கதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா? 

மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள. சனி சிங்க்னாபூர் என்ற கிராமத்தில் வீடுகள் உள்ளிட்ட எந்தக் கட்டடங்களுக்குமே கதவுகள் கிடையாது. வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், நுழைவாயில் நிலை இருக்குமே தவிர, கதவு என்பது இல்லவே இல்லை. ஏனெனில் இங்கு திருட்டு, கொள்ளை போன்ற பயம் கிடையாது.
 | 

கதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா? 

மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள. சனி சிங்க்னாபூர் என்ற கிராமத்தில் வீடுகள் உள்ளிட்ட எந்தக் கட்டடங்களுக்குமே கதவுகள் கிடையாது. வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடம் உள்ளிட்ட
அனைத்து கட்டடங்களிலும், நுழைவாயில் நிலை இருக்குமே தவிர, கதவு என்பது இல்லவே இல்லை. ஏனெனில் இங்கு திருட்டு, கொள்ளை போன்ற பயம் கிடையாது. 

இதே போன்று அந்த காலத்தில் ராமபிரான் ஆட்சி புரிந்த அயோத்தியில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் இருக்காது, ஏனெனில் அப்போது திருடர் பயமே கிடையாது என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கும். ஆனால் இதே போன்று இப்போதும் ஒரு கிராமம் உள்ளது என்பது ஆச்சரியமாகதான் உள்ளது. சரி இதற்குக் காரணம் என்ன என்பதை பார்ப்போம். 

கதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா? 

இக்கிராமத்தில் குடிகொண்டுள்ள சனி பகவான் மீதான பயம், மரியாதை. நவக்கிரகங்களில் தனிச் செல்வாக்கு பெற்றுத் திகழும் தேவதை சனி பகவான். சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல்
கெடுப்பாரும் இல்லை என்று ஜோதிடம் அறிந்தவர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகுதியான நற்பயனையும், தீயபயனையும் நமது கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தருகின்ற கடவுளாக சனி பகவான்
பார்க்கப்படுகிறார். 

அதனால் மற்ற நவக்கிரகங்களுக்கு இல்லாத வகையில் ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்று இவர் அழைக்கப்படுவதும் உண்டு. அதேநேரத்தில் சனைச்சரன் என்பதே சரியான சொல் என்றும், அறிஞர்கள்
கூறுகின்றனர். இந்தச் சனி பகவானுக்கு பல்வேறு ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் தனி இடம் இருக்கும்.
திருநள்ளாறு போன்ற ஆலயங்களில், சனி பகவானுக்கு சிறப்பு தனிச் சன்னதி உண்டு. ஆனால், சனி பகவானுக்கென தனிக் கோவில், இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு இடங்களிலுமே சனி பகவான் சுயம்புவாகத்
தோன்றியதாக ஐதீகம். 

இதில் ஒரு கோவில், தமிழகத்தின் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ளது. மற்றொரு தனிக் கோவில்தான் மகாராஷ்டிர மாநிலம் சனி சிங்க்னாபூரில் உள்ளது. சிங்க்னாபூர், சோனாய் என்றும் அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் உள்ள சனி பகவான் ஆலயம் அலாதியானது. 
இங்கு காட்சி தரும் வித்தியாசமான கருப்பு நிறக் கல் வடிவிலான சனி பகவான், பூமியில் இருந்து சுயம்புவாக வெளிக் கிளம்பியதாக கூறப்படுகிறது. 

கதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா? 

கனவில் வரும் சனி தெய்வம்:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே செவி வழி கதை ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்னர் பக்தர் ஒருவரின் கனவில் வந்த சனி தெய்வம் இந்த கிராமம் எனது கிராமம் என்றும் இதற்கு
நானே காவல்காரன் என்றும் கூறியுள்ளார். 

அதற்காக நீங்கள் திருட்டு பயம் கொள்ள வேண்டாம். நம்பிக்கை இல்லை என்றால் எந்த வீடுகளுக்கும் கதவே
இல்லாமல் உருவாக்குங்கள். நானே காவல்காக்கிறேன் என்று சபதமெடுத்தார்
எனவும் பக்தர்கள் கூறுகிறார்கள். 
 கதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா? 

அதேநேரத்தில் தனது கோவிலுக்கு மேற்கூரை எதையும் அமைக்க வேண்டாம் என்றும், வானமே கூரை என்றும்
சனி பகவான் கூறினாராம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக, இக் கிராமத்து மக்கள் தங்களது வீடுகளுக்கோ, கடைகளுக்கோ கதவு வைப்பதில்லை. அனைத்துக் கட்டடங்களும் திறந்தபடியேதான் இருக்கும். சனி சிங்க்னாப்பூரில் இதுவரையில் எவ்வித திருட்டோ, கொள்ளையோ நடந்ததாக கூறப்படவில்லை.


சனி சிங்க்னாப்பூரில் உள்ள மற்றொரு சிறப்பம்சம், கரும்புச்சாறு. மற்ற இடங்களைப்போல கைகளால் இயந்திரத்தைச் சுற்றியோ அல்லது மின் மோட்டார் இயந்திரத்தைக்கொண்டோ இங்கு கரும்புச் சாறு தயாரிப்பார்கள். 
ஆனால் அதற்க்கு மாறாக, மாடுகளைக் கொண்டு செக்கில் கரும்புகளைப் போட்டு ஆட்டி, கரும்புச்சாறு
பிழியப்படுகிறது. ரஸவந்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகைகரும்புச்சாற்றுக்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரசிகர்களாக உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP