வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி 

வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமை அளிப்பதாக, மாநிலங்களவையின் 250ஆவது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
 | 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், மாநிலங்களவையின் 250ஆவது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். 

இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு குறித்து பேசி வரும் பிரதமர் பேசுகையில், ‘ மாநிலங்களவையின் 250ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள், அவர்களை பாராட்டுகிறேன். மாநிலங்களவை பல வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்வுகளை சந்தித்த பெருமைகளை கொண்டது. 

இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு போற்றத்தக்கது. வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். மாற்றங்களை ஏற்று அதனுடன் பயணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை பிரதிபலிக்கிறது மாநிலங்களவை. டாக்டர் அம்பேத்கர் மாநிலங்களவை வாயிலாகத்தான் நாடாளுமன்றத்திற்கு அறிமுகம் ஆனார்’ என்று பிரதமர் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP