பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது குதுரேமுக் சுற்றுலா தலங்கள். குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும்.
 | 

பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது குதுரேமுக்  சுற்றுலா தலங்கள். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. இவை ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும்.  குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும்.  

பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

இவை பசுமைப் பள்ளத்தாக்குகளையும், பசுமை மாறாக்காடுகளையும் கொண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலமாக குதுரேமுக் சுற்றுலா தலங்கள் உள்ளன. பலவிதமான இயற்கை சூழலைக்கொன்டுள்ள குதுரேமுக் பகுதியில் மலையேற்றப்பாதைகள் நிறைய உள்ளன.

பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

புல்வெளிப் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதால் வற்றாத ஆறுகளான துங்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன. பசும்புல்வெளிப் பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளுமாக காட்சியளிக்கும் இப்பிரதேசம் உயிரினங்கள் வாழ்வதற்க்கு ஏற்ற இடமாக உள்ளது.

பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

கர்நாடகாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காவாக குதுரேமுக் தேசிய பூங்கா இருக்கிறது. இந்த பூங்காவில் உயர்ந்த மலைப்பாறைகள், தாவரங்களும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை புல்வெளிகள் ஆகியவை உள்ளன.

இங்கு காட்டெருமை, புள்ளி மான், குரைக்கும் மான், சாம்பார் மான், மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், லாங்குர் குரங்குகள், இந்திய குரங்குகள், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கீரி போன்ற ஏராளமான வன விலங்குகள் இந்த வனவிலங்கு பூங்காவில் நிறைந்துள்ளன. ஒட்டியுள்ள அடர்ந்த கானகத்தில் புலிகள், சிறுத்தைகள், குள்ளநரிகள் மற்றும் காட்டு நாய் போன்ற வேட்டை விலங்குகளும் வாழ்கின்றன. இந்த தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளை இங்கு மிகவும் கவரக்கூடிய  இடமாக உள்ளது.இந்தப் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கு ஒருநாள் முழுவதும் கூட ஆகும்.

பசுமை மாறா குதுரேமுக்  சுற்றுலாத்தலம்...!

குதுரேமுக் பகுதியை ஒட்டி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில், ஹனுமங்கண்டி நீர்வீழ்ச்சி, கங்கா மூலா, லகியா அணை, கல்சா கோவில்கள், இந்த குதுரேமுக்கு அருகில் பல கோவில்கள் உள்ளன. குறிப்பாக, காலேஷ்வரர் கோயில்,கிரிஜும்பா கோயில்,ஹனுமான் கோயில்,வெங்கடராமனா கோயில்,ரஞ்சல் மஹாலட்சுமி கோயில்,வசிஷ்ட ஆசிரமம்,ஸ்ரீ சந்திரநாத சுவாமி கோயில் , இந்த கோவிலை எல்லாம் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய கோவிலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP