கண்ணை குத்திய பொன் ஊசி...!

இந்த சட்டசபைத் தேர்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை இழந்ததற்கு முழுமையான காரணம் பாஜ முதல்வர் வசுந்தரா தான். பொன் ஊசி என்பதால் அவரை பாஜ பாதுகாத்தது. அந்த ஊசி தற்போது கண்ணை குத்திவிட்டது !
 | 

கண்ணை குத்திய பொன் ஊசி...!

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவது வழக்கம். அதையும் மீறி இந்த முறையும் ஆட்சியை பிடித்திருக்கலாம். இந்த சட்டசபைத் தேர்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை இழந்ததற்கு முழுமையான காரணம் பாஜ முதல்வர் வசுந்தரா தான். 

கண்ணை குத்திய பொன் ஊசி...!

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் அதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 101 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜ 73 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6, பிறகட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஓட்டுகளை கவர்ந்து இழுக்கும் மையமாக இருந்த வசுந்தரா இந்த தேர்தலில் தோல்விக்கும் மையமாக மாறவிட்டார். 

கடந்த ஒர் ஆண்டிற்கு முன்பு இருந்தே அவருக்கும் பாஜ மத்திய தலைமைக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை. இந்து அமைப்புகளுடன் அவர் சரியான முறையில் உறவை பராமரிக்கவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாபாஜட் அனுபவமும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்  இளமையும் ஓட்டுக்களை கவர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர் புற தொகுதியில் வெற்றிக்கனியை பறித்த பாஜ, கிராமப்புறங்கள் அடங்கிய தொகுதியில் தோல்வியை தழுவி இருப்பது அக்கட்சி விவசாயிகளுடன் இன்னும் நெருங்க வேண்டி இருக்கிறது எனபதையே காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி வென்ற 101 தொகுதியில் 84 இடங்களில் அக்கட்சி பெற்று இருப்பது மாநிலத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது. 

என்னதான் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சி செய்தால் கூட ஆங்காங்கே கவர்ச்சிகரமான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் கொடுப்பதாக இருந்தால் எளிதில் ஆட்சி மாறும் என்ற விதி இங்கு பலன் கொடுத்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த 10 நாளில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்ற ராகுலின் வாக்குறுதி இந்த தேர்தலில் ஓட்டுக்களை மடைமாற்றம் செய்துள்ளது.

கண்ணை குத்திய பொன் ஊசி...!

நகர்புறக்கங்களில் பாஜ, காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இருப்பது அப்பகுதியினர்  ஒரே மாதிரியாகத்தான் இருக்கட்சிகளையும் பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அதே வேளையில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இணைந்தால் பாஜவின் வீழ்ச்சி இன்னும் பலமாக இருக்கும். 

அதே நேரத்தில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வசுந்தரா. கடந்த ஓராண்டாகவே அவருக்கும் பாஜ தலைமைக்கும் சுமுக உறவு இல்லை. வசுந்தரா தனியே கட்சி தொடங்கப் போகிறார் என்ற அளவிற்கு கட்சியுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் சந்தி சிரித்தது. அப்போதே அவரை முதல்வர் பதவியில் இருந்து அகற்றி விட்டு வேறு ஒருவரை முதல்வராக நியமித்து இருக்கலாம். அல்லது மாற்றுத்தலைமை ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டது பாஜ தலைமை செய்த தவறு.

விவசாயிகள் கடனை ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப்படும் என்ற ராகுலின் வாக்குறுதி விவசாயிகள் மத்தியில் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது இந்த மாநிலத்தின் இலக்கணம் என்றாலும், வசுந்தராவை மாற்றி வேறு ஒருவருடன்  தேர்தலை சந்தித்திருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் பொன் ஊசி என்பதால் அவரை பாஜ பாதுகாத்தது. அந்த ஊசி தற்போது கண்ணை குத்திவிட்டது !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP