ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 1 !!!

ராம்ஜன்ம பூமி வழக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓர் வழக்கு என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்காக பல இந்தியர்களும் அயராது போராடியுள்ளனர். அவர்களுள் மிக முக்கியமான ஒருவர் தான் அஷோக் சிங்கால்.
 | 

ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 1 !!!

ராம்ஜன்ம பூமி வழக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓர் வழக்கு என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்காக பல இந்தியர்களும் அயராது போராடியுள்ளனர். அவர்களுள் மிக முக்கியமான ஒருவர் தான் அஷோக் சிங்கால். 

நான்கு வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் உடல்நிலை குறைவால் தனது தனது 89 வது வயதில் காலமானார் அஷோக் சிங்கால். 

கடந்த 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிறந்தவர் அஷோக். ஓர் வசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்து, உலோகவியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர் தனது மனசாட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பவர். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக 20ஆண்டுகள் பணியாற்றிய இவர் ராம்ஜன்ம இயக்கத்திற்காக அயராது போராடியுள்ளார்.

பனாரஸ் பல்கலைகழக பட்டதாரியான இவர் தனது வாழ்நாளை முழுவதுமாக ஹிந்து மதத்தின் எழுச்சிக்காக மட்டுமே செலவழித்துள்ளார். இவரின் இறப்பு தினமான இன்று, ராம்ஜன்ம பூமிக்காக இவர் மேற்கொண்டிருந்த போராட்டங்களுக்காக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்ததோடு, தற்போது அவ்வழக்கு ஓர் முடிவிற்கு வந்துள்ள நிலையில், அதை காண அவர் இல்லாததை நினைத்து தனது வருத்ததையும் பதிவு செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா.

ராம்ஜன்ம பூமி இயக்கத்திற்கான இவரது பயணம் கடந்த 1984ஆம், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலாளராக இவர் பொறு பேற்ற மூன்று ஆண்டுகளில் தொடங்கியது. ராம்ஜன்ம பூமி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக 1984ஆம் ஆண்டில் தான் வி.ஹெச்.பி தனது முதல் "தர்ம சன்சாத்" ஐ ஏற்பாடு செய்தது. வி.ஹெச்.பியின் இந்த தர்ம சன்சாத்தில் பல ஹிந்துக்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதை தொடர்ந்தே ராம்ஜன்ம பூமி இயக்கத்திற்கான பாதையும் திறந்தது அஷோக் சிங்காலிற்கு.

தொடரும்..............

ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 2 !!!

Newstm.in

 

 

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP