ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!

பல நூற்றாண்டுகளாக இந்தியர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள செயல்முறைகள், இஸ்லாமியர்களின் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது, இதை இந்தியர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
 | 

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!

திலீப் பத்கோங்கர் : கடந்த முறை  நீங்கள்  டைம்ஸ் ஆப் இந்தியாவிற்காக அளித்திருந்த பேட்டியில், உங்களின் கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி தவறாக புரிந்து கொண்டுவிட்டதென்று நினைக்கிறீர்களா??

வி.எஸ். நைபால் : நான் வரலாற்றை பற்றியும், வரலாற்றினால் இனி வரும் காலங்களில் ஏற்படவிருக்கும் சம்பவங்களையும் கருத்தில் கொண்டு தான் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். பல நூற்றாண்டுகளாக இந்தியர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள செயல்முறைகள், இஸ்லாமியர்களின் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது, இதை இந்தியர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இதை தான் நான் முன்வைக்க விரும்பினேன்.  நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. எனினும், இதை யார் தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், இதனுள் இருக்கும் உண்மையை அனைவரும் ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். 

திலீப் பத்கோங்கர் : அயோத்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த செயல் வெறும் இனவாதத்திற்கு எதிரான செயலாக இருக்கக்கூடும் இல்லையா ??

வி.எஸ். நைபால் : இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அப்படி இருந்தால் அவற்றை தீர்க்க இரு இனத்தவரும் முன் வரவேண்டும். ஒரே பகுதியில் பல நூற்றாண்டகளாக வாழ்ந்து வரும் இந்துக்களும், முஸ்லிம்களும், இருவரின் கொள்கைகளையும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதே என்னுடைய கருத்து. இந்த நிலை மாறவேண்டுமென்றால், இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

திலீப் பத்கோங்கர் : மார்க்சிய சிந்தனைகளை நீங்கள் கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். அவர்களின் கொள்கைகளில் நீங்கள் பெரிய குறைபாடாக எதை பார்க்கிறீர்கள் ??

வி.எஸ். நைபால் : வரலாற்றில் குறிப்பிடும் மார்க்சிய சிந்தனைகள் தற்போதைய மார்க்சிய அரசியலில் இல்லை. அந்த ஒரு காரணம் போதுமென்று நினைக்கிறேன்.

தொடரும்.........

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP