தேசியவாத காங், திடீர் பல்டி.... அதிர்ச்சியில் சிவசேனா, காங்கிரஸ்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி திடிரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.
 | 

தேசியவாத காங், திடீர் பல்டி.... அதிர்ச்சியில் சிவசேனா, காங்கிரஸ்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி திடிரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அக்.24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. பாஜக அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில், சிவசேனா கட்சி முதலமைச்சர் பதவியை கேட்க, பாஜக மறுப்பு தெரிவித்து வந்தது. இதையடுத்து சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

இதில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகினால் ஆதரவு அளிப்பதாக கூறியதையடுத்து, பாஜகவுடன் தனது கூட்டணியை சிவசேனா முழுமையாக முறித்துகொண்டது.  இதன் எதிரொலியாக கனரக தொழில்துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். ஆனால், 3 கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

ஒருவழியாக, நேற்றைய தினம் 3 கட்சிகளும் சமரசமாக பேசி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கு முடிவு செய்து இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மேலும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நள்ளிரவு நேரத்திற்குள் மகாராஷ்டிரா  அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியையும் பிடித்துள்ளது. 

பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சரத்பவாரின் மருமகனுமான அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். நேற்றைய தினம் வரை காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி திடீரென பல்டியடித்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை கண்டு, சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

Newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP