ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்.எல்.ஏக்கள்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், தற்போதைய ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சிவசேனா கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றிய அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அவர்களை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள ஹோட்டலில் தங்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 2 வாரங்கள் கடந்த நிலையிலும், பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகளிடையே, ஆட்சி அமைப்பது குறித்த கருத்த வேறுபாடு தொடர்ந்து வருகிறது. முதலமைச்சர் பதவியில் அமர்வதற்காக, பாஜக தரப்பில் தேவேந்திர பட்னாவிஸின் பெயரும், சிவசேனா தரப்பில் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே பெயரும் முன் வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி முடிவடைந்து, புது ஆட்சி அமைக்கப்படுவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான மணி நேரங்களே உள்ள நிலையிவ், இரு கட்சிகளும் அவரவர் நிலைபாடுகளில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், ஆட்சி அமைப்பது குறித்த இன்று தன் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை அவரது வீட்டிற்கு அருகே இருக்கும் ஓர் ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் சிவசேனா கட்சியின் பேச்சாளர் சஞ்சய் ராவுத், இத்தகைய சூழலில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து, கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்திக்கவிருந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான குழு, சிவசேனாவின் சம்மதத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP