மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

புராணங்களின் படி இந்த மலைக்கு வராஹ பர்வதம் என்று பெயர். மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும், வலது கொம்பிலிருந்து வடிந்த வியர்வை பத்ரா நதியாக பாய்ந்ததாக வரலாறு.
 | 

மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை பாயும் மிக புனித தலமாக விளங்குகிறது துங்கபத்திரா ஆறு .  வரலாற்று சிறப்பு மிக்க இடமாக கருத்தப்படும் ஹம்பி நகரம் இந்த  ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது என கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில், கங்க மூலா எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. 

மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

புராணங்களின் படி இந்த மலைக்கு வராஹ பர்வதம் என்று பெயர். மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும், வலது கொம்பிலிருந்து வடிந்த வியர்வை பத்ரா நதியாக பாய்ந்ததாக வரலாறு.

மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

இந்த துங்கபத்ரா ஆற்றின் மீது பெரிய அணை ஒன்று நீர் மின் உற்பத்திக்காக  கட்டப்பட்டுள்ளது.    சரித்திர காலத்தில் விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் பலர் நீர்வழிகள், கால்வாய்கள் மூலம் இந்த ஆற்றை பயன்படுத்தி இருக்கலாம் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. விஜய நகர ஆட்சியில், துங்கபத்திரை ஆற்று நீரை அரண்மனைக்கு தேவையாக நீரை  பூர்த்திசெய்யும் அளவிற்கு பயன்பட்டுள்ளது. இது தவிர விஜயநகர ஆட்சியில் வெட்டப்பட்ட விவசாய பாசன கால்வாய்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன என்பது வியப்பளிக்க கூடிய விஷயமாகும்.  இந்த ஆற்றில் தான் ஹம்பியில் அமைந்துள்ள கோயில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.

மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

துங்கபத்திரா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு சரிவில் இருந்து கர்நாடகத்தில் பாய்கிறது. இது பின்னர் வடகிழக்கு திசையில் தக்காண சமவெளியில் கருங்கற்களின் மேல்  குவைந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கிறது. இந்த ஆறு செல்லும் காட்டு பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறை குவியல்கள் நிலத்தோற்றத்தில் பெரும் அம்சமாக உள்ளன. இந்த ஆறு மேற்க்கு தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னும் இடத்தில் உள்ள வராகா பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. 

மஹா விஷ்ணுவின் வியர்வை, நதியாக மாறிய துங்கபத்திரா...!

இதன் நீளம் 147 கிலோமீட்டர்  ஆகும். துங்கபத்ரா ஆறு இறுதியாக ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா ஆற்றுடன் கலந்து கடைசியில் வங்காள விரிகுடாவில் சேர்கிறது. துங்கபத்திரா ஆற்றின் மீது பல கோவில்கள் உள்ளன. ஹம்பியின் கரையிலிருந்து துங்கபத்திரை ஆற்றை பார்த்து ரசிக்கும் அனுபவமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கிறது. பண்டைய காலத்தில் இந்த துங்கபத்திரை ஆறு பம்பா ஆறு என்றே அழைக்கப்பட்டது. புராண ஐதீகங்களின் படி பிரம்மாவின் புத்திரியான பம்பா சிவனை நினைத்து தவம் செய்ததாகவும், அதனால் கவரப்பட்ட சிவ பெருமான் பம்பாவை மணம் செய்து பம்பா பதி என்ற பெயரில் அழைக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

துங்கபத்ரா நதிக்கரை  இன்றளவும், இயற்கை எழில், புராதானச் சின்னங்கள், தெய்விகம் என அனைத்து குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற துங்கபத்ரா, ஜீவநதியாகவே திகழ்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP