Logo

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: தவறு செய்யத் தயங்காத குடிமக்கள்!!!

ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது அடித்தட்டில் இருக்கும் மக்களை மேல் ஏற்றுவதும், கடந்த பல ஆண்டுகளாக சலுகை பெற்றவர்களை அதில் இருந்து நீக்குவதும் தான். அந்த இலக்கை அது சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
 | 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: தவறு செய்யத் தயங்காத குடிமக்கள்!!!

சமுதாயத்தின் ரத்த நாளங்களாக விளங்குவது ஜாதிகள் தான். அதில் தவறில்லை ஆனால், அவற்றில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்துவது தவறு. எனினும், ஜாதியே தவறு, அதை ஒழிப்போம் என்று பலரும் குரல் எழுப்புகின்றனர். அவர்கள் எண்ணுவதுபோல அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இந்துக்களில் கீழ்ஜாதி என்று எண்ணியிருந்தவர்களை உயர்த்த ஜாதிரீதியான இடஒதுக்கீட்டால் தான் முடிந்தது. இதனால் தான் குறிப்பிட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளோ, தாங்கள் ஓட்டு பெறுவதற்காக, இடஒதுக்கீட்டிற்குள் பல்வேறு ஜாதிகளை இணைத்து, உண்மையில் சலுகை பெற வேண்டியவர்களை நீர்த்துப் போகத் செய்து விட்டனர்.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர் பற்றிய செவி வழி கதை ஒன்று கடந்த சில காலங்களில் உலா வந்து கொண்டிருந்தது. ஜாதி சங்கங்கள் தங்கள் இனத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சலுகை கோரின. அதற்கு எம்.ஜி.ஆர் ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வர கூறினார். அதற்காக ஜாதி சங்கங்கள் ஒரு கணக்கை எடுத்து வந்தன. அதன் எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையைவிட இரு மடங்காக இருந்தது. இதை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் தமிழக மக்கள் தொகை இவ்வளவு தான், இந்த கணக்கெடுப்பின்படி வெளியாட்கள் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள். அவர்களை வெளியேற்றி வாருங்கள், பின்னர் சலுகை குறித்து முடிவு செய்யலாம் என்று இந்த பிரச்னையை ஓர் முடிவுக்கு  கொண்டு வந்தார்.

அதே போல தான் ஜாதி வாரி கணக்கெடுப்புகளில் நடக்கும். இந்தியாவில் 1931ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுந்திர இந்தியாவில் 10 ஆண்டுளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி பற்றிய குறிப்புகள் அதில் ஒருபோதும் இடம் பெற்றதில்லை. கடைசியாக 2011ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பு தான் எதிர்கட்சிகள் வற்புறுத்தலின் பேரில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் கூட ஜாதிவாரி கணக்கெடுப்பாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடக்கும் என்பதால், அதை தவறான கணக்கெடுப்பாக மாற்றும் முயற்சிகள் தற்போதே தொடங்கி விட்டன.

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் ஒரு படம் பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்ட கிறிஸ்தவ வெள்ளார் சங்கத் தலைவர் ஜோஸப் பெயரில் உள்ள அந்த படத்தில், கிறிஸ்தவ வெள்ளாளர் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள், ஜாதி வாரி கணக்கெடுப்பில் வெள்ளாளன் செட்டியார் என்று மட்டும் பதிவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியே வந்தது இது மட்டும் தான். ஆனால் கிறிஸ்தவத்தில் இன்று இந்துகள் மத்தியில் உள்ள அனைத்து ஜாதிகளும் உள்ளன. இவர்களும் தங்கள் ஜாதியை மட்டும் கணக்கெடுப்பில் கூறலாம். இந்த சூழ்நிலையில் உண்மையில் சலுகை பெற வேண்டிய மக்கள் அதை இழக்கவோ, அதில் குறைவுபடவோ நேரிடலாம். இதன் மூலம் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஜாதியினர் கூடுதல் சலுகை பெற முடியும். இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் சலுகையை இழக்க நேரிடும்.

இது போன்ற மோசடியை அரசாங்கம் கண்டு களைய வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு எளிய தீர்வாக கிறிஸ்தவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில் தான் சலுகைகள் கொடுக்கப்படும் என்றும் இப்போது அதிகம் சலுகை பெறும் துறைகளில் அவை குறைக்கப்படும் என்று அறிவித்தால் சர்ச்சுகள் தங்கள் பங்கு குறித்த உண்மையான தகவல்களை சொல்ல முன்வரக்கூடும்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது அடித்தட்டில் இருக்கும் மக்களை மேல் ஏற்றுவதும், கடந்த பல ஆண்டுகளாக சலுகை பெற்றவர்களை அதில் இருந்து நீக்குவதும் தான். அந்த இலக்கை அது சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

Newstm.in

 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP