என் தாயாரின் சாவுக்கு நீங்களே காரணம்: காங் தலைவர் பிசி சாக்கோவிற்கு ஷீலா தீக்ஷித் மகன் கடிதம்!!

ஷீலா தீக்ஷித் மரணத்துக்கு, காங்கிரஸ் தலைவர் பிசி சாக்கோ ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம் என்று சந்தீப் தீக்ஷித் குற்றம்சாட்டி தனிப்பட்ட முறையில் எழுதியிருந்த கடிதத்தை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட சாக்கோ பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
 | 

இன்னும் மூன்று மாதத்திற்குள் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் உச்சத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் பிசி சாக்கோ ஏற்படுத்திய மன உளைச்சல் தான் காரணம் என அவரது மகன் சந்தீப் தீக்ஷித், சாக்கோவிற்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதை பத்திரிக்கையாளர்களிடம் சாகோ வெளியிட்டுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் வந்த கடிதத்தை, அவர் தனிப்பட்ட முறையில் தான் கையாண்டிருக்க வேண்டும். எனவே அவரை பதவியிலிருந்து விலக்குமாறு, சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த சாக்கோ, "எங்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த சம்மந்தமும் இல்லை. தனது அரசியல் லாபத்திற்காக சந்தீப் தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப முயல்கிறார். அதனால் தான், நான் அந்த கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினேன். இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த கடிதம் குறித்த விசாரணை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏ.கே. ஆண்டனி, சுஷில்குமார் ஷிண்டே மற்றும் மோதிலால் வோரா அகியோரின் தலைமையில் நடைபெறும் என தகவல்கள் கூறியுள்ளன.

ஏற்கனவே, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், சட்டப்பேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதை தொடர்ந்து தற்போது டெல்லி தலைவர்களுக்குள்ளும் பிரச்சனை வெடித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP