எத்தனை காலம் தான்  மேலே இருப்பவர் பார்த்துக்  கொள்வார்?

இன்னமும் கூட மோடி, அமித்ஷா புகழில் தாங்கள் மஞ்சள் குளிக்கலாம் என்று எண்ணினால், பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தோல்வியை தழுவும்.
 | 

எத்தனை காலம் தான்  மேலே இருப்பவர் பார்த்துக்  கொள்வார்?

பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான் அரசியல் கட்சியின் உயிர் நாடி. அவர்கள் தான் வார்டு அளவில் மக்களுடன் நெருக்கம் காட்டி உழைப்பார்கள். இந்த இலக்கணத்தை புரிந்து கொள்ளாத கட்சி தமிழக பாஜக என்று தான் இதுவரை இருந்தது. 

ஆனால் நாடுமுழுவதும் பாஜக நிலை அப்படித்தான் இருக்கிறது என்று மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி செய்கிறது. அந்த மாநிலத்தில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடந்துள்ளது. இதை தீர்க்க மாநில அரசு மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தலில் ஓட்டு போடும் வரை சிவசேனாவுடன் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த கட்சியை உதறிவிட்டு தனித்து தேர்தலை சந்திக்கும் அளவிற்கு மாநிலத்தில் கட்சியை வளர்க்கவில்லை. மக்கள் தங்களின் சண்டையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிவசேனாவும், பாஜகவும் புரிந்து கொள்ளவில்லை.

தங்களுக்குள் இருந்து வர வேண்டும் என்பதை விட வெற்றி பெறுபவர் தங்கள் நபராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிற்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. இதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து வெளியே வருபவர்களை தங்கள் கட்சியில் இணைத்து கொண்டு, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் தவறான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் பாஜகவினர். இதனால் தான் பாஜகவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றி பெறுகிறார்.

இப்படி மாநிலத்தில் பொறுப்பு வகிக்கும்  பாஜக ஆளும் மாநிலத்தில் கூட, மக்களின் பிரச்னைகளை தீர்க்க முன்வராத காரணத்தால் தான், மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களில் பலவற்றை இழந்து இருக்கிறது.

இன்னமும் கூட மோடி, அமித்ஷா புகழில் தாங்கள் மஞ்சள் குளிக்கலாம் என்று எண்ணினால், பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தோல்வியை  தழுவும். 
இதை ஒவ்வொரு மாநில தலைமையும் உணர்ந்து, உள்ளூரில் கட்சியை வளர்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP