விபரீதமான விளையாட்டு அரசியல்...!

ஓலிம்பிக் பதக்கப்பட்டியலை பார்த்விட்டு 110 கோடி பேர் உள்ள மக்கள் தொகையி்ல் 100 பேர் கூட விளையாட்டு வீரர்கள் கிடைக்கவில்லையா? நம்மை விட சிறிய நாடு இத்தனை பதக்கங்கள் பெற்றுள்ளனவே என்று வெறுமையாக புலம்புவதால் எந்த விதமான பலனும் இல்லை.
 | 

விபரீதமான விளையாட்டு அரசியல்...!

விளையாட்டுதுறையில் ஆர்வம் உள்ளவர்கள் கூட அதனை கண்காணிப்பதோ, கவலை கொள்வதோ கிடையாது. களத்தில் இறங்கியவர்கள் மட்டும் கதாநாயகனாக தேர்வு பெறுவதால், அதற்கு பின்னால் உள்ள அரசியல் தெரியாமல் போய்விடுகிறது. விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றால் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான் என்பதால் களத்தில் இறங்கி வெற்றி பெறுவதுடன், வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதவர்களை களத்தில் இறங்கவிடாமல் செய்வதில் தான் மிகப் பெரிய லாபிகள் செயல்படுகிறது.

பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளாமல் நேரடியாக போட்டியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசின் அடிப்படையில் முந்தைய ஆட்சிக்காலங்களில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வந்துள்ளனர் என்றால் எந்த அளவிற்கு அரசியல் இந்ததுறையில் ஆட்சி செய்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளவே அரசியல் பின்புலம் வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. ஆனாலும், வீரர்கள் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டியதாக உள்ளது. 

புதுகை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஓட்டப்பந்தைய வீராங்கனை. 2006ம் ஆண்டு டோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதற்கு முன்பு வரை 11 சர்வதேச அளவிலான போட்டிகளில் 11, தேசிய அளவிலான போட்டிகளில் 50 பதக்கங்கள் பெற்ற இவர் டோஹா  வெற்றிக்கு பின்னர் பாலியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெண்ணே இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. வெற்றி பெற்ற பதக்கம் பறிக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், அவர் பெண்தானா என்ற சர்ச்சையே எழுந்திருக்காது. ஆனால், அவர் பெற்ற வெற்றி அவரின் பாலினத்தையே கேள்விக்குறியாக்கியவிட்டது. இந்த அடி அவரை அதற்கடுத்த போட்டிகளில் அவரை காணமுடியாமல் செய்து விட்டது. தற்போது பயிற்சியாளராக அவர் பரிணமித்து வருவது வேறு விஷயம். ஆனால் அந்த வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இவருக்கு பதிலாக வெற்றி பெற முடியாத யாரோ களம் இறங்கி தடம் பதிப்பார்கள்.

ஆனால், இவர் ஊக்க மருந்து போன்ற எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நேர்மையாக போட்டிகளை எதிர்கொண்டு, தன் சொந்த திறமையால் வெற்றி பெற்றார். இருந்தும் அவருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. 

விபரீதமான விளையாட்டு அரசியல்...!

சாந்தியின் சர்ச்சை நடந்து 13 ஆண்டுகள் கழித்து, அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. தோகாவில் நடந்த அதே ஆசிய போட்டியில் அதே 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக கோமதி, தற்போது சிக்கலில் மாட்டி உள்ளார். திருச்சி மாவட்டம் முடிகண்டத்தை சேர்ந்தவர் கோமதி மாரிமுத்து. 

சாலை வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்த இவருக்கு வெற்றிப்பாதை அமைத்து தந்தவர் அவர் தந்தை. அவரின் விடாமுயற்சியால் கோமதி ஆசியப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.  அவர் வெற்றிக்கு பின்னாள் தமிழகம் முழுவதும் அவரை கொண்டாடிய பிறகு கிடத்த தட்ட ஒரு மாதம் கடந்து கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தி வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

‛முதற்கட்டமாக நடந்த ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில், கோமதி ஊக்கமருந்து உட்கொண்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த கட்ட சோதனையிலும் அவர் தோல்வி அடைந்தால், பதக்கம் பறிக்கப்படும், 4 ஆண்டுகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று தேசிய தடகள சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் பாட்டியலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியிலேயே கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆனால் அதுகுறித்து சரியான தகவல் கிடைக்காததால், அவர் ஆசிய தடகள போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார். காேமதியின் செயலால், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் மங்கிவிட்டது’ என அவர் கூறினார். 

விபரீதமான விளையாட்டு அரசியல்...!

கோமதி ஊக்கமருந்து உட்கொண்டாரா என்பது முழுமையாக நிரூபணம் ஆகாத நிலையில், தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு ஆதரவாக பொங்குவதோ, இவர்கள் இப்படித்தான் என திட்டித் தீர்ப்பதோ கூடாது. 

முடிவுகள் வெளிவரும் வரை பொறுமை காப்பது நல்லது. அவர் உண்மையிலேயே ஊக்க மருந்து உட்கொண்டிருந்தால், அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தான். சர்வதேச அளவில், நம் நாட்டிற்கு எந்த ஒரு வீரரும் அப்படிப்பட்ட தலைகுனிவை ஏற்படுத்தித் தரக் கூடாது. 

எனினும், அவர் மீது வீண் பழி சுமத்தப்படுகிறதா என்பதையும் ஆராய வேண்டும். ஆசியாவில் உள்ள பல நாடுகள் பங்கேற்கும் போட்டி என்பதால், இவரின் ஏழ்மை நிலை, ஜாதிய பின்னணி போன்றவற்றையெல்லாம் குறி வைத்து தாக்குவதாகவும் நாம் எண்ண முடியாது, எண்ணவும் கூடாது. 

இன்றைய நவீன உலகில், ஒருவர் செய்யும் தவறை புட்டுப் புட்டு வைக்கும் அதிநவீன சாேதனைகள் எவ்வளவோ வந்துவிட்டன. எனவே, விளையாட்டு வீரர்களின் திறமையில் அரசியல் கலப்பு இருக்கக் கூாடது என எண்ணும் அதே நேரத்தில், நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டும் விவகாரத்தில், விளையாட்டு வீரர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். 

எது எப்படியோ, ஒருவர் மீதான புகார் அல்லது குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதற்கு முன், அவரை துாற்றவும் கூடாது.  அதே சமயம் அவர் தமிழர், இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக தவறு செய்த நபரை துாக்கிப்பிடிக்கவும் கூடாது. எதிலும் நடுநிலையோடு நடப்பது நல்லது. 

neewstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP