குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாட்டு காயலின் கரையில் அமைந்த அழகிய நகரம் தான் குமரகம். குமரகம் எனும் தீவுக்கூட்டம் உலகில் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் இடமாக உள்ளது.
 | 

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாட்டு காயலின் கரையில் அமைந்த அழகிய நகரம் தான் குமரகம். கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாக கருதப்படும் வேம்பநாட் ஏரியில்  உள்ள இந்த  குமரகம்  எனும் தீவுக்கூட்டம்  உலகில் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா  பயணிகள் ஈர்க்கும் இடமாக உள்ளது. இயற்கை காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாக விளங்குகிறது குமரகம். இது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச அளவில் கவனத்தைப்  ஈர்த்துள்ளது. குமரகமில் நீங்கள் நுழைந்ததும், நீங்கள் விந்தைகளின் மெய்யான உலகத்திற்குள் நுழைவீர்கள். சிறிய தீவுத்தொகுதிகளைக்கொண்ட இந்த சிறிய காயல் கிராமம், தனக்கான பிரத்தியே வாழ்க்கை, தனக்கென்ற மெதுவான, அமைதியான இலயத்துடன் கொண்டிருக்கிறது. காட்சிகள், ஒலிகள் மற்றும் நறுமணங்களும் சூழ்ந்து உங்களை கட்டிப்போட்டுவிடும்.

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

பச்சை மரகதம் போல பளிச்சிடும் ஏரிக்கரைகளையும், நிசப்தம் நிரம்பி வழியும் உப்பங்கழி ஓடைகளையும் பெருமையுடன் கொண்டிருக்கும் இந்த குமரகம் தீவுத்திட்டுகளுக்கு பல தரப்பையும் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள்  ஓய்வெடுக்கவும், இயற்க்கையை ரசிக்கவும் வருகின்றனர். குமரகம் பகுதி முழுவதுமே காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்களும், தென்னந்தோப்புகளும் நெல்வயல்களும் நிறைந்து காணப்படும்.  

காயல் அல்லது உப்பங்கழி எனப்படும் நீரோட்ட அமைப்புகளை ஒட்டி அமைந்திருப்பதால் பசுமையான மரங்களுடன் ஆரோக்கியத்துக்கு உகந்த மென்மையான தூய்மையான சூழல் இப்பகுதி முழுவதும் நிரம்பி உள்ளது. இப்பகுதி முழுதுமே பசுமையின் ஜொலிப்பில் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.  பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குமரகம் ஒரு பிரசித்தமான பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது. 

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

அருந்ததி ராயின் என்ற  நாவல் புகழ்பெற்றபின் இந்த கிராமமும் ஒரு புதிய சுற்றுலாத்தலமாக வடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு காணப்படும் படகுவீடுகள் பிரசித்தி பெற்றுள்ளன. படகு வீடுகளில் பயணம் செய்தவாறு உப்பங்கழி நீரோடைகளின் அமைதியையும் கரைகளில் வழியும் இயற்கை எழிலையும் ரசிப்பதற்காக லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.  முழுக்க முழுக்க மரச்சட்டங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த படகுவீடுகள் குளிர்பதனவசதி உள்ளிட்ட எல்லா நவின வசதிகளையும் கொண்டுள்ளன. 

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

உலகில் வேறெங்குமே பார்க்க முடியாத இந்த படகுவீடுகளை நேரில் பார்த்து அனுபவித்தால் மட்டுமே இவற்றின் அற்புத அம்சங்களை புரிந்துகொள்ளமுடியும். குமரகம் சுற்றுலாஸ்தலமானது ஓணம் கொண்டாட்டங்களின்போது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டிகளுக்காகவும் பிரசித்தி பெற்றுள்ளது. குமரகம் சுற்றுலாத்தலமானது பிரபல்யமாக அறியப்படுகின்ற போதிலும் இங்கு இதர முக்கியமான வெளிச்சுற்றுலா அம்சங்களும் ஏராளம் நிரம்பியுள்ளன. வரலாற்று மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட பல சுற்றுலா அம்சங்களை பயணிகள் இப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.  இங்குள்ள கோயில்களும் தேவாலயங்களும் அவற்றின் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் இழக்காமல் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. 

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

குமரகத்தை சுற்று எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் வைக்கம், பாதிராமணல் தீவு, கும்பளங்கி, ஃபோர்ட் கொச்சி, போல்கட்டி தீவு, ஆலப்புழா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

குட்டித்தீவுகளுடன் அழகிய நகரம்...!

இப்படி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இவை சுற்றுலாவுக்கு உகந்த தட்பவெப்பநிலையை கொண்டு விளங்குவதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடமாக குமரகம் உள்ளது. ரம்மியமான தீவுத்திட்டுகள், வித்தியாசமான உணவு ருசிகள், ஏராளமான சுற்றுலா அம்சங்கள், கனவுக்காட்சி போன்ற படகுவீடுகள் மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகள் போன்றவை நிரம்பியுள்ள குமரகம் சுற்றுலாத்தலத்திற்கு ஒரு முறை சென்றுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டீர்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP