பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடுத்து, அதனை அழகுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழகான பூங்கா தான் பிருந்தாவனம் தோட்டம்.
 | 

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடுத்து, அதனை அழகுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழகான பூங்கா தான் பிருந்தாவனம் தோட்டம். 

கிருஷ்ணராஜசாகரா படிநிலைப் பூங்கா என அழைக்கப்பட்ட இப்பூங்கா 60 ஏக்கருக்கும் மேல் மூன்று படிநிலைகளைக் கொண்டு, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா தோட்டமான ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அழகான மலர் படுக்கைகள்,  பசுமையான புல் வெளிகள், பலவகையான மரங்கள், பலவடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்கள், விதம் விதமான நீர் ஊற்றுகள் என்று பல்வேறு எழில் அம்சங்கள் நிறைந்து வழிகின்றன. உலகின் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. 

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

இந்த அணை புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர் சர். எம். விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைக்கப்பட்டது. அழகான வடிவத்திற்காகவும், பலவகையான செடிகளுக்காகவும், வண்ண மயமான விளக்கொளியின் அழகிற்காகவும், திகழும் இப்பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இரவில் விளக்கொளியில் பூங்காவின் அழகினை ரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். இந்த பல வண்ண மின் விளக்குகள் வார நாட்களில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் 7 மணி முதல் 9 மணி வரையும் எரியவிடபடுகின்றன.  

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

பூங்காவினைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். அகன்றும் உயரமாகவும் உள்ள மரங்கள், பரந்து விரிந்து கிடக்கின்ற புல் தரை, அழகான பூக்கள், இலைகளைக் கொண்ட செடிகள் போன்றவை பார்ப்பதற்க்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். 

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகள், படிகளில் நீர் இறங்கி வரும் விதம் பூங்காவின் ரசனையை நன்கு வெளிப்படுத்தும். மின்னொளியில் பூங்கா இன்னும் அருமையாக இருக்கும். இங்கு பல திரைப்பட காட்சிகள் ஏராளம் எடுத்துள்ளனர். இப்பூங்காவில் முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா என்ற நான்கு பிரிவாக அமைந்துள்ளது. இந்த பூங்காவின் மையத்தின் அமைந்துள்ள சிறு குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. 

பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம் தோட்டம்...!

அதுமட்டும்மல்ல பூங்காவின் வடக்கு பகுதியில் இசை நீருற்று ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இங்கு இசைக்கேற்ப நீரூற்று நடனமாடும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிருந்தாவன தோட்டமானது கர்நாடக மாநில அரசின் காவேரி நீர் பாசனத் துறையின் நேரடி பராமரிப்பில் உள்ளது.  பிருந்தாவன தோட்டம் கர்நாடகாவின் மைசூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 143 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வாழ்கையில் என்றும் காணாத காட்சிகளை காண வேண்டுமென்றால், பிருந்தாவன தோட்டத்திற்குத் தான் செல்ல வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP