அறம், பொருள், இன்பம், வீடு --- சனாதன தர்மத்தின் நான்கு தூண்கள் : எழுத்தாளர் குரு சரண் தாஸ்!!!

சனாதன தர்மத்தின் நான்கு தூண்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதன் தாத்பர்யத்தை அரிய முயன்ற எழுத்தாளர் குரு சரன் தாஸுடன், பத்திரிகையாளர் அக்ரித்தா ரேயார் மேற்கொண்ட ஓர் உரையாடல்
 | 

அறம், பொருள், இன்பம், வீடு --- சனாதன தர்மத்தின் நான்கு தூண்கள் : எழுத்தாளர் குரு சரண் தாஸ்!!!

ஹிந்து கலாசார மரபாக, தமிழில் திருவள்ளுவர் கூறியுள்ள அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய நான்கும் தான் தர்ம, அர்த்த, காம, மற்றும் மோக்ஷா என்று சனாதன தர்மத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகிறது.

முதலில், சனாதன தர்மம் என்றால் என்ன ?? "சனாதனம்" என்பதற்கு நிலைத்திருப்பது அல்லது அழியாது இருப்பது என்று பொருள். "தர்மம்" என்பது அனைத்திற்கும் அடையாளம் ஆக கருதப்படுவது. ஆக, "சனாதன தர்மம்" எனப்படுவது, என்றுமே நிலைத்திருந்து அனைத்திற்கும் ஆதாரமாக திகழ்வது. குறிப்பாக சொல்வதென்றால் "அழியாத தர்மம்" என்று கூறலாம்.

இதில், தர்மம் என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை உலகின் வேறு எந்த மொழியிலும் கிடையாது. பலபேரின் முயற்சியால், அந்த வார்த்தையின் தாத்பர்யம் சற்று கீழே இறக்கி மொழி பெயர்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இதன் நான்கு தூண்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதன் தாத்பர்யத்தை அரிய முயன்ற எழுத்தாளர் குரு சரன் தாஸுடன், பத்திரிகையாளர் அக்ரித்தா ரேயார் மேற்கொண்ட ஓர் உரையாடல் : 

1. தர்மா என்பது என்ன,உண்மையில் நல்லவராக வாழ்வதற்கும், பிறர் மத்தியில் நல்லவராக நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் ??

தர்மம் என்பது அனைத்திற்கும் அடையாளமாகவும் ஆதாரமாகவும் கருதப்படுவது. கடல் அலையில் சிக்கிய ஓர் குழந்தையை, இளைஞர் ஒருவர் காப்பாற்றினார் என்பது போன்ற பல செய்திகளை நாம் தினமும் செய்திதாள்களில் காண்கிறோம். அப்படி ஒரு சூழலில், அந்த இளைஞரை சந்தித்த ஓர் பத்திரிக்கையாளர் எதற்காக நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து அந்த குழந்தையை காப்பாற்றினீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த அந்த இளைஞர், நான் நேசிக்கும் பெண்ணை கவர்வதற்காகவே அந்த குழந்தையை காப்பாற்றினேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இந்நேரத்தில், எது எப்படியோ, அந்த குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்று அந்த இளைஞரை பாராட்டுவதா இல்லை தன் காதலியை கவர்வதற்காக தானே செய்தார் என்று அவரை குறை கூறுவதா? இதில் எது சரி எந்று உங்களால் கூறி இயலுமா? இது போல தான் தர்மாவும் ; புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. எந்த காரணத்திற்காக அவர் காப்பாற்றியிருந்தாலும், குழந்தை உயிருடன் நன்றாக இருக்கிறது என்பது தானே இங்கே முக்கியம். இதுவே யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையை அவர் காப்பாற்றி இருந்தால் நாம் அவரை பாராட்டியிருப்போம்.

2. நமக்காக வாழ்வது அல்லது பிறருக்காக வாழ்வது, இவை இரண்டையும் குறித்த தங்களின் பார்வை.

நாம் நமக்காக மட்டும் வாழ நினைத்தால், நம்மை சேர்ந்தவர்களை அது நிச்சயமாக பாதிக்கும். பிறருக்காக வாழ்வதென்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதற்கு மனம் நிறைந்த பொது நலச் சிந்தனை வேண்டும். உதாரணமாக, தனது கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் போய் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கணவனிற்கு வேறொரு பெண்ணின் மீது ஆசை ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றும் அந்த பெண்ணின் மீதிருந்த தனது எண்ணத்தை அவரால் நீக்க முடியவில்லை. இந்நிலையில், அவர் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்ற அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டால், அவரை சுற்றியுள்ள அனைவரையும் அது பாதிக்கும். இல்லை பிறருக்காக தனது ஆசையை கட்டுப்படுத்தி கொண்டு வாழ்ந்தால், காலம் முழுவதும் இதை நினைத்து நினைத்து அவர் தன்னை நொந்து கொள்ள நேரிடும். சரி, இதற்கான தீர்வு தான் என்ன? இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் எளிதல்ல. நமக்காக வாழ்வது அல்லது பிறருக்காக வாழ்வது இந்த இரண்டு சிந்தனைகளுக்கும் எப்போதுமே மோதல் நிலவிக் கொண்டு தான் இருக்கும். சூழ்நிலைக்கு மட்டுமே அதற்கு தீர்வு காணும் சக்தி உள்ளது.

3. அர்த்தா குறித்த உங்களது புத்தகத்தில், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம் குறித்த தங்களின் கருத்து என்ன?எனது புத்தகமான "இந்தியா அன்பௌன்ட்", வறுமையில் வாடும் நாடு எவ்வாறு முன்னேற்றமடைந்தது என்பது குறித்தது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை சிறிது சரிவை கண்டிருந்தாலும், நமது சிறப்பாந திட்டங்கல் மூலம், வரும் காலத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேறுவதற்றம் காண்போம் என்பதில் எந்த சந்தேசமும் இல்லை.

4. "மோக்ஷா" குறித்த புத்தகத்திற்கான உத்வேகம் உங்கள் தந்தையிடம் இருந்து வந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தற்போது எந்த நிலையில் உள்ளது?

"மோக்ஷா" என்பதை மதசார்புடைய ஒன்றாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. எனது பார்லையில், எப்போது ஒருவரின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்குகிறதோ அது தான் அவர்களுக்கான மோக்ஷம்.

எனது வாசகர்கள் என்னிடம் பல முறை கேட்கும் கேள்வி, கார்ப்பரேட் எக்ஸிகியூட்டிவாக பணியாற்றிய நான் எப்படி எழுத்தாளராக மாறினேன் என்பது. அதையும் இந்த புத்தகத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளேன். 

நன்றி : டைம்ஸ் நௌ பத்திரிகையின் "மைன்ட் அண்ட் சோல்".

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP