போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2

அமித்ஷா போன்றவர்கள் வெறும்வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பது போல இது போன்ற டிவிட் செய்யும் முன்பு தங்கள் கருத்தை அப்படியே கொண்டு சேர்க்கும் தலைமை மாநிலங்களில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
 | 

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழகத்திலே, தேசிய சித்தாந்தத்திற்கு எதிராக பேசி பேசியே, மக்களை மூளைச்சலவை செய்து அரசியல் ஆதாயம் தேடி வரும் கட்சி திமுக.இந்நிலையில், தன் தந்தை குமரி அனந்தன், சித்தப்பா வசந்தகுமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களிடம் தொடர்பு அற்று இருந்தார் தமிழிசை. 

அதே தமிழிசை கவர்னர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாழ்துக்கூறியவர்களில், "அண்ணன் ஸ்டாலின் வாழ்த்தியது தான் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது: என்று கூறினார் என்றால் யாரைப் போன்றவர்களை பாஜக தலைவராக வைத்திருந்தது என்பதை அமித்ஷா உணர வேண்டும்.

தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையுடன் கூட ஒதுக்கபோகாத, அதற்கு எதிராகவே அரசியல் செய்து வரும் நபரின் வாழ்த்து தான் மிகப்பெரியது என பேட்டி அளித்த இவரின் தலைமையில் பாஜக எப்படி வளர்ந்திருக்க முடியும்? 

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2

சமீபத்தில் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், தமிழகத்தில், கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தான் தங்களை வீழ்த்தி வெற்றி கண்டவர் என புகழாரம் சூட்டினார். 

தேசிய சிந்தனைக்கு எதிராக செயல்படும் தலைவர் ஒருவரை பொது விழாவில் புகழ்ந்து பேசும் ஒருவரால் எப்படி பாஜக கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல இயலும்? அவர் கொள்கை பேசினாலும் யார் அதை நம்பி பாஜகவிற்கு ஓட்டளிப்பர்? 

இப்படித்தான் இன்னொருவர், பேராசிரியர் சீனிவாசன். அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் பாஜகவில் இணைந்திருப்பர் என பேசுகிறார். அவருக்கு ஏதேனும் புரிந்து தான்  பேசினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம். தேசிய சிந்தனைக்கு எதிராக தனி திராவிடம் என முழங்கி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிளர்ந்தெழ செய்து, தமிழகத்தை, தமிழ்நாடு என பெயர் மாற்றம்  செய்து, தமிழர்கள் மனதில், தாம் அனைவரும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வேறு பட்டவர்கள் என்பது போன்ற மாய எண்ணத்தை உண்டாக்கியத்தில் அண்ணாத்துரைக்கு முக்கிய பங்குண்டு. 

அப்படிப்பட்டவரை தேசிய சிந்தனைவாதி என கூறியதோடு மட்டுமின்றி, முற்றிலும் மாற்றுக்கருத்துடைய பாஜகவில் இணைந்திருப்பர் என பேசிய சீனிவாசனை, அறிவு ஜீவி என அந்த கட்சியில் உள்ளோர் பலரும் கூறி வருகின்றனர். 

நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும் தமிழகத்தில் தோல்வியை அடைய காரணம் பாஜக கொள்கைகளை சரியான விதத்தில் கொண்டு செல்ல தகுந்த தலைவர்கள் இல்லாததே என்பது அரசியலை உற்றுப்பார்க்கும் எவர்க்கும் தெரியும். 

 

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை ஐஸ் அவுஸ் மசூதி வழியாக செல்ல அனுமதியில்லை. அப்போது முதல் இன்று வரை திரு. ராமகோபாலன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஐஸ் அவுஸ் மசூதி வழியாக சிலையை கொண்டு செல்ல முயன்று கைது செய்யப்படுகிறார். இது போல பலர் இருக்கிறார்கள். அனைவருக்கும் தெரிந்தவர் என்பதாலேயே ராமகோபாலன் உதாரணமாக காட்டப்படுகிறார். 

ராமர் பாலம் தொடர்பான வழக்கில், விரல்விட்டு ஆட்டியவர், குப்புராமு. இவர் கட்சியின் மாநில துணை தலைவராக இருந்தும், கட்சி மேலிடத்தின் பார்வைக்கு எட்டாதவராய், மக்கள் மத்தியில், ஊடக வெளிச்சத்திற்கு வராதவராய் இருக்கிறார். 

ஊடகங்களில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற விவாதத்தில் இருப்பவர்கள் வெறும் 6 அல்லது 7 பேர் தானே. அவர்களில் ஒருவரை நியமனம் செய்தால், வழக்கம் போல திமுக ஊது குழலாகத்தான் பாஜக இருக்கும்.

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவினருக்கு திமுகவினர் பகைவர்களாகவே இருந்தனர். தாமரைக்கனி திமுகவில் இருந்த ஒரே காரணத்தால் அவர் சாவு மகனே செல்ல வில்லை. இந்த நடைமுறை தவறாக கண்டித்தக்கதாக இருந்ததால் கூட இது போன்ற நடைமுறைதான் திமுகவை எதிர்த்து அதிமுகவை வெற்றி பெற செய்தது.

ஆனால் இந்த இரண்டு கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய எந்த கட்சியும் ஆட்சி பற்றி கனவு கூட காண முடியவில்லை என்பதை பாஜக தேசிய தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2

அமித்ஷா போன்றவர்கள் வெறும்வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பது போல இது போன்ற டிவிட் செய்யும் முன்பு தங்கள் கருத்தை அப்படியே கொண்டு சேர்க்கும் தலைமை மாநிலங்களில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அது போன்ற தலைமை மாநில அளவில் ஏற்படுத்தி விட்டு தங்கள் பணியை தொடங்குவது அவசியம்.

இப்படி கோளாறு வாயர்களும், சுயநலவாதிகளும் கட்சியின் முக்கிய பதவிகளை அலங்கரித்து, சுயநலமற்ற, கொள்கை பிடிப்புடன் கூடிய தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வரை, தமிழக பாஜக பெறிய அளவில் அல்ல, புல், பூண்டு அளவு கூட வளர்வது சாத்தியம் இல்லை என்பதை அமித் ஷா உட்பட மேலிட தலைமை உணர வேண்டும். 

https://www.newstm.in/news/national/politics/70398-special-article-about-bjp-dmk-and-anti-hindi.html

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP