பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டிருப்பதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக, தற்போது பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுத்துள்ளது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.
 | 

பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டிருப்பதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக, தற்போது பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுத்துள்ளது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சியாலும் பெரும்பாண்மையையும் நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், போட்டியிட்ட கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்த ஓர் தீர்மானத்திற்கு வரும் வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டுள்ளது.

இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, என்.சி.பிக்கும் தங்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி சரி செய்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார்.

இவரை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கவிருப்பதாகவும், அந்த சந்திப்பை தொடர்ந்து சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மூன்று கட்சிகளும் இணைந்து, பொதுவான குறைந்தபட்ச திட்டம் என்ற ஓர் பட்டியலை வெளியிட்டிருப்பதாகவும், அதில் சுமார் 40 திட்டங்கள் குறித்து வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில், தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா என தெரிவித்திருந்த சிவசேனா தற்போது என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து, அதற்கு மறுப்பு தெரிவித்து பின் வாங்கியுள்ளதாகவும், கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருந்த நிலையில், தற்போது இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் சிவசேனா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆட்சியை பிடிப்பதற்காக பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் சித்தாந்தங்களை கூட ஒதுக்கி வைக்க முடிவு செய்திருக்கும் சிவசேனாவின் மனப்பான்மை அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP