துணை முதலமைச்சர் பதவியை ஒப்புக்கொள்ள வேண்டும் சிவசேனா - ராம்தாஸ் அதவாலே கருத்து!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கிடையே, முதலமைச்சராக யார் பதவியேற்பது என்கிற கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், துணை முதலமைச்சர் பதவியை ஏற்க சிவசேனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார் மத்திய அமைச்சரான ராம்தாஸ் அதவாலே.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, முதன் முறையாக தேர்தல் களத்தை சந்தித்து வெற்றி கண்டிருக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே பலத்த கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னிலை வகுக்கும் பாரதிய ஜனதா கட்சி, முதலமைச்சர் பதவியில் அமர்வது தான் சரியாக இருக்கும் என்றும், முதலமைச்சருக்கான பதவியை கோராமல் துணை முதலமைச்சர் பதவியில் அமர்வதே சிவசேனாவிற்கு சிறப்பு என்றும் தன் கருத்தை முன் வைத்துள்ளார் மத்திய அமைச்சரும், புரட்சிகர கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதவாலே.

இந்நிலையில், வரும் அக்டோபர் 31 அன்று, முதலமைச்சர் பதவி குறித்து முடிவெடுக்கும் நோக்கத்துடன் இரு கட்சி தலைவர்களும் சந்தித்து உரையாட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP