மீம்ஸ்களை கண்டு வியப்படைகிறேன்: மனம் திறந்தார் மாேடி

நான் எந்த ஒரு பெரிய அதிகாரிகள் அல்லது நபர்களுடனும் பேச தயங்கியது கிடையாது. சிறு வயது முதலே கூச்ச சுவபாவம் என்பது எனக்கு இருந்ததில்லை. யாரிடமும், எதைப்பற்றியும் தைரியமாக பேசுவேன்.
 | 

மீம்ஸ்களை கண்டு வியப்படைகிறேன்: மனம் திறந்தார் மாேடி

நடிகர் அக்ஷய் குமாருடனான பேட்டியின் போது, பிரதமர் நரேந்திர மாேடி கூறியதாவது:

நான் அணியும் உடை பற்றி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நான் பொதுவாக, அரைக்கை குர்தா அணிவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். தற்போது தான் அவ்வப்போது முழுக்கை குர்தாக்களை அணிகிறேன். 

என் இளமைக் காலங்களில் தோளில் ஒரு ஜோல்னா பை சுமந்து செல்வேன். அதில், எனக்கு தேவையான இரண்டு அல்லது மூன்று துணிகள் இருக்கும் அவ்வளவு தான். அதுவும் அரைக்கை சட்டையாக இருந்தால், அதை துவைக்கவும், அயர்ன் செய்யவும் வசதியாக இருக்கும். 

பாெதுவாக, தோற்றத்தில் கம்பீரத்தை காெண்டு வந்தால், நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் சிதறி ஓடிவிடும். தாழ்வு மனப்பான்மை வராது. அதற்காகவே, அந்தக் காலங்களில், எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பாத்திரத்தில், மரத்துண்டுகளால் ஆன நெருப்பை போட்டு, என் துணிகளை அயர்ன் செய்து அணிந்து கொள்வேன். இது என் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்தது. 

நான் எந்த ஒரு பெரிய அதிகாரிகள் அல்லது நபர்களுடனும் பேச தயங்கியது கிடையாது. சிறு வயது முதலே கூச்ச சுவபாவம் என்பது எனக்கு இருந்ததில்லை. யாரிடமும், எதைப்பற்றியும் தைரியமாக பேசுவேன். 

நான் கையில் அணிந்திருக்கும் கை கடிகாரத்தை, உள்பக்கமாக கட்டியிருப்பது ஏன் எனக் கேட்கிறீர்கள். எல்லோரும் வழக்கமாக அணிவது போல், கடிகாரம் அணிந்திருந்தால், ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில், நான் மணி பார்க்க நேர்ந்தால், அது அவரின் பேச்சை அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும். 
அதற்கு மாறாக, உட்புறமாக வாட்ச் கட்டினால், என்னால் சகஜமாக மணி பார்க்கவும் முடியும். எதிரில் அமர்ந்திருப்பவரை அவமதிக்காத மாதிரியும் ஆகிவிடும். இவையெல்லாம் ஒரு வகை மேனரிசம் அவ்வளவு தான். 

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய ஏராளமான மீம்ஸ்கள் வருகின்றன. அவற்றை பார்த்து எனக்கு கோபம் வரவில்லை, மாறாக ஆச்சரியப்படுகிறேன். நாட்டின் சாதாரண குடிமகனின் சிந்தனைத் திறனை என்னால் அறிய முடிகிறது. மீம்ஸ்களில் மாேடியை அதிகம் பார்ப்பதில்லை, அதில், அதை உருவாக்கியவரின் சிந்தனா சக்தியை பார்த்து வியப்படைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். 

இப்படி எனக்கெதிராக கருத்துப் பதிவிடுவதன் மூலம், அவர்கள் தங்கள் கோபத்தை வெளித்தள்ளிவிடுகிறார்கள் என்றால், அதுவும் ஒரு வகையில்  நல்லது தானே. தங்கள் மனைவி டிவிங்கிள் கண்ணா கூட, டுவிட்டரில் என்னை திட்டி கருத்துப் பதிவிட்டிருந்தார். அதற்காக நான் கோபப்படவில்லை. 

இவ்வாறு அவர் பேசினார். 

மோடியின் பேட்டி குறித்த இந்த தொடரில் இறுதிப் பதிவில் இன்னும் சுவாரசியமான பதிவுகளைக் காண்போம். 

தொடரும்....

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP