சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஹோட்டலில் தங்கவைப்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி இன்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக தனது கட்சியின் எம்.எல்.ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.
 | 

நேற்று இரவு வரை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா மூன்றும் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கவிருப்பதாக முடிவு செய்யப்பட்டு, இன்று ஆளுநரை சந்திக்கவிருந்த நிலையில், இன்று காலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் மாளிகையில் வைத்து முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றனர். என்.சி.பி கட்சி எம்.எல்.ஏக்கள் 54 பேரின் ஆதரவுடன் தான் பெரும்பாண்மை நிரூபிக்கப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மும்பை அந்தேரியில் உள்ள லலித் ஹோட்டலில் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தங்க வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP