பட்டாசு சுட்டு சுட்டு போடலாமா மைலாட்?

இதில் பசுமை பட்டாசு என்று ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது பெரும்பாலான நிறுவனங்களுக்கு என்ன வென்றே தெரியாது. மத்திய அமைச்சர் தற்போது தான் அதை அறிமுகம் செய்து இருக்கிறார். வரும் ஆண்டுகளில் அதனை தயாரிக்க முடியும். ஆனால் அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று லாட் கட்டாயப்படுத்துவார்கள்.காரணம் அவர்கள் லாட் அல்லவா?
 | 

பட்டாசு சுட்டு சுட்டு போடலாமா மைலாட்?

உள்ளூர் தொழில்கள் என்ன விதமான விதிகளை கடைபிடித்தாலும்; கடை பிடிக்காவிட்டாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதே, தொழில் வளர்ச்சியடைந்து சர்வதேச தொழிலாக உயரும் போது அதை முடக்க சர்வதேச போட்டியாளர்கள் எல்லா தகிடுதத்தங்களையும் செய்வார்கள். 

அது சாமியர்களாக இருந்தாலும் சரி, சால்னா கடை வர்த்தகமாக இருந்தாலும் அது தான் கதி. பகவான் ரஜினிஷ் செக்ஸ் சாமியார் என்பதும், பிரபு பாதா போதை பொருட்கள் கடத்தினார் என்றும் பிரேமானந்தா தானே வளர்த்த பெண்ணை கற்பழித்தார் என்றும் பரப்பபட்ட தகவல்களுக்கு, அவர்கள் சர்வதேச அளவில் தங்கள் கருத்துக்களை பரவிட்டார்கள். அப்பகுதியில் ஆஸ்ரமம் தொடங்கி நடத்தினார்கள் என்பது தான் காரணம்.

இதே போலதான், தொழிலும், குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், போதிய பாதுகாப்பு இல்லை, ஒளி, ஒலி மாசு ஏற்படுகிறது, விலங்குகள் கொல்லப்படுகின்றன. மரங்கள் காலியாகின்ற, பொதுமக்களை நோய்கள் தாக்கும் என்றெல்லாம் சமூக அக்கறையுடன் இருப்பது போல கூக்குரல்கள் எழும். அதற்கு ஏற்ப லாபிகள் உருவாகும். உள்ளூர் தொழில் முடக்கப்பட்ட பின்னர் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை வெளிநாட்டு பொருட்கள் வந்து நிரப்பும்.

கதவு, ஜன்னல் போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மா, வேம்பு, போன்ற உள்நாட்டு மரங்களை தேடிப்பாருங்கள் கிடைக்கவே கிடைக்காது. அந்த இடத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் (பிளைவுட் போன்றவை) நிரப்பும்.

தமிழகத்தில் இது போன்ற மறைமுகத் தாக்குதலால் தள்ளாடி வரும் ஒரு தொழில் பட்டாசு தொழில். நம்மவர்கள் எந்த பண்டிகையாக இருந்தாலும் விதவிதமாக சமைக்க வேண்டும். புதுபுதுசாக ஆடைகள் அணிய வேண்டும் என்று தான் சம்பரதாயம் ஏற்படுத்துவார்கள். இங்கு விவசாயம், நெசவு ஆகியவைகள் தான் பிரதான தொழில். இதை தவிர வேறு சில சம்பரதாயங்களும் இலசவ இணைப்பாக சேரும், பொங்கலுக்கு பானையில் தான் பொங்கல் வைக்க வேண்டும், பிள்ளையார் சதுர்த்திக்கு  களிமண் பிள்ளையார் கட்டாயம் போன்றவை.

அதே போன்று தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்  என்பது இலவச இணைப்பாக ஏற்பட்ட சம்பரதாயம். கல்யாண முருங்கை காய்களை நெருப்பில் இட்டு, அதில் இருந்து பட்டாசு ஓசையை கேட்டு மகிழ்ந்தார்கள் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1960 களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அதற்கு முன்பு கல்கத்தாவில் உற்பத்தியானது. ஒரே ஒரு நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்த தொழில் தற்போது அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டும் 500 உள்ளன. ஆண்டு வர்த்தகம் ரூ.5 பில்லியன் அமெரக்க டாலர்கள். இவர்களுக்கு சர்வதேச போட்டியாளர் சீனா.

இதன் காரணமாகத்தான் குழந்தை தொழிலாளர்கள் பிரச்னை கிளப்பட்டது. அதன் பின்னர் சுற்றுச்சூழல் மாசு பிரச்னை கிளப்பட்டு இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை லாபி செய்யப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 2 மணி நேரம் வெடி வெடிக்கலாம் என்று அனுமதியளித்தது. 

கிறிஸ்மஸ் பண்டிக்கை 40 நிமிஷங்கள் பட்டாசு வெடிக்கலாமாம். இதில் பசுமை பட்டாசு என்று ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது பெரும்பாலான நிறுவனங்களுக்கு என்ன வென்றே தெரியாது. மத்திய அமைச்சர் தற்போது தான் அதை அறிமுகம் செய்து இருக்கிறார். வரும் ஆண்டுகளில் அதனை தயாரிக்க முடியும். ஆனால் அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று லாட் கட்டாயப்படுத்துவார்கள்.காரணம் அவர்கள் லாட் அல்லவா?

சரி இதற்கு இளிச்சவாயர்கள் ஒப்புக் கொண்டால், நாளை தீபாவளிக்கு அதிகாலை இத்தனை மணிக்கு தான் எழுந்து கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தலைதீபாவளி சீர் கேட்டால் அதில் இந்த பிராண்டு வைர மோதிரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் போடுவார்கள். 

எந்த உத்தரவாகினும் கால அவகாசம் கொடுத்தே தீர்ப்பளிக்க மாட்டார்கள். பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தான் இவர்களுக்கு ஜீவகாருண்யம் நினைவுக்குவரும். மாடுகளை பண்டிகைக்காக வெட்டும் போது அது மறந்துவிடும். தீபாவளிக்கு 2 நாள் முன்பு தான் ஒலி, ஒளி மாசு பற்றி கவலைப்படுவார்கள். இவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்பதால் தான் இந்த கூத்து.

தங்கள் நீதிமன்றங்களுக்கு வரும் வழக்காடிகளுக்கு கழிப்பறை வசதி எத்தனை கோர்ட்டுகளில் உள்ளன. எத்தனை ஆண்டுகளாக கோர்ட்டுகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன. பெண் வக்கீல்கள் அந்த மூன்று நாட்களை சிரமம் இல்லாமல் கடக்கும் வகையில் கோர்ட்டுகளில் ஏற்பாடுகள் உள்ளனவா. கோர்ட்டின் அடிமையான பெஞ்ச் கிளார்க் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறாரா? என்று தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்தே உணராத மைலாட்கள், மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்பது பைத்தியக்காரத்தனம். 

ஆனாலும் இப்போதே சொல்லி விடுங்கள் மைலாட் பட்டாசு வெடிக்கலாமா கூடாதா? என்று பணமாவது மிச்சமாகும். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP