ஆட்சியிலிருந்து பாஜகவை நீக்க சிவசேனா ஓர் தீர்மானம் எடுக்க வேண்டும் - விஜய் வடித்திவார்!!

மகாராஷ்டிரா தேர்தலை தொடர்ந்து, வெற்றி பெற்றிருக்கும் நிலையிலும் பாஜக-சிவசேனா கூட்டணி இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், சிவசேனா ஓர் நிலையான தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் எதிர்கட்சி தலைவரான விஜய் வடித்திவார்.
 | 

"மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க 144 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், 105 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக திகழ்ந்த போதும், சிவசேனாவின் 56 இடங்களில் கிடைத்த வெற்றிதான் பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் வெற்றியடைய செய்தது. இந்நிலையில் அவர்களின் கருத்துக்களுக்கு பாஜக செவி சாய்த்திருக்க வேண்டும்.

மகாராஷ்டிராவை பொறுத்த வரை, விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பாஜகவிற்கு இல்லை என்பது இந்த தேர்தலில் நிரூபனமாகிவிட்டது. இப்போது, என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை சிவசேனா தான் எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்ச்சியடைய செய்ய வேண்டுமெனில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்" என்று பாஜக விற்கு எதிரான தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

இவரது கருத்து இதுவாக உள்ளபோதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியிடமிருந்து இதுவரை எந்த கருத்தும் முன் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP