சிவக்குமாரை சந்திக்க திஹார் சிறைக்கு சென்றார் சோனியா!

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்திப்பதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திஹார் சிறைக்கு சென்றார்.
 | 

சிவக்குமாரை சந்திக்க திஹார் சிறைக்கு சென்றார் சோனியா!

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்திப்பதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திஹார் சிறைக்கு சென்றார். 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதான சிவக்குமார் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது கேஃபே காஃபிடே அதிபர் சித்தர்த்தாவுடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான பணபரிவர்த்தனைகளுக்கான ஆதராங்கள் கிடைத்தன. அதை வைத்து சித்தார்த்தாவுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் 200 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. அவர் மீது வருமானவரித்துறையில் வருமானத்துக்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்தது, அமலாகத்துறையின் ஹவாலா வழக்குகள் போன்றன நிலுவையில் உள்ளன.

இத்தகைய குற்றப் பின்னணியில் சிக்கியுள்ள உள்ள சிவக்குமாரை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று திஹார் சிறைக்கு சென்றார். முன்னதாக இரு வாரங்களுக்கு முன்பு சிபிஐ தொடர்ந்த வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சோனியா நேரில் சென்று சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP