பெயிலில் வந்த சிவகுமார் : நலம் விசாரித்த சித்தராமையா!

சிவகுமார் கைது செய்யப்பட்டது, அந்த காங்கிரஸ் தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், சிவகுமார் - சித்து சந்திப்பு மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
 | 

பெயிலில் வந்த சிவகுமார் : நலம் விசாரித்த சித்தராமையா!

கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து பெயிலில் வெளி வந்துள்ளார். 

பெங்களுருவில் உள்ள அவரது வீட்டிற்கு முக்கிய தலைவர்கள் பலரும் வருகை தந்து அவரிடம் நலம் விசாரித்தனர். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள சிவகுமார், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையே, நிபந்தனை  ஜாமினில் வெளி வந்துள்ள சிவகுமாரை, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிவகுமார் கைது செய்யப்பட்டது, அந்த காங்கிரஸ் தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், சிவகுமார் - சித்து சந்திப்பு மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP