர்களை சமாளிப்பது மிகவும் சிரமம். வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை விவிவிஐபி போல தரிசனம் செய்ய முடிகிறது. உள்ளூர் ரவுடிக்கே அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டத்தில் இவ்வளவு செல்வாக்கு என்கிற போது. சர்வதேச தொடர்புகளை கொண்ட, தீவிரவாத்தை பின்னணியிலும், ஜனநாயகம், மனித உரிமை, மனிதநேயம், மதம் போன்றவற்றை பின்னணியிலும் கொண்டவர்கள் செல்வாக்கு கணிக்க முடியாது.

பதுக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் இதே சாலைகளில் உள்ள அனைத்து செக்போஸ்ட்களையும் கடந்து தான் வந்துள்ளது என்பதன் மூலம் எவ்வளவு வலிமையற்றதாக நம் பாதுகாப்பு இருகிறது என்று கண்டறிந்து கொள்ளலாம்.

இது போன்ற சூழ்நிலையில் தான், தேசிய  புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரங்களை கொடுத்துள்ளது மத்திய அரசு.

26 -11 -2008 ஆம் ஆண்டு, 3 நாட்கள் மும்பையில் ஹோட்டல் தாஜ் உட்பட 11 இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் தான் நம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எத்தனை பெரிய வாய்கால் உள்ளது என்று தெரிந்தது. கடல் மார்க்கத்தில் வந்து தாஜ் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு பின்னர் தான் தேசிய புலனாய்வு முகமையின் தேவை உணரப்பட்டது. அடுத்த சில நாட்களில் இந்த அமைப்பு உருவானது. நம்ம ஊரில் நடக்கும் சம்பவத்திலேயே லோக்கல் போலீஸ், தனிப்படை, போலீஸ், சிபிசிடி, சிபிஐ போன்றவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக வழக்கை விசாரிப்பார்கள் என்பதை அறிந்தால் தீவிரவாதிகள் கப்பல் வழியாக புகுந்தது எப்படி என்று எளிதில் புரியும்.

அதன் பின்னர் படிப்படியாக தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரம் வலிமைப்படுத்தப்பட்டது. தற்போது இதை மேலும் வலுவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் ஒரு அமைப்பைத் தொடங்கி  இங்கு நடத்தி அதற்கு சவுதியில் நிதி திட்டிய போது, அந்த ஊர் போலீசார் (மோடி சர்கார் அல்லது, ஆர்எஸ்எஸ் அல்ல) அவர்கள் 14 பேரை கைது செய்தது. அவர்களை இந்தியா கொண்டு வருவதற்குள் அவ்வளவு சிரமங்கள். 

அவற்றை கடந்து இங்கே அவர்களை கொண்டு வர, 6 மாதம் கடந்து விட்டது. இதில் கற்ற பாடம் தான் தற்போது தேசிய புலாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே இதை செயல்படுத்த தொடங்கியது காங்கிரஸ் கட்சிதான். வேறு வழியில்லாமல் பாஜக அதை நிறைவேற்றி உள்ளது.

இதில், நம்மவர்கள் பலருக்கு மற்ற கட்சிகள் ஆதரிக்கலாம்; சிறுபான்மையினர் பாதுகாவல் தெய்வமான திமுக ஆதரித்தது பாவம் அல்லவா என்று கண்ணீர் விடுகிறார்கள். ஆனால்  திமுகவின் கொள்கை பிடிப்பு என்பது நாடகம் என்பதும் அனைவருக்கும் தெரியும். 

அடைந்தால் திராவிடநாடு, அடையாவிட்டால் சுடுகாடு என்று முழக்கியவர்கள், தனிநாடு கேட்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்றதும், தனிநாடு பெற்றால் நாமே ஆட்சி செய்யும் வாய்ப்பு இருக்கும் என்பதை அறிந்து கனத்த இதயத்தோடு திராவிட நாடு கோரிக்கையை ஏறக்கட்டியவர்கள்.

அதன் பின்னர் ஒவ்வொரு நடவடிக்கையும் அப்படிதான். உண்மையான சிறுபான்மையோருக்கு இது நன்கு விளங்கும்.
ஆனால் இப்போது திமுகவிற்கு எதிராக கூச்சல் போடுவர்கள் திமுகவினரும் அல்ல, சிறுபான்மையோரும் அல்ல, தங்கள் சட்டவிரோத, மறைமுக செயலுக்கெல்லாம் மத்திய, மாநில அரசுகள் தடைபோடும் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், தங்களை சிறுபான்மை ஓட்டு ஆசையில் தங்களை தாங்கி பிடிப்பார்கள் என்று நம்பி ஏமாந்தவர்கள் தான்.

ஒரு குளத்தில், குரங்கும் குட்டியும் விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது எதிர்பாராமல் தண்ணீர் வரவே, துாரத்தில் இருந்த குட்டியை தன்னருகில் தாய் குரங்கு இழுத்துக் கொண்டது. தண்ணீர் சற்று உயரவே குட்டியை துாக்கி முதுகில் வைத்துக் கொண்டது, இன்னும் நீர் மட்டம் உயரவே தலையில் துாக்கி வைத்துக் கொண்டது. 

அதையும் மீறி தண்ணீர் வந்ததும் குட்டியை துாக்கி எறிந்து விட்டு, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கரையை நோக்கி பாய்ந்ததாம் தாய் குரங்கு. அந்த தாய்குரங்கிற்கு இணையானது தான் திமுகவும். கட்சிக்கே ஆபத்து வரும் என்றால் சிறுபான்மை மட்டும் அல்ல, பெரும்பான்மையை கூட அவர்கள் கழட்டி விட தயங்காதவர்கள்.

தற்போது தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரம் வலுப்பெற்று உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. ஆனாலும் கைது செய்யப்படுகிறவர்கள் எல்லாம் குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்களாகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவும் தான் இருக்கப் போகிறார்கள். இதனால் மத்திய அரசு பழிவாங்குகிறது என்ற கோஷம் தொடரத்தான் செய்யும். இதில் இருந்து விடுபட வேண்டுமானால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவர்களை தங்கள் மதத்தில் இருந்து விலக்க மதவாதிகள் முன்வர வேண்டும். 

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ததும் சிலோன் தவ்கித் ஜமாத், இலங்கை தவ்கித் ஜமாத் போன்ற அமைப்புக்ள தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி கொடுத்தார்கள் அல்லவா, அதைப் போலவே இந்தியாவிலும் நடக்க வேண்டும். இங்கு இந்துக்கள், முஸ்லீம், கிறிஸ்தவர்கள் சகோதர்களாக வசிக்கிறோம் என்பதை அனைத்து மதத்தினரும் உணர வேண்டும். அவர்கள் பயங்கரவாதிகளை விலக்க முன்வர வேண்டும். எந்த ஆண்டவர்களை விடவும் நாடு முக்கியம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP