சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ

தாங்கள் பயிற்சி பெற்ற போது கற்றவற்றை வாழ்க்கையில் சோதித்து பார்க்கும் நிலை வரலாம் என்று சிபிஐ அதிகாரிகள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
 | 

சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ

தாங்கள் பயிற்சி பெற்ற போது கற்றவற்றை வாழ்க்கையில் சோதித்து பார்க்கும் நிலை வரலாம் என்று சிபிஐ அதிகாரிகள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். நிதி அமைச்சர் சிதம்பரமும், போலீஸ் பாதுகாப்பு கூட  இல்லாது தான் இருந்தார்.  திருடர்களுக்கு பயந்து கொண்டு சுற்றுசுவரை உயரமாக கட்டி கண்ணாடி துண்டுகளை பதித்து இருக்கலாம். அவ்வாறு செய்யாதது அவருக்கே வினையாகிவிட்டது.

உண்மையில் அமலாக்கத்துறையினர் விவிஐபியை கைது செய்யச் செல்லும் போது என்ன நடக்கும் என்று யோசித்து தான், நடவடிக்க எடுக்க உத்தேசித்து இருப்பார்கள். தமிழகம் அவர்களுக்கு 2 பாடங்களை கற்றுக் கொடுத்து இருக்கும். வாசல் கதவை தட்டியவுடன் வாட்ஜ்மேன் கதவைத் திறப்பார். உள்ளே சென்று சம்பந்தப்பட்ட விஐபியிடம் உங்களை கைது செய்கிறேன் என்று சொன்னால் போதும் அவர் சாமி குடும்பிட்டு வர, தயாராகி விடேன் என்று காரணம் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து விடுவார் என்பது ஒரு பாடம்.

மற்றொன்று கொல்றானே , கொல்றானே என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால் சிதம்பரம் கைதின்போது, பிக்பாக்கெட், வழிப்பறித் திருடன், ரவுடி, கொள்ளைக்காரன் ஆகியோர் கற்றுக் கொடுத்த பாடங்களை எல்லாம் சிபிஐ அதிகாரிகள் கடைசி நேரத்தில் சாய்சில் விட்டு இருப்பார்கள். கைது செய்யப் போவது முன்னாள் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், அவை எல்லாம் மீறி புறமுதுகு காட்டி ஓடாமல் எதிரிகளின் வாளுக்கு நெஞ்சை காட்டி நிற்கும் தமிழர் என்பதுதான் அவர்கள் சாய்சில் விட முடிவு செய்ததற்கு காரணம்.

ஆனால் அது தான் அவர்களை வேதனைபடுத்தியது. வீட்டின் சுவர் ஏறிக் குதித்து பசியை கைது செய்ய வேண்டிய கேவலம் சிபிஐ முதல், இரண்டாம் கட்ட அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. வக்கீல், வக்கீலின் கணவர், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் இந்த வழக்கை எப்படி கையாண்டு இருக்க வேண்டும் என்று நன்றாக உணர்ந்து தான் இருந்திருப்பார்.  அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது அமித்ஷா, மோடியை நடத்திய விதம் போன்றவை மட்டுமே, தான் கைதானால் என்னவாகும் என்பது குறித்து அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும். அதன் காரணமாகத்தான் தனது கௌரவத்தை இழந்தால் கூட பரவாயில்லை என்று வாசல் கேட்டை அடைத்துவிட்டு பூட்டிய வீட்டிற்குள் பதுங்கி இருந்து இருப்பார்.

குஜராத் முதல்வராக மோடி இருந்த 2002 –2006ம் ஆண்டு வரை 22 பேர்  அந்த மாநில போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசுக்கு கௌரவம் சேர்க்க இந்த என்கவுன்டர் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது ( நாட்டில் நடக்கும் பெரும்பாலான என்கவுன்டர் போலிதான் என்பது செத்தவனுக்கு மட்டும் தெரிந்த உண்மை; செத்தவன் மீது மக்களுக்கு மரியாதை இருந்தால் அது போலி, பயம் இருந்தால் காவல்துறையினர் கடமை வீரர்கள் என்று பேசுவது மற்றவர்கள் கடமை) 

இந்த வழக்கில் சரியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிபிஐ மூலம் கைது செய்ய வைத்தார். 3 மாதம் ஜாமீன் வழங்காமல் சிறை வாசம். ஜாமீ்ன் கிடைத்த பின்னரும் குஜராத் மாநிலத்தில் நுழைய முடியாது. இதைத் தொடர்ந்து அவர் மும்மையில் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார். குஜராத் கோர்ட்டில் வழக்கு நடந்தால் நீதி கிடைக்காது என்று வழக்கும் மும்பைக்கும் மாற்றப்பட்டது. அந்த கோர்ட் அமித்ஷாவை நிரபராதி என்று விடுவித்த பின்னர் தான் அவர் குஜராத்தில் கால் வைத்தார்.

கோத்ரா ரயில் குண்டு வெடிப்பு, அது தொடர்பாக எழுந்த கலவர வழக்கை மோடி சந்தித்ததும் இதே முறையில் தான் 24 மணி நேரம் தனி அறையில் வைத்து சிபிஐ அவரை துளைத்து எடுத்தது. இந்நிலையில், பாஜகவிற்கு எதிராக பெரும்பாலும் கோர்ட்டுகள் செயல்படுவதும் வேதனைக்குறிய செயல்.

இதே போல ரயில் விபத்து காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்த லால்பகதுார் சாஸ்திரி, ஜெயின் வர்த்தகரிடம் நிதி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டவுடன் தன் பதவியை ராஜினாமா செய்த அத்வானி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, ஓம் பிரகாஷ் சவுதாலா சக்காரியா ஊழல் விசாரணை தொடங்கி பல வழக்குகளை சந்திந்த கருணாநிதி என எந்த தலைவரும் சிதம்பரத்தை போல ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. புலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன சூராதி சூரனைப் போல சிதம்பரம் ஓடி ஒளியவில்லை, சட்டத்தின் பாதுகாப்பை தேடினேன் என்கிறார். சட்டம் ஒரு இருட்டறை என்றதும் அதன் உள்ளே சென்று கீழே, மேலே ஏதாவது தட்டுப்படுகிறதா என்று தடவிப் பார்த்து இருப்பார் போலும்.

சட்ட ஞானம், உள்துறையில் பெற்ற அனுபவம் எல்லாம் இந்த வழக்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தைரியத்தை சிதம்பரத்துக்கு தந்து இருக்கும். ஆனால் அவர் ஓடி ஒளிகிறார் என்றால் எதுவுமே இதில் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்கு புரிந்து இருந்துள்ளது எனவேதான் சென்று கொண்டிருந்த காரிலிருந்து நடுவழியில் இறங்கியது மட்டுமல்லாமல், தான் எங்கு செல்கிறேன் என்று கூட கூறாமல் நடு வழியில் இறங்கி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை.

சிபிஐ ஆண் அதிகாரிகள், பெண் அதிகாரிகள் கொஞ்சகாலம் சுவர் ஏறி குதிக்க மேலும் தீவிரமாக பயிற்சி பெறுவது நல்லது. இன்னும் பல வழக்குகள் சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், சாரதா சிட் பண்ட் வழக்கில் நளினி சிதம்பரம் என்று அடுத்தடுத்து சிக்கலாம். அப்போதும் இது போல சுவர் ஏறி குதிக்க வேண்டியிருக்கலாம். அதற்கு பயிற்சி எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயம் கூறிவிடவும். இல்லாவிட்டால் நீங்கள் பயிற்சி பெறுகிறீர்கள் என்று தெரியாமல் பென்டெடுத்துவிடுவார்கள் ஜாக்கிரதை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP