தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

கடந்த 1530-ஆம் ஆண்டில் இக்கோவில் எழுப்பப்பட்டதாக வரலாற்று புராதாணகதைகளில் சொல்லப்பட்டுள்ளது. அஸ்கந்த புராணத்தில் சிவபெருமானுக்குரிய புனித யாத்திரைத் தலங்களில் லேபக்ஷியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 | 

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

ஆந்திர – கர்நாடக எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு சற்று அருகே உள்ள ஆமை வடிவிலான கூர்ம மலை மீது உள்ளது இந்த வீரபத்திரர் ஆலயம். விஜயநகரப் பேரரசரான அச்சுத நாயக்கரின் ஆட்சிக் காலத்தில், இப்பகுதியின் வரி வசூலிப்பு அதிகாரிகளாக இருந்த விரூபண்ண நாயக்கர் – வீரண்ண நாயக்கர் என்ற சகோதரர்களால், கடந்த 1530-ஆம் ஆண்டில் இக்கோவில் எழுப்பப்பட்டதாக வரலாற்று புராதாணகதைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்பே லேபக்ஷிர் வீரபத்திரர் திருத்தலம், புண்ணிய தலமாக மதிக்கப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானுக்குரிய புனித யாத்திரைத் தலங்களில் லேபக்ஷியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலையழகு கொஞ்சும் சிற்பங்களுக்கும், சித்திரங்களுக்கும் உலகப் புகழ்பெற்றுள்ளது, இந்த லேபக்ஷி வீரபத்திரர் ஆலயம். கோவில் கருவறையில், சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர், விக்ரகமாக கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். 

பல்வேறு ஆயுதங்களைத் தரித்து ஆவேசமாக உள்ள அவரை அலங்கரித்திருக்கும் மண்டையோட்டு மாலை மேலும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. ஆணவம் கொண்ட தக்ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவபெருமான் உருவாக்கிய அம்சம்தான் வீரபத்திரர் திருக்கோலம் என கூறப்படுகிறது. இங்கு உள்ள அர்த்த மண்டபத்தின் விதானம் எனப்படும் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள பிரம்மாண்ட சுவரோவியம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். 24 அடி நீளமும் 14 அடி அகலமும் கொண்ட இந்தச் சுவரோவியத்தில் வீரபத்திரர், யோகதட்சிணாமூர்த்தி, ஹரிஹரர், சண்டேச அனுக்ரஹ மூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட சிவபெருமானின் 14 திருக்கோலங்கள் வரையப்பட்டுள்ளன. 

இங்கு உள்ள அர்த்த மண்டபத்துக்கு வெளியே, கோவில் நுழைவாயிலை ஒட்டியுள்ள முகமண்டபம் எனப்படும் நாட்டிய மண்டபத்திலும் பல்வேறு சுவரோவியங்களில் சிவனின் திருக்கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. சுவரோவியங்களில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள் அழகுற தீட்டப்பட்டுள்ளன. சுமார் 500 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தச் சுவரோவியங்கள் காண்போரை ரசிக்கவும், பிரமிக்கவும் வைக்கின்றன. இந்த நாட்டிய மண்டபத்தின் விதானம் எனப்படும் மேற்கூரையை, இங்கே அமைக்கப்பட்டுள்ள ஏராளமான தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன. அதேநேரத்தில், இங்கே ஒரு மூலையில் அமைந்துள்ள ஒரு தூண் மட்டும், தரையைத் தொடாமல் தொங்கும் வகையில் காணப்படுகிறது. 

இந்தத் தூண் ஏன் இப்படி தரையைத் தொடாமல் அந்தரத்தில் உள்ளது என்பது குறித்து ஆச்சரியப்பட்ட, கலையார்வம் கொண்ட பிரிட்டிஷ் பொறியாளரான ஹாமில்டன் என்பவர்,  கடந்த 1910-ஆம் ஆண்டில் இந்தத் தூணைத் தரையில் பதியவைக்கும் முயற்சியில் இறங்கினார். கடின முயற்சிக்குப் பின்னர், இந்தத் தூணின் நாற்புறத்தில் ஒரு முனை மட்டும் லேசாகத் தரையைத் தொட்டது. ஆனால் இதன் பக்கவிளைவாக முகமண்டபத்தின் மேற்கூரையில் கடும் விரிசல் ஏற்பட்டதுடன்,

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

இங்குள்ள மற்ற தூண்களும் சற்றே சாயத் தொடங்கின. அத்துடன் மேற்கூரையில் வரையப்பட்டிருந்த சித்திரங்களும் சேதமடைந்தன. உடனடியாக, தொங்கும் தூணை கீழே தொடவைக்கும் முயற்சியைக் கைவிட்ட அந்த ஆங்கிலேயப் பொறியாளர், மேற்கொண்டு ஆய்வு செய்தபோது, அந்த தொங்கும் தூண், முகமண்டப மேற்கூரையின் பாதிப் பகுதியைத் தாங்கிப் பிடித்திருப்பதை உணர்ந்துகொண்டார். 

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

அதனைக் கீழே இறக்க சிறிய முயற்சி செய்தால்கூட, சமநிலை பாதிக்கப்பட்டு, அந்த மண்டபமே உடைந்து விழ நேரிடும் என்பதைப் புரிந்துகொண்டார். மண்டபத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கு தொங்கும் தூணை வடிவமைத்த இந்தியர்களின் மதிநுட்பம் அப்போது மட்டுமல்ல, இப்போதும் வியப்பை ஏற்படுத்துவதுடன், இதுபோல் வடிவமைப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிவது எப்படி என்ற வினாவையும் எழுப்பியுள்ளது. கோவில் உட்பிரகாரத்தின் கிழக்குப் புறத்தில் ஏழு தலை நாகம் குடைபிடித்திருக்க அதன் நடுவே லிங்க ரூபத்தில் சிவன் காட்சி தருகிறார். இந்த பிரம்மாண்ட சிலை, மிகப் பெரிய ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. 

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

அத்துடன் கோவிலில் இருந்து சுமார் 600 அடி தொலைவில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட நந்தி சிலையும் கம்பீரமாக காட்சி தருகிறது. 20 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட இந்த பிரம்மாண்ட நந்தி சிலை, உலகிலேயே மிகப் பெரிய நந்தி சிலையாகும். கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ராட்சத காலடி ஒன்றும் காணப்படுகிறது. ராமாயணத்தின் அடிப்படையிலான ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது. ராமர் ஜடாயுவை எழுந்திரு பறவையே அதாவது லே பக்ஷி என்று அழைத்ததால் இந்த இடத்துக்கு லேபக்ஷி என்று பெயர் வந்த்தாக கூறுகிறார்கள்.

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

அத்துடன் இந்தக் கோவில் குறித்த மற்றொரு ஆச்சர்யகரமான தகவல், துயரம் கலந்த ஒன்றாகும். விஜயநகரப் பேரரசின் வரி வசூலிப்பு அதிகாரியான விரூபண்ணன், அரசரிடம் உரிய அனுமதி பெறாமல் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கொண்டு வீரபத்திரர் ஆலயத்தை எழுப்பியதாக எழுந்த புகாரால், விரூபண்ணனின் கண்களைப் பறிக்க அரசர் ஆணையிட்டுள்ளார். 

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

இதுகுறித்த அறிந்த விரூபண்ணன், தனது கண்களைத் தாமே பிடுங்கி, இக்கோவிலின் மேற்குப்புறச் சுவரில் வீசியுள்ளார். இந்தச் சுவரில் இரண்டு சிவப்புப் புள்ளிகளை இப்போதும் காணலாம். இதனை ஆய்வு செய்து பார்த்த பிரிட்டீஷார், இது மனித ரத்தம்போல்தான் உள்ளது என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். 

தரையைத் தொடாமல் இருக்கும் தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா ?

கோவிலைக் கட்டிய விரூபண்ணன் – வீரண்ணன் சகோதரர்களின் முழு உருவச் சித்திரம், சுவரோவியமாக கோவில் கருவறையில் வரையப்பட்டுள்ளது. தொங்கும் தூண், மாபெரும் நந்தி சிலை, மிகப் பெரிய சுவரோவியம், ஒற்றைக்கல் ஏழு தலை நாகச் சிலை, பிரும்மாண்ட காலடித் தடம், சுவரில் ரத்தப் புள்ளிகள் என பல்வேறு மர்மங்களுடன் காட்சி தரும் லேபக்ஷி ஆலயம், தவறாமல் தரிசிக்க வேண்டிய ஆலயம் என்பதைச் சொல்லவா வேண்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP