Logo

மாநிலங்களவையில் இருக்கை வரிசை மாற்றம் என்னையும் சிவசேனாவையும் அவமானப்படுத்துகிறது- சஞ்சய் ராவத் துயரம்!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்-ன் இருக்கை வரிசை மாற்றப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த செயல் தன்னையும், தனது கட்சியையும் அவமதிக்கும் விதமாக உள்ளதென்று குற்றம் சுமத்தியுள்ளார்.
 | 

மாநிலங்களவையில் 3-வது வரிசையில் அமரும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்தின் இருக்கை 5-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அவர், சிவசேனாவையும் தன்னையும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே இத்தகைய இருக்கை மாற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியை நேரடியாக குறிப்பிடாத நிலையிலும், இவர் குற்றம் சுமத்துவது அவர்களை தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

இதை தொடர்ந்து தனது கட்சி அமைச்சர்களுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் வரிசைக்குள் இருக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அவைத் தலைவர் வெங்காய்யா நாயுடுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் சஞ்சய் ராவுத். 

மாநிலங்களவையில் இருக்கை வரிசை மாற்றம் என்னையும் சிவசேனாவையும் அவமானப்படுத்துகிறது- சஞ்சய் ராவத் துயரம்!!!

இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்காத நிலையில், பிரதமருடனான அவரது சந்திப்பு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவசேனா தலைவர், 4 முறை முதலமைச்சர் பதிவியில் அமர்ந்து மகாராஷ்டிராவை ஆட்சி செய்தவர் சரத் பவார். அம்மாநில அரசியல் தலைவர்கள் அனைவரை விடவும், விவசாயிகளின் நிலை குறித்து முழுவதும் அறிந்தவர் அவர். 

இந்த காரணத்திற்காக தான் பிரசமரை இன்று சந்தித்திருந்தார் சரத் பவார். அவர் மட்டுமல்லாது எந்த மாநிலத்தில் எந்த பிரச்சனை என்றாலும் அது குறித்த பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP