என் கருத்தை நீங்கள் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டுமென, பிரதமருக்கு ஷரத் பவார் வருத்தத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நான் "பாகிஸ்தானை விரும்புவதாக கூறுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ள பிரதமர், நான் கூறியதை முழுவதுமாக கேட்டிருக்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார், நரேந்திர மோடிக்கு வருத்ததுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 | 

என் கருத்தை நீங்கள் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டுமென, பிரதமருக்கு  ஷரத் பவார் வருத்தத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நான் "பாகிஸ்தானை விரும்புவதாக கூறுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ள பிரதமர், நான் கூறியதை முழுவதுமாக கேட்டிருக்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார், நரேந்திர மோடிக்கு வருத்ததுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில், கடந்த செப் 19., அன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, "ஷரத் பவார் போன்ற அனுபவம் நிறைந்த தலைவர், பாகிஸ்தானை விரும்புவதாக கூறுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கட்சி சந்திப்பின் போது உரையாற்றிய ஷரத் பவார், பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்,  "பாகிஸ்தான் தலைவர்கள், அரசியல் லாபத்திற்காக, இந்தியாவை குறித்த தவறான விஷயங்களை அந்நாட்டு மக்களிடம் செலுத்த முயற்ச்சிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒரு முறை பாகிஸ்தான் சென்ற போது, இந்தியாவின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த அன்பு என்னை வியக்க வைத்தது. 

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நான் இப்படிப்பட்ட கருத்துக்களை என்றும் கூற மாட்டேன். நான் கூறியது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருந்தது எனக் கூறுவதற்கு முன்னர், நான் கூறியதை முழுவதுமாக முதலில் பிரதமர் கேட்க வேண்டும்" எனக் கூறினார்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி, அது சம்பந்தமாக அவர் பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP