வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்!

கடந்த 1984ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தி நாட்டு மக்களை துன்பப்படுத்தி பயத்தில் ஆழ்த்தவில்லை என தலைநகர் டெல்லியில் ராஜீவின் 75ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்!

கடந்த 1984ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தி நாட்டு மக்களை துன்பப்படுத்தி பயத்தில் ஆழ்த்தவில்லை என தலைநகர் டெல்லியில் ராஜீவின் 75ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நேற்று ராஜீவ் காந்தியின் 75ஆம் ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி "கடந்த 1984ஆம் ஆண்டு அப்போது பிரதமராகப் பதவி வகித்த இந்திராகாந்தி அவருடைய பாதுகாவலரான சீக்கியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தி மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியோ, பயத்தை ஏற்படுத்தும் வகையிலோ செயல்படவில்லை என்றும், ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கும் வகையில் ஆட்சி செய்து வருவதாகக் கருத்து கூறியிருந்தார்.

வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்!

இதையடுத்து அகாலிதளக் கட்சியிச் சேர்ந்த மஜிந்தர் சிங் சிர்ஸா சோனியா காந்திக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 1984ஆம் ஆண்டு இந்திரா படுகொலை நடைபெற்றயதையடுத்து தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்காண சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பல்வேறு கொடூரமான முறைகளில் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ், காங்கிரஸ் தலைவர்கள் ஜெகதீஷ் டைட்டலர் மற்றும் கமல்நாத்  தலைமையில் சீக்கிய படுகொலைகளை அரங்கேற்றினார்.

வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்!

எனவே பயத்தை ஏற்படுத்தும்படி ராஜீவ் ஆட்சி நடத்தவில்லை என்று தற்போது சோனியா கூறுவது ஏமாற்று வேலை. தற்போது வெட்கமேயின்றி பொய் சொல்கிறார். இந்திரா படுகொலை செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரும், ராஜீவும் நடந்துகொண்ட விதத்தை சீக்கியர்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. நடைபெற்ற கொலைகளை சோனியா தற்போது நியாயப்படுத்தும் வகையில் பேச வேண்டாம். நாங்கள் எதையும் மறந்துவிடவில்லை. நடைபெற்ற படுகொலைகள் குறித்து புலனாய்வு மேற்கொள்ள பல்வேறு குழுக்கள், கமிஷன்கள் அமைக்கப்பட்ட போதும் கொலைக்குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

விசாரணை கமிஷன்களில் பங்கேற்ற நடைபெற்ற மாபாதங்களை நேரடியாகத் தெரிவிக்க இயலாத வகையில் சீக்கியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாகிய ஜெகதீஷ் டைட்லர் மற்றும் கமல்நாத் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அதில் சிலருக்கு சோனியா தலைமையிலான ஆட்சியின்போது இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகள் கடந்த பின்பும் சீக்கியர்களாகிய எங்களுக்கு நீதி கிடைக்கவேயில்லை. தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவராகிய சோனியா, 1984ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்த காந்தி ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தாமல் ஆட்சி நடத்தினார் என்று கூறுவது அரசியலில் அவருடைய அறியாமையையே காட்டுகிறது என்றும் மஜிந்தர் சிங் சிர்ஸா சுட்டிக்காட்டியுள்ளார்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP