Logo

தானே சுருக்கை இறுக்கிக்கொள்ளும் சிவசேனா, காப்பாற்ற யாரும் வருவார்களா என்ன!!!

மகாராஷ்டிரா மாநிலம் : பேசுவதற்கு என்ன இருக்கிறது ?? தேர்தல் தான். சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து தற்போது முடிவுகளும் வெளிவந்துவிட்டன. பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி பெரிய அளவில் வெற்றியும் பெற்றுவிட்டது. சரி எல்லாம் நன்றாக தானே நடந்திருக்கிறது; இதில் என்ன இருக்கு நாம் பேசுவதற்கு ?? இருக்கிறதே, இனிதானே முக்கிய விவகாரங்களுக்குள்ளே செல்கிறோம்.
 | 

கடந்த 2014ஆம் ஆண்டு வரை தனி தனியே போட்டியிட்ட பாஜக சிவசேனா கட்சிகள், அதற்கு பின்னர் கூட்டணி அமைத்து இந்த ஆண்டின் தேர்தலில் கூட்டணி கட்சிகளாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்னர், அனைத்து கட்சிகளும் மோதி கொண்டன. ஆனால் தேர்தலுக்கு பின்னரோ வெற்றி பெற்றிருக்கும் கூட்டணி கட்சியே மோதலில் ஈடுபட்டுள்ளது.

சரி என்ன தான் பிரச்சனை என்று பார்த்தால், முதலமைச்சர் பதவியில் யார் அமரப்போவது என்ற கேள்வியே தற்போதைய இரு கட்சிகளின் கருத்து வேறுபாட்டிற்கும் காரணம். கடந்த முறை முதலமைச்சராக இருந்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸே இம்முறையும் ஆட்சி அமைக்கட்டும் என்று கூறும் பாஜகவிற்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை ஆட்சியில் அமர்த்தும்படி குரல் எழுப்புகின்றது சிவசேனா.

அது சரி, ஆதித்யாவை முதலமைச்சராக அமர்த்த பாஜக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது ?? வேறு என்ன முன் அனுபவம் தான். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே இந்த ஆண்டு தான் முதன் முறையாக தேர்தல் களத்தை சந்தித்துள்ளார். அரசியலில் ஊறி போன தலைவர்களை பல நேரங்களில் இந்த பாதையில் சறுக்கி விழும் போது, முன் அனுபவம் அற்ற ஒருவரை பெரும் பதவியில் அமர்த்த பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல யாராக இருந்தாலும் தயங்கதான் செய்வார்கள்.

இந்த காரணத்தை பலமுறை சேனா உறுப்பினர்களிடம் பாஜக எடுத்துரைத்தும், அவர்கள் கேட்டபாடில்லை. 2.5ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை பிரித்து கொள்ளலாம் என்று கூறும் சிவசேனா, முதலமைச்சர் நாற்காலியில் ம்யூசிக்கல் சேர் விளையாட பாஜகவிற்கும் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. 

இதில் ஹைலைட் என்னவென்றால், சிவசேனா இல்லையெனில் பாஜக ஆட்சியமைக்க முடியாது என்று சிரிப்பு வரவைக்கும் படியான பல வகை கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்.

இதனிடையில், இது தான் நேரம் என்று எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு எதிராக சிவசேனாவிற்கு கொம்பு சீவி விட தொடங்கிவிட்டது. இவர்களின் இந்த கொம்பு சீவலில் மயங்கிவிடுமா சிவசேனா என்பது தான் மஹாராஷ்டிரா அரசியலில் தற்போதைய ஹாட் டாக்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP