அறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்? 

தேசம் துண்டாடப்பட்டதையும், மண்ணின் மைந்தைர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், குடும்ப பெண்கள் கும்பல் பலாத்காரத்துக்கு ஆளானதை பார்த்தும் வெறி கொண்ட கோட்சே, காந்தியை சுட்டுக் கொன்றதாகவே, அவரது வாக்கு மூலத்தில் பதிவாகியுள்ளது.
 | 

அறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்? 

கமல், நீங்கள் பேசுவது எதுவும் புரியவில்லை என்பதால் உங்களை அறிவுஜீவி என்று ஒரு சிலர் ஏற்றுக் கொண்டார்கள். அதனால், நீங்கள் பேசுவது எல்லாம் அறிவஜீவித்தனமாக மாறிவிடாது. அறிவஜீவித்தனத்திற்கும், அகராதிதனத்திற்கும் சிறிது தான் வேறு பாடு. 

நீங்கள் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், உங்கள் வேட்பாளரை ஆதரித்து பேசியது தான், அகராதிதனத்தின் இலக்கணம். நாடு முழுவதும், இஸ்லாமியர்கள், இந்துகள் இடையே மோதல் ஏற்பட்டாலும், பள்ளப்பட்டியில் சிறு அதிர்வு கூட ஏற்படாது. 

அதற்கு காரணம் இங்கு பிறந்த இஸ்லாமியர்கள் வெளி ஊர், வெளிமாநிலம், வெளிநாடு என்று பரவலாக வாழ்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் பெண்கள் மட்டும் பள்ளப்பட்டியில் இருப்பதால், எந்த ஊரில் மத ரீதியான மோதல் ஏற்பட்டாலும், இங்கு ஏற்படாது. இந்துக்கள் தான், அங்கு பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாது.

இந்த இடத்தின் இலக்கணம் புரிந்து கொள்ளலாமல், நீங்கள் இந்த கருத்தை உதிர்த்தது மகா மகா முட்டாள்தனம்.

‛சுந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’ என்கிறீர்கள். நான் ஏன் காந்தியை கொன்றேன் என்று நீதிமன்றத்திலேயே கோட்சே வாக்குமூலம் அளித்து, அது தற்போது நுாலாக வெளியே கிடைக்கிறது. அதை நீங்கள் படித்தீர்களாக இல்லையா என்று தெரியாது.

அறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்? 

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, தன் செயலுக்கான காரணம் குறித்து நீதிமன்றத்தில் கூறியதாவது:
‛‛ இந்துக்கள் காந்தி மீது கொண்ட மரியாதையை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர். 1946ம் ஆண்டு முஸ்லீம்கள் இந்துக்களை கொன்று குவித்த போதும் கூட, டில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் குரானை ஓத வேண்டும் என்று காந்தி வற்புறுத்தினார்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், பஞ்சாபில் இந்துக்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்துகள் ரத்தம் ஆற்றில் வெள்ளமாக பாய்ந்தது. மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் முஸ்லீம்கள் வெறியாட்டத்தில் 11 கோடி இந்துக்கள் வீடு இழந்தனர், இதையெல்லாம் பார்த்த பின்னரும் முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமும் இல்லை என்று காந்தி பரிந்து பேசினார். 

இஸ்லாமியர்கள் உங்களை அடித்தால், அதை வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் கொன்றாலும் எவ்வித கலவரமும் செய்யாமல் இறந்து போங்கள் என, இந்துக்களிடம் காந்தி வேண்டுகோள் விடுத்தார். 

இப்படி தொடர்ந்து இந்துக்களை வஞ்சித்த காந்தியை பார்த்து அவர் மேல் எனக்கு காேபம் வந்தது. அவரை கொன்றால், கலவரம் முடிவுக்கு வரும் என நினைத்தேன் அதனால் கொன்றேன்’’ என கோட்சே கூறினார். 

ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற வெவ்வேறு இயக்கங்களில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கோட்சே, கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஒருவர், தலைவராக இருந்த இந்து மகாசபையில் இருந்த போது தான், காந்தியை சுட்டுக் கொன்றார். 

அதன் பின், தானே சரண் அடைந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. தன்னை துாக்கிலிட்ட பின், தன் உடலை எரித்த சாம்பல், எந்த நதியிலும் கரைக்கப்படக் கூடாது எனக் கூறினார். சிந்து நதி மீண்டும் இந்தியாவுடன் இணைந்த பிறகு தான், அதை கரைக்க வேண்டும் எனவும், உயில் எழுதி வைத்துள்ளார். இன்றளவும் அவரது அஸ்தி, இந்து மகா சபையினரால் பாதுகாக்கப்படுகிறது. 

அறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்? 

தேசப் பிரிவினைக்குப் பின், எல்லையில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்களை நிறுத்தி வைத்து, இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் செல்ல விரும்புவோரை பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என, ராஜாஜி கூறினார். ஆனால், நேருவும், காந்தியும் அவரது குரலுக்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் ராஜாஜி எச்சரித்தது போலவே, ரத்த ஆறு ஓடியது. 

நாட்டின் மிகப் பெரிய கலவரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, பாகிஸ்தான் நிதி நிலையை சமாளிக்க, இந்திய அரசு 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஜின்னா கேட்டார். அப்போதும், அவர்களுக்கு அந்த தொகை தந்தே ஆக வேண்டும் என, காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

சுதந்திர போராட்டத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தை, சுதந்திரத்திற்குப் பின் கலைத்துவிட வேண்டும் என காந்தி கூறினார். ஆனால், ஒரு சில அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காகவே, காங்கிரஸ் இயக்கம் அரசியல் கட்சியாக தொடரப்பட்டதாகவும், காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் இன்றும் பேசி வருகின்றனர். 

தேசம் துண்டாடப்பட்டதையும், மண்ணின் மைந்தைர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், குடும்ப பெண்கள் கும்பல் பலாத்காரத்துக்கு ஆளானதை பார்த்தும் வெறி கொண்ட கோட்சே, காந்தியை சுட்டுக் கொன்றதாகவே, அவரது வாக்கு மூலத்தில் பதிவாகியுள்ளது. 

தேசப் பிரிவினை, படுகொலை சம்பவங்கள், பாலியல் பலாத்காரங்களால் காெதிப்படைந்த ஒரு சராசரி குடிமகன், அந்த கொடுமைகளை நிறுத்த தவறிய தலைவன் மீது தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான். காந்தியை சுட்டுக் கொல்கிறான். இதில் எங்கிருந்து வந்தது மதம். அதிலும், குறிப்பாக, இந்து தான் முதல் தீவிரவாதியாம். 

அறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்? 

அது எப்படி கமல் உங்களால் திரைப்படங்களில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும், யதார்த்தில் இந்து தீவிரவாதம் என்றும் பேச முடிகிறது. விஸ்வரூபம் படித்தில் நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசிதற்கே படத்தை ஓடவிடாமல் அவர்கள் முடக்கினார்கள். ஆனால் கோட்சே பற்றிய உங்கள் கருத்துக்கு, அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் பெரிதாக விமர்சனம் செய்யவில்லை. இதில் இருந்தே நீங்கள் கூறியது போல் இந்துக்கள் தீவிரவாதிகளா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. 


உங்கள் பாணியில் கோட்சே, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட காரணம் நீங்கள் இல்லை. தமிழகத்தில் வாழ்பவர்கள் தான் காரணம்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பின்னரும், பிரபாகரன், அவர் மகன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பொசுக்கிய பின்னரும் கூட, அந்த நாட்களில் போராட்டம் நடத்திய தமிழர்கள் இன்று அதே காங்கிரஸ், திமுக கூட்டணியை ஏற்று ஓட்டுப் போடுகிறார்கள் அல்லவா, அது போன்றே, கோட்சேயும் இருக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு தான் இப்படி பேச வைத்திருக்கிறது.


இவை எல்லாம் தெரிந்து கூட நீங்கள் கோட்சே பற்றி கூறியிருப்பது, அறிவுஜீவி தனம் அல்ல, யார் என்ன செய்ய முடியும் என்ற அகராதித்தனம். நீங்கள் இவ்வாறு பேசியதன் மூலம், ஒரே நாளில் தமிழகத்தின் பேசும் பொருளாக மாறியதில் வெற்றி பெற்று இருக்க முடியும். 

ஆனால் பேசிய அகராதித்தனத்திற்கு பதில் கிடைத்தே தீரும்.தமிழக வாக்களார்கள் உங்களை நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள், இந்த தேர்தலில் சொர்ப்ப ஓட்டுகள் பெற்றிருந்தால் கூட, அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களை உங்களை முற்றிலும் புறந்தள்ளுவர். 

திரைத்துறையில் முற்றிலும் வாய்ப்பு முடிந்து போனதால், தற்போது, அரசியல்வாதி வேடம் போட்டு வீதியில் நடிக்க வந்துவிட்டீர்கள். இதிலும் உங்களுக்கு தோல்வி தான் மிஞ்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


* இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP