நாடாளுமன்றத்தில் இன்று : பிரதமர் மோடி, சரத் பவார் சந்திப்பு!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை, என்.சி.பி தலைவர் சரத் பவார் இன்று சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அவருடனான சந்திப்பை தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சரத் பவார்.
 | 

இன்று நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், .மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் நிலை குறித்து விளக்குவதற்காகவும், அவர்களின் நிலையில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் குறித்தும் உரையாடவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் அக்கட்சியின் பேச்சாளர் நவாப் மாலிக்.

இந்நிலையில், பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து எந்த கருத்தையும் பத்திரிகையாளர்களிடம் முன்வைக்காத தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர், இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இவரது பதிவின்படி, பிரதமர் நரேந்திர மோடிய சந்தித்து இரு கடிதங்கள் சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் ஒன்று மகாராஷ்டிரா மாநில இயற்கை சீற்றங்களை தொடர்ந்து, விவசாயிகளின் நிலையை முன்னேற்றுவது குறித்தான கோரிக்கை கடிதம் என்றும், மற்றொன்று சரத் பவார் தலைமையிலான கரும்பு தொழிற்சாலையில் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கும் கடிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP